Word |
English & Tamil Meaning |
---|---|
அலகு | alaku n. 1. Number, calculation; எண். (திவா.) 2. Measure, quantity; 3. Standard of measurement; 4. Cowries, small shells, as signs of number in reckoning; 5. Berries of Mimusops elengi; 6. Grains of paddy; 7. Ear of paddy or other grain; 8. Weapon, arms; 9. Pointedness; 10. Blade of a weapon or instrument, head of an arrow; 11. Bird's beak; 12. Jaw; 13. Mandibles; 14. Rafter; 15. Broom; 16. Weaver's stay or staff to adjust a warp; 17. Breadth, extension; 18. Species of Alternanthera. See பொன்னாங்காணி. 19. Gnat; 20. A lakh of arecanuts; 21. Male palmyra when tapped for juice so as to give a late yield; |
அலகுகட்டு - தல் | alaku-kaṭṭu- v.tr. <>அலகு+. 1. To charm; மந்திரத்தால் வாயைக்கட்டுதல். (R.) 2. To render the sword powerless by enchantment; 3. To settle accounts; |
அலகுகட்டை | alaku-kaṭṭai n. <>id.+. Felly of a wheel; வண்டிச்சக்கர வட்டை. Loc. |
அலகுகழி - த்தல் | alaku-kaḻi- v.tr. <>id.+. To subtract, deduct a number in reckoning, with seeds etc.; கணிதத்தில் விதைமுதலியவற்றைக் கொண்டு தொகைகுறைத்தல். (W.) |
அலகுகிட்டு - தல் | alaku-kiṭṭu- v.intr. <>id.+. Jaws being rigidly closed, as in tetanus; சன்னியாற் பல்லுக் கிட்டுதல். |
அலகுகுத்து - தல் | alaku-kuttu- v.intr. See அலகுபோடு-. . |
அலகுகூடை | alaku-kūṭai n. <>id.+. Basket made of twigs closely twisted together used for drawing water; வளார்க்கூடை. (R.) |
அலகுசோலி | alakucōli n. Cynodon grass. See அறுகு. (மலை.) |
அலகுஞ்சம் | alakucam n. Glow-worm; மின்மினி. (சது.) |
அலகுநிலை | alaku-nilai n. <>அலகு+ Result of a computation in addition, or multiplication; கணிதவிடைத் தொகை. (W.) |
அலகுநிறுத்தல் | alaku-niṟuttal n. <>id.+. Ceremony preliminary to festival performed in honour of Draupati, in which a sword is planted point downwards near a vessel filled with water and placed before the idol, the sword standing firm being considered auspicious for the festival; திரௌபதியின் உற்சவத்திற்கு முன் வாள்நாட்டுஞ் சடங்கு. (W.) |
அலகுப்பூட்டு | alaku-p-pūṭṭu n. <>id.+. Locking the mouth by a wire running through the cheeks, in fulfilment of a vow; பிரார்த்தனைக்கென்றிடப்படும் வாய்ப்பூட்டு. (W.) |
அலகுபருப்பு | alaku-paruppu n. <>id.+. Seed of the gardenpea; பட்டாணிக்கடலை. |
அலகுபனை | alaku-paṉai n. <>id.+. 1. Nepalfan-palm, m.tr., Trachycarpus martiana; ஒருவகை மடற்பனை. (L.) 2. See அலகு, 21. |
அலகுபாக்கு | alaku-pākku n. <>id.+. Areca-nut sliced thin and boiled, having a reddish hue; ஒருவகையாகப் பக்குவஞ்செய்த பாக்கு. (C.G.) |
அலகுபோடு - தல் | alaku-pōṭu- v.intr. <>id.+. To have one's tongue pierced with an iron or silver wire, or to have small skewers, inserted in many parts of one's body, as a penance; பிரார்த்தனைக்காக நாமுதலிய உறுப்புக்களில் கம்பிகளைக் குத்திக்கொள்ளுதல். |
அலகுவிறைப்பு | alaku-viṟaippu n. <>id.+. Lockjaw; நோய்மிகுதியால் தாடைகிட்டுகை. |
அலகை | alakai n. <>அல-. 1. Devil, evil spirit, demon; பேய். வையத் தலகையா வைக்கப்படும் (குறள், 850). 2. Colocynth. See பேய்க்கொம்மட்டி. 3. Century plant. See காட்டுக்கற்றாழை. |
அலகைக்கொடியாள் | alakai-k-koṭiyāḷ n. <>அலகை+. Kāḷi, having the figure of a devil on her banner; காளி. (பிங்.) |
அலகைச்சுரம் | alakaiccuram n. Species of Phyllanthus. See கீழ்க்காய்நெல்லி. (மூ.அ.) |
அலகைத்தேர் | alakai-t-tēr n. <>அலகை+. Mirage, the devil's car; பேய்ந்தேர். அலகைத் தேரும் (கல்லா. கணபதிதுதி). |
அலகைமுலையுண்டோன் | alakai-mulai-y-uṇṭōṉ n. <>id.+. Viṣṇu, who as Krṣṇa sucked to death a demoness; திருமால். (பிங்.) |
அலங்கடை | alaṅ-kaṭai adv. <>அல்4+. In places other than, except in the case of; அல்லாதவிடத்து. ரழவலங்கடையே (தொல்.எழுத்.30). |