Word |
English & Tamil Meaning |
---|---|
சிறுபிள்ளை | ciṟu-piḷḷai, n. <>id. +. Child, infant, youngster; பாலப்பருவத்து ப்பிள்ளை என் கண் சிறுபிள்ளாய் வருகென்றே (திருப்போ. சந். வண்ணித்தாழிசை, 1) |
சிறுபீங்கா | ciṟu-pīṅkā, n. Wild almond myrobalan. See நாட்டுவாதுமை. (A.) . |
சிறுபுடையன் | ciṟu-puṭaiyaṉ, n. <>சிறு-மை + புடையன். Small wart-snake, Acrochordidae; பாம்புவகை. (M. M. 700.) |
சிறுபுள்ளடி | ciṟu-puḷḷati, n. <>id. +. Scabrous ovate unifoliate tick-trefoil, m.sh., Desmodium latifolium; செடிவகை. (பதார்த்த. 366.) |
சிறுபுள்ளுநோய் | ciṟu-puḷḷu-nōy, n. <>id. +. A kind of cattle disease; மாட்டுநோய்வகை. (மாட்டுவா. 121.) |
சிறுபுறம் | ciṟu-puṟam, n. <>id. +. 1. Nape, back, of the neck, as the small side; பிடர். செயத் தகு கோவையிற் சிறுபுற மறைத்து (சிலப். 6, 102). 2. Back; 3. Small gift; |
சிறுபுன்னை | ciṟu-puṉṉai, n. <>id. +. Small poon. Calophyllum wightianum; புன்னைவகை. (L.) |
சிறுபூச்சி | ciṟu-pūcci, n. <>id. +. Worm, Ascarides; புழு. Loc. |
சிறுபூலா | ciṟu-pūlā, n. <>id. +. A shrub; பூடுவகை. (A.) |
சிறுபூளை | ciṟu-pūḷai, n. <>id. +. A common wayside weed, Aerua lanata; நடைவழியில் முளைக்கும் ஒருவகைப்பூடு. அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய்ச் சென்று (சிலப். 9, 43). |
சிறுபூனைக்காலி | ciṟu-pūṉaikkāli, n. <>id. +. Leschenault's mountain passion-flower. See சிமிக்கிப்பூ. (பதார்த்த. 577.) . |
சிறுபொழுது | ciṟu-poḻutu, n. <>id. +. Divisions of the day, six in number, viz., Mālai, iṭai-yāmam, viṭiyal, kālai, naṇpakal, eṟpāṭu or five in number viz., mālai, yāmam, vaikaṟai, eṟpaṭukālai, naṇpakal, dist. fr. perum-poḻutu; மாலை இடையாமம், விடியல், காலை, நண்பகல், ஏற்பாடு (தொல். பொ. 6, உரை.) என அறுவகையாகவும், மாலை, யாமம், வைகறை, எற்படுகாலை, நண்பகல் (நம்பியகப். 12.) என ஐவகையாகவும் கூறப்படும் நாட்பிரிவு. |
சிறுமகன் | ciṟu-makaṉ, n. <>id. +. 1. Fool, ignoramus; அறிவில்லாதவன். தீத்திற மொழிகெனச்சிறுமக னுரைப்போன் (மணி. 16, 117). 2. See சிறியன் . |
சிறுமட்டம் | ciṟu-maṭṭam, n. <>id.+. (J.) 1. Pony, nag சிறு குதிரை. 2. Small measure; 3. Young plantain tree 4. Young elephant; 5. Short young man or woman; |
சிறுமணி | ciṟu-maṇi, n. <>id. +. 1.Tiny bell tied in a string around a child's waist or foot; சதங்கை. (குடா.) 2. A king of campāpaddy maturing in six months; |
சிறுமணிக்கொட்டுவான் | cīṟu-maṇi-k-koṭṭuvāṉ, n. <>id. +. A water-bird; நீர்ப்புள்வகை. (யாழ். அக.) |
சிறுமணிப்பயறு | ciṟu-maṇi-payaṟu, n. <>id. +. Asparagus bean, Vigna catjang; காராமணிவகை. |
சிறுமணியன் | ciṟu-maṇiyaṉ, n. <>id. +. A variety of Campā paddy; சம்பாநெல்வகையுள் ஒன்று. Tj. |
சிறுமயிற்கொன்றை | ciṟu-mayiṟ-koṉṟai, n. <>id. +. Peacock-flower tree. See மயிர்கொன்றை. (L.) . |
சிறுமல் | ciṟumal, n. A common climber with many thickened fleshy roots. See தண்ணீர் விட்டான். (மலை.) . |
சிறுமல்லி | ciṟu-malli, n. <>சிறு-மை+. See சிறுமல்லிகை. (சங். அக.) . |
சிறுமல்லிகை | ciṟu-mallikai, n. <>id. +. Wild Jasmine, m.cl., jasminum angustifolium; மல்லிகை வகை. (சங். அக.) |
சிறுமலை | ciṟu-malai, n. <>id. +. 1. Hill, hillock; பொற்றை. (குடா.) 2. A mountain range in madura district noted for its plantain fruits; |
சிறுமலையரியன் | ciṟu-malai-y-ariyaṉ, n. <>id. +. A kind of paddy; நெல்வகை. (A.) |
சிறுமழை | ciṟu-maḻai, n. <>id. +. Drizzle; சிறுதூறல். Loc. |
சிறுமாரோடம் | ciṟumārōṭam, n. Red catechu. See செங்கருங்காலி. (குறிஞ்சிப். 78.) . |
சிறுமி | ciṟumi, n. <>சிறு-மை. 1. Girl, maiden; இளம்பெண் சிறுமி தந்தையும் (சீவக. 1458). 2. Daughter; |
சிறுமியம் | cirumiyam, n. Mire, mud; சேறு. (சது.) |
சிறுமீன் | ciṟu-mīṉ, n. <>சிறு-மை +. 1. The star Arundhati; அருந்ததி. சிறுமீன் புரையுங் கற்பினறுநுதல் (பெரும்பாண். 303). 2. Loach. See அயிரை, 1. (பிங்.) |