Word |
English & Tamil Meaning |
---|---|
சித்தாந்தி | cittānti, n. <>siddhāntin. 1. One who establishes or proves his theory logically; தன்கொள்கையை நாட்டுபவன். (சங். அக.) 2. Astronomer, mathematician; 3. A follower of the šaiva Siddhānta system, dist. fr. vētānti; 4. An abstinate person; |
சித்தாமுட்டி | cittāmuṭṭi, n. [K. ciṭṭāmuṭṭi.] See சிற்றாமுட்டி. Colloq. . |
சித்தாமோகம் | cittāmōkam, n. A kind of ore; பேரோசனை என்னும் உலோகவகை. (W.) |
சித்தாயதனம் | cittāyataṉam, n. <>siddāyatana. The Jaina shrine on the foremost peak east of the Vijayārtta mountain; விஜயார்த்த பர்வதத்தின் கீழ்த்திசையில் பிரதம சிகரத்திலுள்ள சைத்தியாலயம். சிவத்திறை யுறையுஞ் சித்தாயதன நற்கூடம். (மேருமந்.620). |
சித்தார் 1 | cittār, n. <>U. sitār. A three-stringed guitar with movable frets, common in North India; வடதேசத்தில் பெரிதும் வழங்கும் ஒரு வகை நரம்புவாத்தியம். |
சித்தார் 2 | cittār, n. <>Portcitar. Summons; கோர்ட்டு சம்மன். Loc. |
சித்தார்த்தம் | cittārttam, n. <>siddhārtha. White mustard; வெண்கடுகு. (பிங்) |
சித்தார்த்தன் | cittārttaṉ, n. <>Siddhārtha. Buddha, as one who realised the great objective of life; [வாழ்வின் பயனாகிய நிர்வாணத்தையடைந்தவன்] புத்தன். |
சித்தார்த்தி | cittārtti, n. <>Siddhārthin. The 53rd year of the Jupiter cycle; ஆண்டு அறுபதனுள் ஐம்பத்துமூன்றாவது. |
சித்தாரி - த்தல் | cittāri-, 11 v. intr. <>Port. citar. To file a suit or case in court; வியாச்சியம் செய்தல். (J.) |
சித்தி 1 - த்தல் | citti-, 11 v. intr. <>siddhi. To be gained, accomplished; to be realised; கைகூடுதல். சித்தாந்தத்தே நிற்பர் முத்தி சித்தித்தவர் (திருமந்.2394). |
சித்தி 2 | citti, n. <>siddhi. 1. Success, realisation, attainment; கைகூடுகை.வெந்ண்திறற் சித்தி கண்ட வீடணன் (கம்பரா. அதிகாய. 208). 2. The eight miraculous powers known as aṣṭa-mācitti. 3. Final liberation; 4. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.; 5. A šaiva Siddhānta treatise. 6. Hook-swinging festival. 7. Right of cultivating the land, one of aṣṭa-pōkam, q.v., 8. Strychnine tree. 9. A plant common in sandy tracts. 10. Soap; 11. A plant growing in damp places. |
சித்தி 3 | citti, <>சிற்றாய். Mother's younger sister; father's younger brother's wife; சிறிய தாய். |
சித்தி 4 | citti n. See சிந்தியா. Tj. Vaiṣṇ. Brah. . |
சித்தி 5 | citti, n. See சித்தை1. . |
சித்திக்கல் | citti-k-kal, n. <>சித்தி2 +. 1. Stone or wooden pillar set up for hook-swinging; செடிலாட்டத்திற்காக நாட்டப்பட்ட தூண். (G. sm. d. I, i, 22.) 2. Kind of red stone; |
சித்திகணபதி | citti-kaṇapati, n. <>siddhi +. See சித்திவிநாயகன். (w.) . |
சித்திடு | cittiṭu, n. See சித்துடு. (மலை.) . |
சித்திபத்தனம் | citti-pattaṉam, n. <>siddhi + pattana. (Jaina.) Mōkṣa, as a city of eternal bliss; மோட்சம். உரையெனுந்தோணி சித்திபத்தனத்துய்க்குமென்றான் (மேருமந்.727). |
சித்தியடை - தல் | citti-y-aṭai-, v. intr. <>id. +. (w.) 1. To succeed; அனுகூலமடைதல். 2. To obtain salvation, to die, euphemistically said of ascetics; |
சித்தியர் | cittiyar, n. Fem. of சித்தர். A class of celestial women; தெய்வமங்கையர் வகை. சித்தியரிசைப்பத் தீந்சொல். (கம்பரா. ஊர்தேடு. 186). |
சித்தியா | cittiyā, n. <>சிற்றையா. Father's younger brother; mother's younger sister's husband; சிற்றப்பன். Vaiṣṇ. Brah. |
சித்தியார் | cittiyār, n. <>siddhi. A treatise on šaiva Siddhānta. See சிவஞானசித்தியார். உந்திகளி றுயர்போதஞ் சித்தியார் (திராவிடப். 384). |
சித்திரக்கம்மம் | cittira-k-kammam, n. <>citra +. Artistic workmanship; விசித்திரப் பாடான வேலை. செந்நூ னிணந்த சித்திரக் கம்மத்து (பெருங். உஞ்சைக். 35, 98). |
சித்திரக்கம்மி | cittira-k-kammi, n. prob. id. + karmin. A kind of cloth; ஆடைவகை. (சிலப்.14, 108, உரை.) |