Word |
English & Tamil Meaning |
---|---|
சிறுகொன்றை | ciṟu-koṉrai, n. <>id. +. A variety of small-sized cassia tree; கொன்றை வகை. (பதார்த்த.205.) |
சிறுகோரை | ciṟu-kōrai, n.<> id. +. A kind of sedge; கோரைவகை. (W.) |
சிறுகோல் | ciṟu-kōl, n.<> id. +. A measuring rod = 4 cubits; 4 முழங்கொண்ட அளவுகோல். (யாழ்.அக.) |
சிறுச்சிறிது | ciṟu-c-ciṟitu, adv. <> id. +. Little by little, gradually; கொஞ்சங்கொஞ்சமாக. செங்கண் சிறுச்சிறிதே யெம்மேல் விழியாவோ (திவ்.திருப்பா.22). |
சிறுச்செய் | ciṟu-c-cey, n. <> id. +. See சிறுசெய். (யாழ்.அக.) . |
சிறுசண்பகம் | ciṟu-caṇpakam, n. <> id. +. See சிறுசெண்பகம். (திவா.) . |
சிறுசணல் | ciṟu-caṇal, n. <> id. +. Linseed and flax plant, Linum usitatissimum; சணல்வகை. (M. M.) |
சிறுசவளம் | ciṟu-cavaḷam, n. <> id. +. Dart, javelin; குந்தப்படை. (பிங்.) |
சிறுசவுக்கு | ciṟu-cavukku, n. <> id. +. Tamarisk. See கோடைச்சவுக்கு. (L.) . |
சிறுசாமம் | ciṟu-cāmam, n. <> id. + yāma. Minor watch of an hour and a half; மூன்றே முக்கால் நாழிகைகொண்ட பொழுது. (W.) |
சிறுசாமை | ciṟu-cāmai, n. <> id. + சாமை. A kind of little millet, Panicum; சாமைவகை. (சங்.அக.) |
சிறுசிட்டாஞ்சி | ciṟu-ciṭṭāci, n. <> id. +. A kind of paddy; நெல்வகை. (A.) |
சிறுசிவிங்கி | ciṟu-civiṅki, n. <> id. +. A kind of small-sized panther; விலங்குவகை. |
சிறுசின்னம் | ciṟu-ciṉṉam, n. <> id. +. A kind of clarionet; ஒருவகைக் குழற்கருவி. (பிங்.) |
சிறுசின்னி | ciṟu-ciṉṉi, n. <> id. +. A species of copper leaf, Acalypha; செடிவகை. (பதார்த்த.536.) |
சிறுசுளகு | ciṟu-cuḷaku, n. <> id. +. A kind of small-sized winnowing fan; சிறுமுறம். சிறுசுளகும் மணலுங் கொண்டு (திவ்.நாய்ச்.2, 8). |
சிறுசூடு | ciṟu-cūṭu, n. <> id. +. Gentle heat; இளஞ்சூடு. Loc. |
சிறுசெங்குரலி | ciṟu-ceṅ-kurali, n. <> id. +. A mountain creeper; கருந்தாமக்கொடி. சேடல் செம்மல் சிறுசெங்குரலி (குறிஞ்சிப்.82). |
சிறுசெண்பகம் | ciṟu-ceṇpakam, n. <> id. + campaka. Cananga flower tree, m.tr., Cananga odoratum; செடிவகை. சிறுசெங்குரலியுஞ் சிறுசெண்பகமும் (பெருங்.இலாவாண.12, 29). |
சிறுசெய் | ciṟu-cey, n. <> id. +. Small cultivated plot, garden bed; பாத்தி. (சூடா.) |
சிறுசெருப்படி | ciṟu-ceruppaṭai, n. <> id. +. A species of ceruppaṭi with small leaves; செருப்படிவகை. (W.) |
சிறுசெருப்படை | ciṟu-ceruppaṭai, n. <> id. +. A prostrate shrub, Glinus dictamnoides; கொடிவகை. (A.) |
சிறுசொல் | ciṟu-col, n. <> id. +. 1. Slighting language, word of contempt; இழிசொல். சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை (புறநா. 72). 2. Censure, reproach; |
சிறுசோற்றுவிழவு | ciṟu-cōṟṟu-viḻavu, n. <> id. + சோறு +. A festive celebration on which balls of cooked rice mixed in curd and some others ingredients are distributed; சோற்றைத் தயிர் முதலியவற்றோடு கலந்து உருண்டைகளாக்கி அவற்றை வருவோர்க்குக் கொடுத்து மகிழுங் கொண்டாட்டம் (புறநா.33, உரை.) |
சிறுசோறடுதல் | ciṟu-cōṟaṭutal, n. <> id. +. Section of peṇ-pāṟ-piḷḷai-t-tamiḻ which describes the stage of childhood in which the heroine of the poem cooks toy food of sand, one of ten; பெண்பாற்பிள்ளைத்தமிழில்வரும் பத்துப் பருவங்களுள் தலைவி மணற்சோறு. சமைக்கும் பருவத்தைப் பூனைந்துகூறும் பகுதி (பிங்.) |
சிறுசோறு | ciṟu-cōṟu, n. <> id. +. 1. Toy food of sand, in girls' play; பிள்ளைகள் விளையாட்டாகச் சமைக்கும் மணற்சோறு. சிறுசோ றமைத்தருந்த (திருவானை, உலா. 222). 2. A kind of rice-preparation flavoured with spices; |
சிறுத்தை | ciṟuttai, n. <>சிறு1-. [T. ciruta, K. ciṟate.] Panther, puma, Felis pardus; சிறுபுலிவகை. |
சிறுத்தொண்டநாயனார் | ciṟu-t-toṇṭanāyaṉār, n. <>சிறு-மை+. A canonized šaiva saint, commander-in-chief of a Pallava king and contemporary of Tiru-āṉa-campantar, one of 63; நாயன்மார் அறுபத்துமூவரில் பல்லவ அரசனது சேனைத்தலைவரும் திருஞானசம்பந்தர்காலத்து வருமான சிவனடியார் (பெரியபு.) |
சிறுதக்காளி | ciṟu-takkaḷi, n. <> id. +. 1. Black nightshade. See மணத்தக்காளி. (மலை.) . 2. Small Indian winter-cherry; See பிள்ளைத்தாக்காளி. (M. M.) |
சிறுதகரை | ciṟu-takarai, n. <> id. +. Fetid cassia. See தகரை. (L.) . |