Word |
English & Tamil Meaning |
---|---|
அல்லா 2 | allā n. <>அல்லா-. Distress; வருத்தம். அல்லா நெஞ்சமுறப் பூட்ட (பரிபா.6, 99). |
அல்லா 3 | allā n. <>U. Allāh. fr. Arab. Supreme Being worshipped by Musalmans, the most high God; மகமதியர் வழங்குங் கடவுட்பெயர். |
அல்லாசாமி | allā-cāmi n. See அல்லா3. Loc |
அல்லாட்டம் | allāṭṭam n. <>அல்லாடு-. Wandering from place to place; அலைச்சல். Colloq. |
அல்லாடு - தல் | allāṭu- 5 v.intr. <>அல்லல்+ஆடு-. [T.K. allādu.] 1. To wander from place to place; அலைதல். Colloq. 2. To suffer; |
அல்லாத | allāta <>அல்4. adj.; n. Which is not, other than, different from; What are not, are different; மாறான. அல்லாத பரசமய வலகைத்தேர் (சேதுபு.கடவு.13) மாறானவை. சொலற்பாலவல்லாத சொல்லுதலுங் குற்றம் (நான்மணி.28, Ripon Press Ed.). |
அல்லாப்பண்டிகை | allā-p-paṇṭikai n. <>U. Allāh+. The Muhammadan festival Muharram; மொகரம். |
அல்லாப்பு | allāppu n. <>அல்லா-. Distress; வருத்தம். (பரிபா.6,99,உரை.) |
அல்லாமல் | allāmal prep. <>அல்.4. 1. Except, besides; தவிர. 2. Without. |
அல்லாமலும் | allāmalum conj. <>id. Besides, moreover; மேலும். |
அல்லாமை | allāmai n. <>id. Evil disposition; தீக்குணம். தேகத்தில் வாஞ்சை முதலா வல்லாமை யெத்தனை. (தாயு. ஆநந்தமா.1). |
அல்லாரி 1 | allāri n. 1. White water-lily. See வெள்ளாம்பல். (மூ.அ.) 2. Stake in a mud wall to support the coping; |
அல்லாரி 2 | allāri n. [M. allāri.] Thiness, lightness of texture; அடர்த்தியின்மை. Loc. |
அல்லால் | allāl prep. <>அல்4. Except, besides; அல்லாமல். அஞ்சாமை யல்லால் (குறள்,497). |
அல்லி | alli n. <>அல்1. [M. alli.] [T. alli.] 1. Water-lily, Nymphaea lotus; ஆம்பல். (மூ.அ.) 2. White water-lily. See வெள்ளாம்பல். 3. Lotus. See தாமரை. 4. Inner flower petals, opp. to புல்லி; 5. Filament of a stamen; 6. Lily seeds; 7. Iron-wood tree. See காயா. 8. New root, shoot; |
அல்லிக்கேணி | alli-k-kēṇi n. <>அல்லி+. Triplicane; திருவல்லிகேணி. மயிலைமா வல்லிக் கேணியான் (திவ்.இயற்.நான்மு.35). |
அல்லிகம் | allikam n. <>U. alkam. Colocynth. See பேய்க்கொம்மட்டி. (மூ.அ.) |
அல்லித்தண்டு | alli-t-taṇṭu n. <>அல்லி+. Peduncle, lily stem; ஆம்பற்றாள். (சீவக. 2876, உரை.) |
அல்லித்தாமரை | alli-t-tāmarai n. <>id.+. Red water-lily. See செங்கழுநீர். . |
அல்லித்தாள் | alli-t-tāḷ n. <>id.+. (Bot.) 1. Pistil; அகவிதழுறுப்புவகை. (M.M.) 2. See அல்லித்தண்டு. |
அல்லிப்பாவை | alli-p-pāvai n. prob. அலி+ Puppets used to exhibit alliyam dance; அல்லியக்கூத்தில் ஆட்டும் பிரதிமை. (புறநா.33.) |
அல்லிப்பிஞ்சு | alli-p-picu n. <>அல்லி+ Fruit newly from blossom; இளம்பிஞ்சு. (W.) |
அல்லிமாதர் | alli-mātar n. <>id.+. Lakṣmī, seated on a lotus; இலக்குமி. (திவ்.பெரியதி. 1,7,9.) |
அல்லிமூக்கு | alli-mūkku n. cf. சில்லி மூக்கு. Bleeding nose; இரத்தமொழுகும் மூக்கு. Loc. |
அல்லியம் 1 | alliyam n. <>அல்லி. Species of Aponogeton; கொட்டி. (மலை.) |
அல்லியம் 2 | alliyam n. prob. அலி. Krṣṇa's dance when he broke the tusk of the elephant that was set on him by Kamsaṉ, one of 11 kūttu, q.v.; மாயோனாடலு ளொன்று. (சிலப். 6, 48.) |
அல்லியரிசி | alli-y-arici n. <>அல்லி+. Lily seeds; அல்லிப்பூவின் உட்கொட்டையிலுள்ள சிறுவிதை. (சீவக. 2682, உரை.) |
அல்லியன் | alliyaṉ n. prob. அல்4. [M. alliyan.] Stray elephant separated from the fold; தன்குழுவைப் பிரிந்த யானை. (w.) |
அல்லியாமரம் | alliyā-maram n. Long steering oar; படவு வலிக்கும் தண்டு. (W.) |
அல்லியான் | alliyāṉ n. <>அல்லி. Brahmā, the lotus-born; பிரமன். (தேவா.392,9.) |
அல்லிருள் | al-l-iruḷ n. <>அல்1+. Darkness of night, dense darkness; இரவிற் றிணிந்த இருள். அருக்கனேர் நிற்பினு மல்லிருளே காணார்க்கு (சி.போ.சிற்.11,2,1). |
அல்லு - தல் | allu- [T.K. allu.] 5 v.tr.; v.intr. To knit, build, weave; Loc.; To interlace closely; முடைதல். குருவி கூட்டை அல்லுகிறது. பின்னிக்கொள்ளுதல். மரங்கள் அல்லிகொண்டன. Loc. |
அல்லுச்சில்லுப்படு - தல் | allu-c-cillu-p-paṭu- v.intr. To be frittered; சிறிது சிறிதாகக் கெடுதல். Loc. |