Word |
English & Tamil Meaning |
---|---|
சிந்தாத்திரி | cintāttiri, n. prob. சிந்து3 + யாத்திரை. (J.) 1. Safe voyage or journey; நல்லபயணம். சிந்தாத்திரியாகப் போய்விட்டுவா. 2. Welfare, prosperity; |
சிந்தாத்திரை | cintāttirai, n. See சிந்தாத்திரி (J.) . |
சிந்தாதேவி | cintā-tēvi, n. <>cinta +. Goddess Sarasvatī worshipped in ancient Madura; மதுரையிற் பூர்வகாலத்தில் வணங்கப்பட்டு வந்த சரஸ்வதி. சிந்தாதேவி செழுங்கலை நியமம் (மணி.14, 17). |
சிந்தாமணி | cintā-maṇi, n. <>id. + maṇi. 1. A mythical gem believed to yield to its possessor everything that is desired; விரும்பிய வனத்துங் கொடுக்கவல்ல தெய்வமணி. சிந்தாமணி தெண்கடல மிர்தம் (திருக்கோ. 12). 2. An ancient Jaina epic. See சீவகசிந்தாமணி. சிந்தார்மணி யோதி யுணர்ந்தார் (சீவக.3143). 3. A compound medicament; 4. Auspicious curl-mark just above horse's hoofs; |
சிந்தாமணிக்குளிகை | cintāmaṇi-k-kuḷikai, n. <>சிந்தாமணி +. Pill for removing all weariness and pain; களைப்பு. முதலியவற்றை நீக்குங்குளிகை. (பதார்த்த.1217.) |
சிந்தாமணிமாத்திரை | Cintāmaṇi-māttirai, n. <>id. +. See சிந்தாமணிக்குளிகை. பிறங்கு சிந்தாமணி மாத்திரையல்லவோ (தனிப்பா. ii, 149, 375). |
சிந்தாவிளக்கு | cintā-viḷakku, n. <>cintā +. Sarasvati, as mind-illuminator; [சிந்தையை விளக்குபவள்] சரசுவதி. சிந்தாவிளக்கின் செழுங்கலை நியமத்து (மணி. 13, 106). |
சிந்தி 1 - த்தல் | cinti-, 11 v. <>cint. tr. 1. To think of, consider; நினைத்தல். மறுமையைச் சிந்தியார் சிற்றறிவினார் (நாலடி, 329). 2. To reflect, ponder; To mediatate; 4. To revise lessons; 5. To desire; To be concerned, sorrowful; |
சிந்தி 2 | cinti, n. <>சிந்து-. An Ornament forming part of talai-cāmāṉ; தலைசாமானைச் சார்ந்த சுட்டியென்னும் அணி. |
சிந்திதம் | cintitam, n. <>cintita. That which is thought of or considered; நினைக்கப்பட்டது. (சங். அக) |
சிந்தியம் | cintiyam, n. <>cintya. 1. That which is worthy of consideration; நினைக்கத் தக்கது. (சங். அக.) 2. An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.; |
சிந்தியல்வெண்பா | cintiyal-veṇpā, n. <>சிந்து2 + இயல் +. Veṇpā verse of three lines; மூன்றடியாலமைந்த வெண்பாவகை. (காரிகை, செய்.5, உரை.) |
சிந்தினர் | cintiṉar n. <>id. Dwarfs; குள்ளர். நெடியர் சிந்தினர் குறியினர் (கந்தபு. படையெழு. 7). |
சிந்து 1 - தல் | cintu-, 5 v. [T. cindu, M. cinduga.] iṇtr. 1. To be strewn, spilled; சிதறுபடுதல். 2. cf. syand, To trickle, stream; 3. cf. chid. To be destroyed; 1. To scatter or strew; 2. To remove; 3. To spill, sprinkle, shed; 4. To spend, waste; 5. To cast on all sides expand; 6. [T. cīdu.] To blow the nose; 7. [K.sindu.] To destroy; 8. To pluck up, root out; 9. To render futile; 10. To cut off; |
சிந்து 2 | cintu, n. prob. சிந்து-. 1. Dwarf, about 3 ft. high, dist. fr. kuṟal; குறளினுஞ் சிறிது நெடியனாய் மூன்றடியுயரமுள்ளவன். குறள் சிந்தினொடோரு நடந்தன (சிவக. 631). 2. See சீந்தடி. (காரிகை, உறுப்12) 3. A kind of musical composition ; 4. A masquerade dance; |
சிந்து 3 | cintu, n. <>sindhu. 1. Sea, ocean; கடல். தேர்மிசைச் சென்றதோர் சிந்து (கம்பரா. ஆற்றுப். 32). 2. Water; 3. River; 4. The river Indus; 5. Sindh, as the country of the Indus one of 56 tēcam, q.v.; 6. The language of Sindh, one of the 18 languages referred to in Tamil works; |