Word |
English & Tamil Meaning |
---|---|
சித்திரக்கரணம் | cittira-k-karaṇam, n. <>id. +. 1. Expert playing by hand, as in drumming; நன்றாகக் கையினாற் செய்யுந் தொழில். சித்திரக்கரணஞ்சிதைவின்று செலுத்தும் (சிலப். 3, 54). 2. A mode of copulation; |
சித்திரக்கா | cittirakkā, n. prob. id. +. A kind of cittira-kavi; சித்திரகவி வகை. சித்திரக்காவே விசித்திரக்காவே (யாப். 96). |
சித்திரக்காலி | cittira-k-kāli, n. <>id. +. A kind of paddy; நெல்வகை. (சங். அக.) |
சித்திரக்கிரீவன் | cittira-k-kirīvaṉ, n. <>id. +. Pigeon, as having a parti-coloured neck; [பலவர்ணமுள்ள கழுத்துடையது] புறவு. (w.) |
சித்திரக்குள்ளன் | cittira-k-kuḷḷaṉ, n. <>id. +. mischievous dwarf; கூழையன். Colloq. |
சித்திரகடம் | cittira-kaṭam, n. <>id. + kaṭa. Wild jungle, wilderness; பெருங்காடு. (w.) |
சித்திரகம் | cittirakam, n. <>citraka. 1. Ceylon leadwort. See கொடுவேலி. (மலை.) . 2. Castor plant. See ஆமணக்கு. (சூடா.) |
சித்திரகவி | cittira-kavi, n. <>citra +. 1. A variety of metrical composition fitted into fanciful figures, one of nāṟ-kavi, q.v.; நால் வகைக் கவிகளுள் சித்திரத்தில் அமைத்தற்கேற்பப் பாடும் மிறைக்கவி. (பிங்.) 2. One clever in composing cittira-kavi; |
சித்திரகாயம் | cittirakāyam, n. <>citra-kāya. Tiger, panther; புலி. கடும்புலிகளயர்ந்து சித்திரகாயமெனும் பெயர்விளக்க (அழகர்கல. 1). |
சித்திரகாரன் | cittira-kāraṉ, n. <>citra +. 1. Painter, portrait-painter; சித்திரமெழுதுவோன். சித்திரகாரருஞ் செல்கெனச்சொல்லி (பெருங். வத்தவ. 3, 28). 2. Sculptor, engraver; |
சித்திரகாரி | cittira-kāri, n. <>id. + kārin. See சித்திரகாரன். (மணி. 28, 38, அரும்.) . |
சித்திரகுத்தன் | cittirakuttaṉ, n. <>Citragupta. Yama's officer who records the good and evil deeds of human beings; யமதருமனிடம் ஆன்மாக்களின் நற்செயல் தீச்செயல்களைக் கணக்கிலெழுதிப் படிப்போன். சித்திரகுத்த னெழுத்தால் (திவ். பெரியாழ்.5, 2, 2). |
சித்திரகூடம் | cittira-kūṭam, n. <>citrakūṭa. 1. Decorated or painted hall, hall hung with pictures; சித்திரசாலை. செல்வப் பொற்கிடுகு சூழ்ந்த சித்திரகூடம் (சீவக. 2139). 2. Raised platform; 3. A Viṣṇu shrine in Chidambaram; 4. A mountain in Bundlekhand where Rama stayed during his exile; |
சித்திரகோஷாவளி | cittira-kōṣāvaḷi, n. <>citra +. A kind of lute; வீணைவகை. (பரத. ஒழிபி.15.) |
சித்திரச்சூடகம் | cittira-c-cūṭakam, n. <>id. +. A ring of fine workmanship; அழகிய வேலைப்பாடமைந்த மோதிரம். (குற்றா. குற. 51.) |
சித்திரச்சோறு | cittira-c-cōṟu, n. <>சித்திரம்1 +. See சித்திரான்னம். சித்திரச்சோற்றிற் செருக்கினேன் (அருட்பா, அவாவறுப்பு. 7). . |
சித்திரசபை | cittira-capai, n. <>citra +. Dancing-hall of Naṭarāja at Tiru-k-kuṟṟālam in Tinnevelly District; திருக்குற்றாலத்து நடராஜ சபை. (குற்றா. தல. கடவுள்வண. 3.) |
சித்திரசாலை | cittira-cālai, n. <>id. +. See சித்திரமண்டபம். பத்தியிற் குயிற்றிய சித்திர சாலையும் (பெருங். மகத. 4, 15). . |
சித்திரதாளம் | cittira-tāḷam, n. id. +. (Mus.) A variety of time-measure, one of See navatāḷam, q.v.; நவதாளத்தொன்று. (பரத. தாள. 6.) |
சித்திரப்படம் | cittira-p-paṭam, n. <>id. +. 1. Picture; ஓவியம். 2. Variegated, painted or printed cloth; 3. Decorated cloth-cover; |
சித்திரப்படாம் | cittira-p-paṭām, n. See சித்திரப்படம், 2. (யாழ். அக.) . |
சித்திரப்பணி | cittira-p-paṇi, n. <>சித்திரம்1 +, 1. Decorative or ornamental work; விசித்திரவேலை. 2. Painting; |
சித்திரப்பா | cittira-p-pā, n. <>id. +. See சித்திரக்கா. (திவா.) . |
சித்திரப்பாலடை | cittira-p-pālaṭai, n. <>id. +. 1. Painted-leaved tailed tick-trefoil, m. sh., Uraria picta; பூடுவகை. (L.) 2. Species of euphorbia. See அம்மான்பச்சரிசி. (சங். அக.) |
சித்திரப்பாலாடை | cittira-p-pālāṭai, n. <>id. +. See சித்திரப்பாலடை (w.) . |
சித்திரப்பாலாவி | cittira-p-pālāvi, n. <>id. +. Species of euphorbia. See அம்மான் பச்சரிசி. (w.) . |
சித்திரப்பாலை | cittira-p-pālai, n. <>id. +. Species of euphorbia. See சிற்றம்மான்பச்சரிசி. (பாலவா. 364.) . |