Word |
English & Tamil Meaning |
---|---|
சித்திரவாராத்தி | cittira-vārātti, n. <>kṣudra + vārtāka. A thorny plant with diffuse branches. See கண்டங்கத்தரி. (மலை) . |
சித்திரவிதழ் | cittira-v-itaḻ, n. perh. சித்திரம்1 +. Country mallow. See துத்தி. (மலை.) . |
சித்திரவேளாகொல்லி | cittira-vēḷākolli, n. <>id. +. (Mus.) A secondary melody-type; யாழ்த்திறவகை. (திவா.) |
சித்திரன் | cittiraṉ, n. <>citra. (சூடா.) 1. Painter, artist; ஓவியன். 2. Carpenter; |
சித்திராக்கினை | cittirākkiṉai, n. <>id. + ājā. See சித்திரவதம். Loc. . |
சித்திராங்கதை | cittirāṅkatai, n. <>Cittrāṅgadā. The Pāṇṭyaṉ princess who married Aruccuṉaṉ; அருச்சுனன் மனைவியான பாண்டியன் மகள். சித்திராங்கதை யென்னுஞ் செஞ்சொல் வஞ்சி (பாரத. அருச்சுனன்றீர். 26). |
சித்திராங்கி | cittirāṅki, n. <>citrāṅgī. A vampire, heartless, deceitful woman; கொடுநீலி. Colloq. |
சித்திராசனம் | cittirācaṉam, n. <>citra +. 1. A yōgic posture which consists in sitting as best suits one's comfort; தன் சௌகரியப்படி இருத்தலாகிய யோகாசனவகை. (காசிக. யோக. 15.) 2. Small coloured carpet for sitting; |
சித்திராபூரணை | cittirā-pūraṇai, n. <>citrā +. See சித்திராபௌர்ணமி. (சிலப். 5, 64, அரும்.) . |
சித்திராபௌர்ணிமை | cittirā-paurṇimai, n. <>id. +. Festival celebrated on the fullmoon-day in the month of Cittirai; சித்திரை மாதத்துப் பௌர்ணிமையில் நிகழுந் திருவிழா. |
சித்திரான்னம் | cittirāṉṉam, n. <>citra + anna. Boiled rice mixed with spicy condiments, as tamarind, sesamum, sugar, etc.; புளி, எள், சர்க்கரை முதலியன கலந்தட்ட அன்னம். (சங். அக.) |
சித்திரி - த்தல் | cittiri-, 11 v. tr. <>id. 1. To paint, make fancy work; சித்திரமெழுதுதல். 2. To paint in words, use rhetorical tricks in speech; 3. To fashion, invent, as arguments; to fabricate; 4. To beautify; |
சித்திரிகன் | cittirikaṉ, n. <>citraka. See சித்திரகாரன். வரைவுறு சித்திரிகன் சித்திர சத்தியைப் போல். (வேதா, சூ. 26) . |
சித்திரிகை | cittirikai, n. prob. id. 1. A kind of lute; வீணைவகை. (பரத. ஓழிபி. 15.) 2. Good, valuable clothes; |
சித்திரிணி | cittirini, n. <>citriṇī. See சித்தினி. (கொக்கோ. 1, 7, 10.) . |
சித்திரை 1 | cittirai, n. <>citrā. 1. The 14th nakṣatra, part of virgo; பதினான்காம் நஷத்திரம். (பிங்.) Species of euphorbia. See அம்மான்பச்சரிசி. (w.) |
சித்திரை 2 | cittirai, n. <>citrā. 2. The first month of the Tamil year, April-May; தமிழாண்டின் முதல் மாதம். சித்திரைச் சித்திரைச் திங்கள் சேர்ந்தென (சிலப் 5,64). Rice gruel distributed on the fullmoon-day of Cittirai to propitiate Citragupta; |
சித்திரைக்கடப்பு | cittirai-k-kaṭappu, n. <>id. +. A kind of paddy generally cultivated in summer in Shiyali taluk; சீகாழித்தாலுக்காவில் பெரும்பாலும் கோடையில் விளைவிக்கப்படும் பெருநெல்வகை. Loc. |
சித்திரைக்கதை | cittirai-k-katai, n. <>id. +. Story of Citragupta describing rewards and punishments for various good and bad actions, read in temples and houses on cittirāpūraṇai; சித்திராபூரணையன்று கோயில்களிலும் வீடுகளிலும் வாசிப்பதும் புண்ணியபாவங்களைக் கூறுவதுமான சித்திரகுத்தன் கதை. (J.) |
சித்திரைக்கரந்தை | cittirai-k-karantai, n. <>id. +. See சித்திரைக்கருந்தலை.Tinn. . |
சித்திரைக்கருந்தலை | cittirai-k-karuntalai, n. <>id. +. The closing part of cittirai when the agricultural season ends and plans are made for cultivation in the ensuing season; சாகுபடி முற்றுப்பெற்றதும் பின்னேற்பாடுகளை நடத்தற்குரிய சித்திரைமாத முடிவு. |
சித்திரைக்கார் | cittirai-k-kār, n. <>id. +. A kind of coarse paddy harvested in Cittirai; சித்திரைமாதத்தில் அறுவடையாகும் நெல்வகை. (G. Tj. D. j, 94.) |
சித்திரைக்காலி | cittirai-k-kāli, n. <>id. +. A kind of paddy; நெல்வகை. (J.) |
சித்திரைக்குழப்பம் | cittirai-k-kuḻappam, n. <>id. +. Stormy weather of Cittirai, the fore-runner of the S. W. monsoon; சித்திரை மாதத்துப் புசல். (w.) |
சித்திரைச்சிலம்பன் | cittirai-c-cilampaṉ, n. <>id. +. April freshes in the Kāvēri; காவேரியில் உண்டாம் சித்திரைப்பெருக்கு. Loc. |