Word |
English & Tamil Meaning |
---|---|
சினிபம் | ciṉipam, n. cf. sirīṣa. Sirissa, Albizzia; வாகை. (மலை.) |
சினீவாலி | ciṉīvāli, n. <>sinīvālī. The first day of the new moon when it rises with a scarcely visible crescent; சந்திரகலைதோன்றும் அமாவாசை நாள். (சூடா.) |
சினேகபந்து | ciṉēka-pantu, n. <>snēha + bandhu. Friend, considered a relative; நட்பினாற் சுற்றமானவன்.Colloq. |
சினேகபலம் | ciṉēka-palam, n. <>id. + phala. Sesame, as containing oil; [தைலத்தைக் கொண்டது] எள். (தைலவ.) |
சினேகபொட்டணம் | ciṉēka-poṭṭaṇam, n. <>id. +. Cloth soaked in oil or ointment and applied to a diseased limb மருந்துகளை அடக்கி எண்ணெயிற்றேய்த்து உடல்வலிக்கு ஒத்தடங் கொடுக்குத் துணிமுடிப்பு. (W.) |
சினேகம் | ciṉēkam, n. <>snēha. Friendship, intimacy, love; நட்பு. Oil, grease, unguent; |
சினேகவங்கணம் | ciṉēka-vaṅkaṇam, n. <>id. +. Friendliness, sociability; அளவளாவு கை. (W.) |
சினேகன் | ciṉēkaṉ, n. <>id. Friend நண்பன் |
சினேகி | ciṉēki, n. <>id. A female friend or associate; நட்புடையவள். |
சினேகி - த்தல் | ciṉēki-, 11 v. tr. <>snēha. To make friends with, form friendship; நட்புக்கொள்ளுதல். பன்னகத்தைச் சினேகித்து (பஞ்ச, அர்த்தநா. 25). |
சினேகிதம் | ciṉēkitam, n. <>snēhita. Friendship நட்பு |
சினேகிதன் | ciṉēkitaṉ, n. <>id. See சினேகன்.Colloq. . |
சினேகிதி | ciṉēkiti, n. See சினேகி.Loc. . |
சினேசதாரு | ciṉēca-tāru, n. True nutmeg சாதிக்காய். (மலை.) |
சினேசம் | ciṉēcam, n. See சினேசதாரு. (W.) . |
சினேந்திரமாலை | ciṉēntira-mālai, n. A treatise on horary astrology by Upēntirāciriyar; உபேந்திராசிரியர் செய்த தமிழ் ஆருடநு£ல். |
சினேந்திரன் | ciṉēntiraṉ, n. <>jinēndra. Arhat; அருகன். (திவா.) Buddha; |
சினை - த்தல் | ciṉai-, 11 v. intr. perh. jan. 1. To form, arise, come into being; தோன்றுதல். சினைப்பது போன்று (குறள், 1203). 2. To bud; 3. [M. cinekka.] To branch out on all sides; 4. To rise in pimples, as prickly heat; 5. To grow stout or fat, as a person-used in contempt; 6. [M. canekka.] To be impregnated, as animals; |
சினை | ciṉai, n. <> சினை-. [T. jena.] 1. Embryo or foetus of animals; pregnancy; விலங்கு முதலியவற்றின் சூல். சினைவளர் வாளையின் (பரிபா. 7, 38). 2. Spawn, eggs; 3. Flower-bud; 4. Branch of a tree; 5. Member, component part, limb; 6. cf. vamša. Bamboo; |
சினைப்படுத்து - தல் | ciṉai-p-paṭuttu-, v. tr. <>சினை+. See சினையாக்கு-, Loc. . |
சினைப்பருவம் | ciṉai-p-paruvam. n. <>id. +. Earing stage in the growth of paddy; நெற்கதிரில் மணிபிடிக்கும் பருவம். (W.) |
சினைப்பு | ciṉaippu, n. <>சினை-, (W.) Prickly heat; வெப்பத்தால் உடலில் உண்டாகும் வியர்க்குரு. 2.Becoming pregnant; 3.Fatness; |
சினைப்பூ | ciṉai-p-pū n. <>சினை+. Flowers on branches; See கோட்டுப்பூ. சினைப்பூப் போற்றளைவிட்ட (கலித். 118). |
சினைப்பெயர் | ciṉai-p-peyar, n. <>id. +. 1.Noun denoting part of the whole, as கண் உறுப்பைக் குறிக்கும் பெயர்.(கண்.132.) 2. Name formed from noun denoting part of the whole, as Kaṇṇaṉ; |
சினையாக்கு - த்தல் | ciṉai-y-ākku-, v. tr. <>id. +. 1. To impregnate; கருவுண்டாக்குதல். 2.To cause excessive trouble, annoy; |
சினையாகுபெயர் | ciṉai-y-āku-peyar, n. <>id. +. (Gram.) Synecdoche in which part is put for the whole, as வெற்றிலை நட்டான்; சினைப்பெயர் அதன் முதலுக்கு ஆகும் பெயர். (நன். 290, உரை.) |
சினையாறுபடுகை | ciṉai-y-āṟu-paṭukai, n. <>id. +. Oozing of water in a river-bed indicative of the coming freshet ; வெள்ளம் வருதற்குறியாக ஆற்றுநீர் பொசிகை. சினையாறுபடுகையாவது ஆறுநீர்வர அணித்தானால் பொசிந்து உள்ளே ஜலமுண்டாயிருக்கை (ஈடு,1,6,6,ஜீ.). |
சினையிட்டலி | ciṉai-y-iṭṭali, n. <>id. +. A kind of sweetened iṭṭali offered to pregnant women; கருப்பிணிகளுக்குக் கொடுக்கும் இட்டலிவகை. Tinn. |