Word |
English & Tamil Meaning |
---|---|
சிங்கம்புள் | ciṅkam-puḷ, n. <>சிங்கம்3+. The game of tip-cat. See கிட்டிப்புள். Nā. |
சிங்கமடங்கல் | ciṅka-maṭaṅkal, n. <>சிங்கம்1+. Young of lion; சிங்கக்குட்டி. மலைபக விடிக்குஞ் சிங்க மடங்கலை (சீவக. 392). |
சிங்கமடி - த்தல் | ciṅkam-aṭi-, v. intr. <>சிங்கம்3+. To toss up and strike the cat in the game of tip-cat; கிட்டியடித்தல். (J.) |
சிங்கமதாணி | ciṅka-matāṇi, n. <>சிங்கம்1+. Lion-faced ornament for breast, worn by a victorious king; வெற்றிவேந்தன் மார்பிலணியுஞ் சிங்கமுகப் பதக்கம். (சங். அக.) |
சிங்கமுகக்காப்பு | ciṅka-muka-k-kāppu, n. <>id.+. Bracelet with a lion's face on the clasp; சிங்கமுகத்தைக்கொண்ட தோடா. (W.) |
சிங்கமுகப்பல்லக்கு | ciṅka-muka-p-pallakku, n. <>id.+. Palanquin with the face of a lion carved in front; சிங்கமுகவடிவை முகப்பிற் கொண்ட பல்லக்குவகை. (W.) |
சிங்கமுகம்வை - த்தல் | ciṅka-mukam-vai-, v. intr. <>id.+. To put on an angry look; கோபங்கொண்டிருத்தல். Nā. |
சிங்கமுகவோடம் | ciṅka-muka-v-ōṭam, n. <>id.+. Boat with a lion-shaped prow; சிங்கத்தின் உருவை முகப்பிற் கொண்ட தோணி. யானைமுகவோடமும் சிங்கமுகவோடமுமென்னும் இவற்றின் எறி (சிலப்.13, 177, உரை). |
சிங்கமுகாசுரன் | ciṅka-mukācuraṉ, n. <>Simhamukhāsura. Lion-faced Asura slain by Skanda; முருகக்கடவுளால் வதஞ்செய்யப்பெற்றவனும் சிங்கமுகத்தையுடையவனுமாகிய ஓர் அசுரன். (கந்தபு.) |
சிங்கமுகி | ciṅkamuki, n. cf. simha-mukhī. Thorn-apple. See பொன்னூமத்தை. (மலை.) |
சிங்கல் | ciṅkal, n. <>சிங்கு1-. 1. Diminishing, drooping; குறைகை. சிங்கலி லருமறை (கம்பரா. கடிமண. 48). 2. Weakness, exhaustion; |
சிங்கலாட்டம் | ciṅkalāṭṭam, n. See சிக்கலாட்டம். . |
சிங்கவல்லி | ciṅka-valli, n. perh. சிங்கு2-+. Three-lobed nightshade. See தூதுளை. (தைலவ. பாயி. 57.) |
சிங்கவாகனி | ciṅka-vākaṉi, n. <>id.+vāhanī. Durgā, as lion-mounted; [சிங்கத்தை வாகனமாகவுடையவள்] துர்க்கை. சிங்கவாகனி வந்து செந்திருமா தொடிருக்கவே (கலிங். 306, புதுப்.). |
சிங்கவாதனம் | ciṅka-v-ātaṉam, n. <>id.+ ஆதனம். See சிங்காசனம். சிங்கவாதனமும் வைத்து (கம்பரா. கைகேசி. 77). . |
சிங்கவாழை | ciṅka-vāḷai, n. <>Simhala+. A variety of plantain. See சிங்கன்வாழை. (J.) |
சிங்கவிளக்கெரிக்கை | ciṅka-viḷakkerikkai, n. Disgracing a vanquished foe by burning a lamp on his head; பகைவர்தலையிலே சாணத்தையிட்டு விளக்கேற்றி அவமதிக்கை. (ஈடு, 8, 1, 1.) |
சிங்கவேள்குன்றம் | ciṅka-vēḷ-kuṉṟam, n. <>simha.+. A Vaiṣṇava shrine, as the hill of Narasimha. See அகோபிலம். (திவ்.பெரியதி. 1, 7, 1.) |
சிங்களத்தி | ciṅkaḷatti, n. <>சிங்களம். Singalese woman; சிங்களநாட்டவள். |
சிங்களம் | ciṅkaḷam, n. <>Simhala. 1. Ceylon; இலங்கை. (நன். 272, மயிலை.) 2. The Sinhalese language, one of 18 languages referred to in Tamil works; 3. A mode of dancing with gesticulation peculiar to the Singalese; |
சிங்களமருந்து | ciṅkaḷa-maruntu, n. <>id.+. A medicine prepared by singalese physicians, said to be very effective, dist. fr. tamiḻmaruntu; சிங்களமருத்துவர் செய்து தரும் மருந்து வகை. (J.) |
சிங்களர் | ciṅkaḷar, n. <>id. The Singalese or natives of Ceylon; சிங்களத்தீவில் தொன்று தொட்டு வாழ்வோர். சிங்களர் வங்களர் (கலிங். 318). |
சிங்களவன் | ciṅkaḷavaṉ, n. <>id. Man of Simhala country; சிங்களநாட்டான். |
சிங்களன் | ciṅkaḷaṉ, n. See சிங்களவன். (W.) . |
சிங்கன் | ciṅkaṉ, n. prob. simha. [T. siṅgadu.] Man of the fowler tribe; குறவன். (குற்றா. குற.) |
சிங்கன்வாழை | ciṅkaṉ-vāḻai, n. <>சிங்களம்+. A variety of plantain introduced from Ceylon; சிங்களநாட்டிலிருந்து வந்த வாழைவகை. |
சிங்காசனம் | ciṅkācaṉam, n. <>simhāsana. 1. Throne supported by carved lions; சிங்கந்தாங்குவதுபோல் அமைக்கப்பெற்ற தவிசு. சிங்காசனமும் பொங்குபூந் தவிசும் (பெருங், உஞ்சைக். 57, 60). 2. (Yōga.) Yōgic posture. |
சிங்காடி | ciṅkāṭi, n. [K. siṅgādi.] See சிங்காணி. (W.) . |