Word |
English & Tamil Meaning |
---|---|
சிதசுரசம் | cita-curacam, n. <>sita+surasa. Stalked leaflet chaste tree. See வெண்ணொச்சி. (தைலவ. தைல. 16) . |
சிதடன் | citaṭaṉ, n. <>சிதடு. 1. Blind man; குருடன். துஞ்சுபுலி யிடறிய சிதடன்போல (புறநா. 73, 7). 2. Ignorant person; 3. Insane person; |
சிதடி 1 | citaṭi, n. See சிதடு, 2. சிதடியிற் றுவ்வாது (முதுமொழி. 35). . |
சிதடி 2 | citaṭi, n. Cricket. See சிள்வண்டு. சிதடி கரையப் பெருவறங் கூர்ந்து (பதிற்றுப். 23, 2). . |
சிதடு | citaṭu, n. perh. சிதர்2-. 1. Blindness; குருடு. சிறப்பில் சிதடும் (புறநா. 28). 2. Ignorance, folly 3. Emptiness, hollowness; |
சிதப்பூரம் | citappūram, n. Species of alternanthera. See பொன்னாங்காணி. (மலை.) . |
சிதம் 1 | citam, n. <>sita. 1. Whiteness; வெண்மை. சிதம்படு நற்றுகில் (ஞானவா. வைரா. 53). 2. Silver; 3. White bindweed; See வெண்சிவதை. (மலை.) 4. Star; |
சிதம் 2 | citam, n. <>jita. That which is subdued or conquered; வெல்லப்பட்டது. (பிங்.) |
சிதம் 3 | citam, n. <>chidra. Door, entrance to a house; மனைவாயில் (பிங்.) |
சிதம் 4 | citam, n. cf. cit. Wisdom, intelligence, knowledge; ஞானம். (பிங்.) |
சிதம் 5 | citam, n. 1. yellow wood sorrel. See புளியாரை. (மலை.) . 2. Indian globe-thistle. See விஷ்ணுக்கரந்தை. (மலை.) 3.True nutmeg. See சாதிக்காய். (L.) |
சிதம்பர் | citampar, n. <>சிதம்பு. Base persons; இழிந்தோர். செத்தற் கொத்தைச் சிதம்பரை (திருவிசை. திருமாளிகைத். 4, 4) |
சிதம்பரச்செய்யுட்கோவை | citampara-c-ceyyuṭ-kōvai, n. <>Cidambara +. A work by Kumarakurupara-muṉivar illustrating the various metres of Tamil prosody; குமரகுருபர முனிவரால் இயற்றப்பட்டதும் யாப்பிலக்கணத்திற்கூறப்படும் பாவும் பாவினமுமாகிய பல்வகை யாப்புக்களுக்கும் உதாரணமாயமைந்த செய்யுட்களையுடையது மன நூல். |
சிதம்பரப்பாட்டியல் | citampara-p-pāṭṭi-yal, n. <>id. +. A treatise on prosody by paracōtiyār, 16th C.; செய்யுளமைதிகளைக் கூறுவதும் 16-ஆம் நூற்றாண்டினரான பரஞ்சோதியாரியற்றியதுமான ஓர் இலக்கணநூல். |
சிதம்பரபதம் | citampara-patam, n. <>id. +. A measuring rod of 34 inches in length; 34 அங்குல அளவுள்ள கோல். (சர்வா. சிற். 21.) |
சிதம்பரம் | citamparam, n. <>Cidambara. A celebrated šaiva shrine in South Arcot District; தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ள பிரபலமான சிவதலம். |
சிதம்பரரேவணசித்தர் | citampara-rē-vaṇa-cittar, n. <>id. +. The author of Akarāti-nikaṇṭu etc., who lived in the 16th century; 16-ம் நூற்றாண்டினரும் அகராதிநிகண்டு முதலியவற்றின் ஆசிரியருமாகிய புலவர். |
சிதம்பரவெலுமிச்சை | citampara-v-eiv-miccai, n. <>id. +. Lemon. See பேரெலுமிச்சை. (J.) . |
சிதம்பல் | citampal, n. <>சிதம்பு-. Being softened by soaking or spoiled by too much moisture; பதனழிகை. (J.) |
சிதம்பு 1 - தல் | citampu-, 5 v. intr. (J.) 1. To be spoilt by too much moisture; to become roten; பதனழிதல். 2. cf. sita. To be whitened, as the hands or feet by being dipped in water for a long time; 3. To be damaged or injured by excess of water, as crops, vegetation; |
சிதம்பு 2 | citampu, n. <>சிதம்பு-. 1. Debasement in quality, spoilt condition; தன்மையினழிவு (பிங்) 2. Baseness, meanness; 3. Excessive maceration; |
சிதமருசம் | cita-marucam, n. <>sita + marīca. White pepper; வெண்மிளகு. (மலை.) |
சிதமை | citamai, n. <>id. +. Goat; வெள்ளாடு. (தைலவ. தைல. 4.) |
சிதர் 1 - தல் | citar-, 4 v. cf. chid. tr. 1. To scatter, strew; சிதறுதல். 2. To dilate upon, narrate, expound in detail; 3. To scratch, as a fowl; 1. To spread over, to be diffused; 2. To be scattered, strewn; 3. To be worn out, as cloth; |
சிதர் 2 - த்தல் | citar-, 11 v. cf. id. tr. 1. To separate, split; பிரித்தல். சொற்சிதர் மருங்கின் (தொல். எழுத். 132). 2. To cut, hack; 3. To shed, scatter; |