Word |
English & Tamil Meaning |
---|---|
சிதேகி | citēki, n. <>cētakī. Chebulic myrobalan. See கடுக்காய். (யாழ். அக.) . |
சிதேந்திரம் | citēntiram, n. prob.jinēndra. Temple; கோயில் (பிங்.) |
சிதேந்திரியன் | citēntiriyaṉ, n. <>jita+indriya. One who has subdued his senses; புலன்களை வென்றோன். கங்குற்போ தகன்றபின் னிவர் சிதேந்திரியர் (பிரபோத. 10, 11). |
சிதை - தல் | citai-, 4 v. intr. <>chid. 1. To be injured, spoiled; to deteriorate, decay; தன்மை கெடுதல். கூம்புவிடு பன்மலர் சிதைய (அகநா. 36). 2. To be scattered, dispersed; 3. To be sundered, broken, cut to pieces; 4. To be angry; 5. To become corrupt, degenerate by lapse of time, as words; 6. To prove untrue; 7. To exceed limit or propriety; 8. To disperse, scatter, as an army; 9. To become out of tune, as music; to go wrong, as rhythm; |
சிதை - த்தல் | citai-, 11 v. tr. Caus. of சிதை1-. 1. To injure, waste; கெடுத்தல். பூங்கண் மகளிர் புனைநலஞ் சிதைக்கும் (கலித். 75, 31). 2. To disperse, scatter; 3. To destroy, ruin, demolish, kill: 4. To shave, shear; 5. To pluck out, uproot; 6. To rub; 7. cf. சிலை-. To sound; |
சிதை 1 | citai, n. <>சிதை1-. 1. See சிதைவு,1 கொழுமணிச் சிகர் கோடி சிதைபட (திருவிளை. மாயப். 20). 2. Sail; 3. Vulgar words; |
சிதை 2 | citai, n. <>citā. Funeral pile, pyre; ஈமவிறகு. (யாழ். அக.) |
சிதைசுற்று | citai-cuṟṟu, n. <>சிதை1 -+ சுற்று-. (யாழ். அக.) 1. Oil press; செக்கு. 2. Sugar-cane press; 3. Wheel; |
சிதைந்தவேடு | citainta-v-ēṭu, n. <>id. +. Ant-eaten ola book; செல்லரித்த ஓலையேடு. (J.) |
சிதையர் | citaiyar, n. <>சிதை3. Low, mean people; கீழ்மக்கள். (அக. நி.) |
சிதைவு | citaivu, n. <>சிதை1-. 1. Injury, degeneracy, ruin, defeat; கேடு. செப்ப முடையவ னாக்கஞ் சிதைவின்றி (குறள், 112). 2. Fault, defect; |
சிந்தகம் 1 | cintakam, n. <>cintidī. Tamarind tree. See புளியமரம். சிந்தகத்துக் கீழமர்ந்து (பாகவ. சிறப்புப்பாயி. 2). |
சிந்தகம் 2 | Cintakam, n. See சிதகம். (சது.) . |
சிந்தடி | cintaṭi, n. <>சிந்து2 + அடி. (Pros.) Metrical line of three feet; மூச்சீரடி. (தொல். பொ. 349.) |
சிந்தம் 1 | cintam, n. <>cicā. [T. cinta.] Tamarind tree, See புளியமரம். (பிங்.) . |
சிந்தம் 2 | cintam, n. See சிதகம். (சது.) . |
சிந்தம் 3 | cintam, n. A kind of metre; பாவகை. அறிவுடைநம்பியார் செய்த சிந்தம். (யாப். வி. 93, பக். 352). |
சிந்தன் 1 | cintaṉ, n. <>சிந்து2. Dwarfish person; குறளனிலும் சிறிது நெடியவன். (தொல். பொ. 349, உரை) சேயனாய் வந்தொரு சிந்தன் போன்றுலாய் (கந்தபு. அவைபுகு. 75) |
சிந்தன் 2 | cintaṉ, n. See சிதகம். (பிங்.) . |
சிந்தனை | cintaṉai, n. <>cintanā. 1. Thought, idea; எண்ணம். சிந்தனை யுரைசெய்வான் (கம்பரா. கங்கை. 53). 2. Revision of lessons; 3. Meditation, 4. Care, concern, grief; 5. Attention, consideration; 6. Subject about which a person consults a soothsayer; |
சிந்தாக்கட்டிகை | cintākkaṭṭikan, n. <>சிந்தாக்கு1 +. A kind of necklace; அட்டிகைவகை. |
சிந்தாக்கிராந்தன் | cintākkirāntaṉ, n. <>cintā + ā-krānta. One stricken with grief; கவலையுள் ஆழ்ந்தவன். Colloq. |
சிந்தாக்கு 1 | Cintākku, n <>T. cintāku. [K. Cintāka.] See சிந்தாக்கட்டிகை. சிந்தாக்கை யிரு முலையாட் கேன்கழுத்தி லிட்டேன் (விறலிவிடு. 695). |
சிந்தாக்கு 2 | cintākku, n. A child's game; சிறுவர் விளையாட்டுவகை. (w.) |
சிந்தாகுலம் | cintākulam n. <>cintā+ā-kula. Care; deep sorrow; மனக்கவலை. சிந்தாகுல முற்றென்னே வென்னைவாட்டத் திருத்துவதே (திருக்கோ. 12). |