Word |
English & Tamil Meaning |
---|---|
சிந்தைகல - த்தல் | cintai-kala-, v. intr. <>சிந்தை +. To be of one mind; மனமொத்தல். சிந்தைகலந்த சகியாகச்சேர்ந்து (உத்தரரா. அனுமப். 45). |
சிந்தைகூரியன் | cintai-kūriyaṉ, n. <>id. +. 1. Sharp, keen-witted person; கூரியபுத்தியுள்ளவன். 2. The planet Mercury; |
சிந்தைசெய் - தல் | cintai-cey-, v. tr. <>id. +. 1. To remember, bear in mind; ஞாபகத்தில் வைத்தல். 2. To meditate upon, reflect; 3. To care for, to be anxious about; |
சிந்தைவிளக்கு | cintai-viḷakku, n. <>id. +. (Jaina.) Clairvoyance. See அவதிஞானம். சிந்தை விளக்கிற் றெரிந்தோ னாயினும். (சிலப். 10, 167). . |
சிப்பந்தி | cippanti, n. <>U. sibandī. Establishment of clerks, etc.; வேலைக்காரர். (w.) |
சிப்பந்திப்பொறுப்பு | cippanti-p-poṟuppu n. <>சிப்பந்தி +. Lands in the occupation of persons belonging to the establishment of Mīṉākṣi temple at Madura, originally granted rent-free but subsequently burdened with a tribute during the muhammadan Government; ஆதியில் இறையிலியாகவும் முகம்மதியர் அரசாங்கத்தில் வரிக்குட்படுத்தப்பட்டதாகவும் மதுரையில் மீனாட்சி கோயிலைச்சார்ந்த வேலைக்காரர்க்கு விடப்பட்ட நிலம். (G. Mr. D. I, 199.) |
சிப்பம் 1 | cippam, n. <>T. cippamu. [M. cippam.] (w.) 1. Parcel, bundle; சிறுமுட்டை. 2. A man's load of tobacco leaves; |
சிப்பம் 2 | cippam n. prob. svalpa. A little, trifle; அற்பம். (J.) |
சிப்பம் 3 | cippam n. <>šilpa. Architecture, statuary art, artistic fancy work; சிற்பம். கடிமலர்ச் சிப்பமும் (பெருங். உஞ்சைக். 34, 167). |
சிப்பமுத்து | cippa-muttu, n. cf id. + muktā. [T. cippamuttamu.] Artificial pearl; செயற்கைமுத்து. |
சிப்பல் | cippal, n. [T. sibbi, K. cibbalu.] Colander, perforated rice-strainer; கஞ்சிவடித்தல் முதலியவற்றிற்குதவும் தட்டு. Colloq. |
சிப்பற்றட்டு | cippaṟṟaṭṭu, n. <>சிப்பல் +. See சிப்பல். . |
சிப்பாதிமூலி | cippāti-mūli, n. Species of cleome. See தைவேளை. (மலை.) . |
சிப்பாய் | cippāy, n. <>U. sipāhī. Sepoy; இந்தியப் போர்ச்சேவகன். |
சிப்பி 1 | cippi, n. <>Pkt. šippī <>šukti. 1. Shell; முத்து முதலியவற்றைப் பொதிந்திருக்கும் ஓடு. 2. Shell-fish; 3. Coconut-shell for measuring out curds; |
சிப்பி 2 | cippi, n. prob. šilpin. 1. See சிற்பி. . 2. Tailor; |
சிப்பிச்சுண்ணாம்பு | cippi-c-cuṇṇāmpu, n. <>சிப்பி1 +. Shell-lime; கிளிஞ்சிலை நீற்றியெடுத்த சுண்ணாம்பு. (w.) |
சிப்பித்தட்டு | cippi-t-taṭṭu, n. See சிப்பல். (இந்துபாக. 62.) . |
சிப்பிநீறு | cippi-nīṟu, n. <>சிப்பி1 +. See சிப்பிச்சுண்ணாம்பு. (w.) . |
சிப்பியச்சு | cippi-y-accu, n. <>சிப்பி2 +. Goldsmith's mould for making shell-shaped pendants; சங்கிலியிற் கோத்தற்குரிய மணிகள் செய்ய உதவும் கம்மியர் அச்சு. (J.) |
சிப்பியவேலை | cippiya-vēlai, n. <>id. +. Any curious workmanship; fancy needle-work; விசித்திரவேலை. (w.) |
சிப்பியன் | cippiyaṉ, n. <>šilpin, [T. cippevādu, K cippiga, Tu. cippige.] 1. Fancyworker, engraver; கம்மியன். (w.) 2. Tailor; |
சிப்பிலி 1 | cippili, n. Sea-fish in backwaters, purplish, Scatophagus argus; கழிமுகங்களில் வந்து சேரும் கடல்மீன் வகை. |
சிப்பிலி 2 | cippili, n. See சிப்பல். . |
சிப்பிலித்தட்டு | cippili-t-taṭṭu, n. <>சிப்பிலி2 +. See சிப்பல். . |
சிபாய் | cipāy, n. See சிப்பாய். . |
சிபார்சு | cipārcu, n. <>U. sifārish. Recommendation; ஒருவனைக் குறித்துப் பிறனிடம் ஆதரித்து பேசும் பேச்சு முதலியன. Loc. |
சிபாரிசு | cipāricu, n. <>id. See சிபார்சு. (w.) . |
சிபாருகம் | cipārukam, n. <>šiphā-ruha. Banyan tree. See ஆல். (மூ. அ.) . |
சிபி | cipi, n. <>šibi. A king of the solar race, renowned for his liberality; வள்ளன்மையிற் பேர் பெற்ற சூரியவமிசத்தரசன். |
சிம்சுமாரசக்கரம் | cimcumāra-cakkaram, n. <>šimšumāra +. The pole-star. See துருவசக்கரம். . |