Word |
English & Tamil Meaning |
---|---|
சிறுப்பனை | ciṟu-p-paṉai, n. prob. சிறுப்பம். 1. Meanness, baseness; இழிவு. (W.) 2. Indigence; 3. Disrespect; 4. Trouble, worry; |
சிறுப்பி - த்தல் | ciṟuppi, 11 v. tr. Caus. of சிறு-. 1. To reduce, diminish; சிறுகப்பண்ணுதல். 2. To show scant courtesy to, to treat disrespectfully; |
சிறுப்பெரியார் | ciṟu-p-periyār, n. <>சிறு-மை+. Small persons affecting greatness; சிறுமைக்குணங்கொண்டு பெரியார்போலத் தோன்றுபவர். சினந்திருத்துஞ் சிறுப்பெரியார் குண்டர் (தேவா. 321, 6). |
சிறுபகன்றை | ciṟu-pakaṉṟai, n <>id. +. A species of water-thorn, Ruellia balsamica; பூடுவகை. (மூ. அ.) |
சிறுபசளை | ciṟu-pacaḷai, n <>id. +. Largeflowered purslane, Portulaca telophioides; பசலைவகை. (A.) |
சிறுபஞ்சமூலம் | ciṟu-paca-mūlam, n. <>id. + paca-mūla, 1. Compound medicine prepared from the roots of five herbs, viz., Ciru-vaḻutuṇai, ciṟu-neruci, ciṟu-mallikai, peru-mallikai, kaṇṭaṅ-kattari opp. to Perum-paca-mūlam; சிறுவழிதுணை சிறுநெருஞ்சி, சிறுமல்லிகை, பெருமல்லிகை, கண்டங்கத்தரி என்ற ஐந்தன் வேர்களும் சேர்ந்த மருந்து. 2. An ancient didactic work of 100 stanzas by kāri-y-ācāṉ, each stanza inculcating five virtues, one of patiṉ-en-kīḻ-k-kaṇakku, q.v.; |
சிறுபட்டி | ciṟu-paṭṭi, n. <>id.+. Unruly youngster; கட்டுக்கடங்காத இளைஞன். நோதக்க செய்யுஞ் சிறுபட்டி (கலித். 51). |
சிறுபதம் | ciṟu-patam, n. <>id. +. 1. Path, foot-path; வழி. (திவா.) 2. Water, as food; |
சிறுபயறு | ciṟu-payaṟu, n. <>id.+. 1. Green gram, phaseolus mungo; பாசிப்பயறு. சிறுபயறு நெரித்துண்டாக்கிய பருப்பு (திவ். பெரியாழ். 2, 9, 7, வ்யா.) 2. Field gram, phaseolus trilobus; |
சிறுபயிர் | ciṟu-payir, n. <>id. +. Minor crop that can be raised in a short period; சிறிது காலத்தில் விளையும் பயிர். Nā. |
சிறுபருப்பு | ciṟu-paruppu, n. <>id. +. Green gram, pulse; பச்சைப் பயற்றம்பருப்பு. செந்நெலரிசி சிறுபருப்புச் செய்த வக்காரம் (திவ். பெரியாழ். 2, 9, 7). |
சிறுபறை | ciṟu-paṟai, n. <>id. +. 1, Small drum; ஒருவகைத் தோற்கருவி. யாழுங் குழலு மரிச்சிறு பறையும் (பெருங். உஞ்சைக். 37, 90). 2. See சிறுபறைப்பருவம். (இலக். வி. 806) |
சிறுபறைப்பருவம் | ciṟu-paṟai-p-paruvam, n. <>id. +. Section of āṇpāṟ-piḷḷai-t-tamiḻ which describes the stage if childhood in which the hero plays on a small drum. one of ten; தலைவன் சிறுபறை வைத்துக்கொண்டு அடித்து விளையாடும் பருவத்தைச் சிறப்பிக்கும் ஆண் பாற்பிள்ளைத்தமிழ்ப் பகுதி. |
சிறுபாடு | ciṟu-pāṭu, n. <>id. +. See சிறுதேட்டு. உம்முடைய சிறுபாட்டு வகையிலிருந்து ஒன்றுந் தரவேண்டாம். Nāṉ. . |
சிறுபாண்டரங்கன் | ciṟu-pāṇṭaraṅkaṉ, n. <>id. +. A poet of the middle Tamil sangam; இடைச்சங்கப் புலவருள் ஒருவர். (இறை. 1, 5.) |
சிறுபாணாற்றுப்படை | ciṟu-pāṇ-āṟṟu-p-paṭai, n. <>id. +. An idyll by Nallūr Nattattaṉār on the chief Nalliyakkōṭan of ōymā-nāṭu, one of Pattuppāṭṭu q.v.; ஒய்மாநாட்டு நல்லியக்கோடனென்ற தலைவன்மேல் நல்லூர் நத்தத்தனார் பாடியதும் பத்துப்பாட்டினுள் ஒன்றுமான ஒன்றுமான நூல். |
சிறுபாம்பு | ciṟu-pāmpu, n. <>id. +. A small venomous reptile producing ringworm; அரிப்புத்தழும்பை உண்டாக்கக்கூடிய ஒர் விஷஜந்து. (W.) |
சிறுபாலடை | ciṟu-pālaṭai, n. <>id. +. A plant, Hedysarum diphyllum; பூடுவகை. (யாழ். அக.) |
சிறுபாலம் | ciṟu-pālam, n. <>id. +. Culvert; சிறிய பாலம். (C. E. M.) |
சிறுபாலா | ciṟu-pālā, n. <>id. +. Wild snake-gourd. See பேய்ப்புடல். (மலை.) . |
சிறுபாலி | ciṟu-pāli, n. <>id. +. Milkhedge; கள்ளி. |
சிறுபாளைச்சம்பா | ciṟu-pāḷai-c-campā, n. <>id. +. A kind of Campā paddy; சம்பாநெல்வகை. (A.) |
சிறுபான்மை | ciṟu-pāṉmai,. <>id.+. adv. 1. Sometimes, occasionally, opp. to Perum-pāṉmai; சிலவிடங்களில். சில சிறுபான்மை வருமே (பன்னிருபா. 264). 2. A few; |
சிறுபிராயம் | ciṟu-pirāyam, n. <>id. +. Childhood, youth, opp. to Mutir-pirāyam, இளவயது. colloq. |