Word |
English & Tamil Meaning |
---|---|
சிங்கிமாந்தம் | ciṅki-māntam, n. perh. சிங்கி1+. Convulsive fever of children; மாந்தவகை. (சிவரட்.) |
சிங்கியடி - த்தல் | ciṅki-y-aṭi-, v. intr. <>சிங்கி3+. 1. To beat the sides with the elbows and dance; முடக்கிய இருகைகளாலும் விலாப்புறங்கனள அடித்துக் கொண்டு கூத்தாடுதல். 2. To be in straitened circumstances; to suffer from poverty; 3. To behave shamelessly, as a virago; 4. To push marbles with knuckles, in the children's game of marbles; |
சிங்கிரம் | ciṅkiram, n. perh. šrṅgi-ja. Green wax-flower. See குடசப்பாலை. (மலை.) . |
சிங்கிலி | ciṅkili, n. 1. Crab's-eye; See குன்றி, 1 (மலை.) 2. Mysore-thorn. 3. A species of sensitive tree. 4. Extra turn which a person is entitled to in games; |
சிங்கிவேரம் | ciṅkivēram, n. <>šrṅga-bēra. Dried ginger; சுக்கு. (மூ. அ.) |
சிங்கிறால் | ciṅkiṟāl, n. prob. சிங்கி2+இறால். Lobster. See ஈர்க்கிறால். (M. M.) |
சிங்கு 1 - தல் | ciṅku-, 5 v. intr. 1. To diminish, wane, decrease; குன்றுதல். சிங்காவண்புகழ்ச் சிங்கபுரத்து (சிலப். பதி. 47). 2. To faint, fail, droop; 3. To decay, perish; 4. To elapse, pass away, as time; |
சிங்கு 2 - தல் | ciṅku-, 5 v. intr. <>சிக்கு-. To be caught; சிக்கிக்கொள்ளுதல். சிங்கினா ரிரு முதுகுரவ ரென்பவே (சீவக. 2832). |
சிங்குசன்னி | ciṅku-caṉṉi, n. See சிகுவாசன்னி. Nā. . |
சிங்குவம் | ciṅkuvam, n. See சிங்கிவேரம். (W.) . |
சிங்குவை | ciṅkuvai, n. <>jihvā. Tongue; நாக்கு. (சங். அக.) |
சிங்கோனா | ciṅkōṉā, n. <>E. Cinchona, quinine plant; கொயினாச்செடி. |
சிங்ஙு | ciṅṅu, n. See சிங்ஙுவை,1. (சங். அக.) . |
சிங்ஙுவை | ciṅṅuvai, n. <>jihvā. 1. See சிங்குவை. . 2. A principal tubular vessel, one of taca-nāṭi, q. v.; |
சிச்சன் | ciccaṉ, n. <>šiṣya. Disciple; மாணாக்கன். ஆசாரியன் சிச்ச னாருயிரைப் பேணுமவன் (உபதேசரத். 65). |
சிச்சி | cicci, int. See சிச்சி. சிச்சியெனத் தன் மெய்ச்செவி பொத்தி (கம்பரா. மாரீச. 76). |
சிச்சிரம் | cicciram, n. <>tittira. King-fisher. See மீன்கொத்தி. (சங். அக.) |
சிச்சிலி | ciccili, n. <>tittiri. 1. King-fisher. See மீன்கொத்தி. (சீவக. 2499, உரை.) 2. A species of partridge |
சிச்சிலிப்பொறி | ciccili-p-poṟi, n. <>சிச்சிலி+. A destructive machine in the form of a king-fisher, mounted on the walls of a fortress for defence; சிச்சிலி வடிவாகச் செய்து கோட்டைமதிலில் அமைக்கப்படுவதும் பகைவரை அழித்தற்குரியது மான யந்திரவகை. (சிலப்.15, 214, உரை.) |
சிச்சிலுப்பான் | cicciluppāṉ, n. See சிச்சிலுப்பை. (W.) . |
சிச்சிலுப்பை | cicciluppai, n. Chicken-pox or measles; வசூரிவகை. Loc. |
சிச்சீ | ciccī, int. Expr. meaning fie! used in contempt; இகழ்ச்சிக் குறிப்பு. சிச்சீ வயிறு வளர்க்கைக்கு மானமழியாது (நல்வழி.14). |
சிச்சுருடை | ciccuruṭai, n. See சிசுருஷை. தன்மமவர் சிச்சிருடை (உத்தரரா. சம்புவ. 28). |
சிசம் | cicam, n. Carambola tree. See தமரத்தை. (மலை.) |
சிசிரம் | ciciram, n. <>šišira. 1.See சிசிரருது. வெருவிப்போய்ச் சிசிரம் நீங்கி (கம்பரா. மாரீசன். 99). 2. Sandalwood. |
சிசிரருது | cicira-rutu, n. <>id.+. Cool season, the months of Māci and Paṅkuṉi, one of six rutu, q. v.; மாசி பங்குனிமாதங்களாகிய பின் பனிக் காலம். |
சிசினம் | ciciṉam, n. <>šišna. Male generative organ; ஆண்குறி. |
சிசு 1 | cicu, n. <>šišu. Babe, young of animals; குழவி. சிசுக்களி னறிவிலாச் சிந்தை (பாரத. குருகுல. 65). |
சிசு 2 | cicu, n. <>U. sisu <>šimšupā. See சிஞ்சுபம் (L.) . |
சிசுகத்தி | cicukatti, n. <>šišu-hatyā. Infanticide, causing abortion or miscarriage; கருச்சிசுக்களை அழிக்கை. Loc. |
சிசுநாயகம் | cicu-nāyakam, n. <>šišu+. Government by juveniles, used in contempt; சிறுவர் ஆளும் ஆட்சி. (W.) |