Word |
English & Tamil Meaning |
---|---|
சித்திரப்பாவை | cittira-p-pāvai, n. <>id. +. Picture, portrait, carved image, especially of a woman; சித்திரத்திற் செய்த பெண்வடிவம். சித்திரப் பாவையி னத்தக வடங்கி (நன். 41). |
சித்திரப்பிரதிமை | cittira-p-piratimai, n. <>id. +. See சித்திரப்பாவை. (யாழ். அக.) . |
சித்திரப்புணர்ப்பு | cittira-p-puṇarppu, n. <>id. +. (Mus.) Nasalising the hard consonants in singing a musical piece; இசைகொள்ளும் எழுத்துக்களின்மேல் வல்லெழுத்து வந்தபோது மெல்லொற்றுப்போலப் பண்ணீர்மை நிறுத்துகை. (சிலப்.3, 56, உரை.) |
சித்திரப்புறா | cittira-p-puṟā, n. <>id. +. Spotted dove; புறாவகை. (சீவக.564, உரை.) |
சித்திரப்பூமி | cittira-p-pūmi, n. <>id. +. Beautiful landscape; விசித்திரமான சோலை செய்குன்றுமுதலிய இடங்கள். சித்திரப்பூமி வித்தக நோக்கி (பெருங். உஞ்சைக். 33, 7) . |
சித்திரப்பேச்சு 1 | cittira-p-pēccu, n. <>id. +. Rhetorical utterance; அலங்காரவார்த்தை. Loc. |
சித்திரப்பேச்சு 2 | cittira-p-pēccu, n. <>சித்திரம்3 +. Artful speech; தந்திரப்பேச்சு. (w.) |
சித்திரபானு | cittirapāṉu, n. <>citrabhānu. 1. Fire; நெருப்பு (பிங்.) 2. Sun; 3. The 16th year of the Jupiter cycle; |
சித்திரபுண்டரம் | cittira-puṇṭaram, n. <>citra +. The sacred mark worn on the forehead by Vaiṣṇavites; வைஷ்ணவர்கள் நெற்றியில் தரித்துக்கொள்ளும் திருமண்காப்பு. Colloq. |
சித்திரபுத்திரன் | cittira-puttiraṉ, n. See சித்திரகுத்தன். Loc. . |
சித்திரம் 1 | cittiram, n. <>citra. 1. Picture, painting; ஓவியம். சித்திரம் பயின்ற செம்பொன் விதானத்து (பெருங். உஞ்சைக். 37, 14). 2. Excellence; 3. Beauty 4. Decoration, embellishment; 5. Object of wonder, surprise, 6. See சித்திரப்பேச்சு1. 7. See சித்திரகவி. (பிங்.) 8. A treatise on architecture; 9. Forest; |
சித்திரம் 2 | cittiram, n. <>citraka. Tiger, panther; புலி. கதியில்வந்த சித்திரமென (பாரத. பதின்மூ. 125). |
சித்திரம் 3 | cittiram, n. <>chidra. 1. Hole, slit, opening; ஓட்டை. 2.Ignominy, blot; 3. Void; 4. Unreality; 5. Secret; 6. Discord, as in a family; 7. See சித்திரப்பேச்சு. |
சித்திரம் 4 | cittiram, n. cf. citraka. (மலை.) 1. Ceylon leadwort. See கொடுவேலி. . 2. Species of gymnema. See சிறுகுறிஞ்சா. 3. Castor plant; |
சித்திரம்வெட்டு - தல் | cittiram-veṭṭu-, v. intr. <>சித்திரம்1 +. To engrave on stones; கல்லில் சித்திரவேலை செய்தல் (C. E. M.) |
சித்திரமண்டபம் | cittira-maṇṭapam, n. <>citra +. 1. Painted chamber, hall decorated with pictures, picture-gallery; ஓவியசாலை. 2. Royal audience-hall; |
சித்திரமாடம் | cittira-māṭam, n. <>id. +. Beautiful hall or palace artistically decorated with pictures and paintings; சிங்காரமாளிகை. சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன். (புறநா. 59). |
சித்திரமூலம் | cittira-mūlam, n. <>citraka +. 1. Ceylon leadwort. See கொடுவேலி. (பிங்.) . 2. Rosy-flowered leadwort. See செங்கொடு வேலி. (L.) |
சித்திரமூலி | cittira-mūli, n. <>id. +. See சித்திரமுலம், 2. (மலை.) . |
சித்திரர் | cittirar, n. <>chidra. Quarrelsome, factious people; கலகம் விளைப்போர். சித்திரர்க்கெளி யேனலேன் (தேவா. 859, 3). |
சித்திரரதன் | cittira-rataṉ, n. <>citra + ratha. Sun, as riding in a beautiful chariot; [அழகிய தேரையுடையவன்] சூரியன். (சங். அக.) |
சித்திரரேகை | cittira-rēkai, n. <>id. +. 1. A line in palm of hand significant in palmistry; உள்ளங்கை இரேகைகளுள் ஒன்று. (w.) 2. Pipal. See அரசு1. (மலை.) |
சித்திரவண்ணம் | Cittira-vaṇṇam, n. <>id. + varṇa. (Pros.) A rhythmic verse characterised by euphonic alternation of long and short syllables; நெடிலும் குறிலும் ஒப்ப விரவிய சந்தம். (தொல். பொ. 534.) |
சித்திரவதம் | cittira-vatam, n. <>id. +. Butchery, horrible slaughter; torture to death; வேதனைப்படுத்திக் கொல்லுகை. இராமன் வெஞ்சரஞ் சித்திரவதஞ்செயக் கண்டு தீர்தியோ (கம்பரா. விபீடண.12). |
சித்திரவதை | cittira-vatai, n. <>id. +. See சித்திரவதம். (சங். அக.) . |
சித்திரவல்லாரி | cittira-vallāri, n. prob. id. + vallarī. Common marking-nut. See சேங்கொட்டை. . |