Word |
English & Tamil Meaning |
---|---|
சீக்கிரகேந்திரம் | cīkkira-kēntiram, n. <>šighra-kēndra. (Astron.) Commutaion, the angular distance of the sun from a planet; சூரியனுக்குங் கிரகத்துக்குமுள்ள கோணவளவுத் து£ரம். (W.) |
சீக்கிரதை | cīkkiratai, n. <>šighratā. See சீக்கிரம்,1. (யாழ். அக.) . |
சீக்கிரப்படு - தல் | cīkkira-p-paṭu-, v. intr. <>šighra+. 1. To be in haste; to expedite, hasten; விரைவுபடுத்தல். 2. To be peevish, to take offence easily; |
சீக்கிரபரிதி | cīkkira-pariti, n. <>id.+pari-dhi. (Astron.) Annual parallax of a superior planet or elongation of an inferior planet; கிரகத்தின் தூரக்கோண வளவு. (W.) |
சீக்கிரபுத்தி | cīkkira-putti, n. <>id. + buddhi. Hastiness, rashness; அவசரபுத்தி. |
சீக்கிரம் | cīkkiram, n. <>šighra. 1. Haste, speed; விரைவு. (திவா.) 2. Intensity, severity, rapidity; acuteness, as of disease; 3. Acerbity, pungency, as of tobacco, spirituous liquors; 4. šīghra=vēga=kōpa. Anger, irritability; 5. See சீக்கிரபரிதி. 6. A small hack palankeen-carriage; |
சீக்கிரவரை | cīkkira-v-arai, n. <>id. + அரை. (Astron.) First equated geocentric longitude; சுத்தஸ்புடத்தில் முதலாவதாகத் தீர்க்கும் வாக்கியப் பிழை. (W.) |
சீக்கிராத்தம் | cīkkirāttam, n. <>id. + ardha. See சீக்கிரார்த்தம். (W.) . |
சீக்கிராம் | cīkkirām, n. See சீக்கிரி. (மலை.) . |
சீக்கிரார்த்தம் | cīkkirārttam, n. <>šighra+ardha. (Astron.) See சீக்கிரவரை . (W.) . |
சீக்கிரான் | cīkkirāṉ, n. See சீக்கிரி. (மலை.) . |
சீக்கிரி | cīkkiri, n. Black sirissa, l.tr., Albizzia amara; ஒருவகை மரம். (பிங்.) |
சீக்கிரியன் | cīkkiriyaṉ, n. See சீக்கிரி. (யாழ். அக.) . |
சீக்கிரியான் | cīkkiriyāṉ, n. See சீக்கிரி. (மலை.) . |
சீக்கு 1 | cīkku, n. <>சீ-. Rubbish.See செத்தை. (யாழ்.அக.) . |
சீக்கு 2 | cīkku, n. <>E. sick. Sickness, disease; நோய். |
சீக்குப்புள்ளி | cīkku-p-puḷḷi, n. <>id. +. See சீக்காளி. Loc. . |
சீக்குரு | cīkkuru, n. <>šigru. Horse-radish tree.See முருங்கை. (மலை.) . |
சீக்கூட்டு - தல் | cī-k-kūṭṭu-, v. intr. <>சீ2+. See சீக்கட்டு-, (W.) . |
சீக்கூட்டுவிரியன் | cī-k-kūṭṭu-viriyaṉ, n. <>சீக்கூட்டு-+. Pus-viper, as causing pus to form by its bite; தன் கடியால் சீயை உண்டாக்கும் விரியன்பாம்பு வகை. Loc. |
சீக்கை | cīkkai, n. <>சீ2. Phlegm; கோழை. சீக்கை விளைந்தது (திருமந். 147). |
சீகண்டர் | cīkaṇṭar, n. <>šrī-kaṇṭha. A manifestation of šiva, as having poison-stained neck; [விஷத்தாற் கரிய கழுத்தையுடையவர்] சிவமூர்த்தவகையுள் ஒன்று. அனந்தர் சீகண்டர் செய்யுந் தொழிலும் (சி. சி.1, 19, சிவஞான.). |
சீகண்டருத்திரர் | cīkaṇṭa-ruttirar, n. <>id. +. See சீகண்டர். (சி. போ. பா. 0.) . |
சீகத்தம் | cī-kattam, n. <>šri+hasta. Comely, graceful hand, as of God; அழகிய கை. சீகத்த மாத்திரை திண்பிரம் பாகுமே (திருமந்.1663). |
சீகம் | cīkam, n. Carambola apple tree.See தமரத்தை. (மலை.) . |
சீகம்புல் | cīkam-pul, n. <>சீகு-+. Broomgrass. See ஊகம்1, 3. (W.) . |
சீகரம் 1 | cīkaram, n. <>šikara. 1. Drop of water; நீர்த்துளி. சீகர மகரவேலைக் காவலன் சிந்த (கம்பரா. மாரீசன். 14 ). 2. Hail-stone; 3. Rain; 4. Wave, ripple; |
சீகரம் 2 | cīkaram, n. <>šrīkara. 1. Prosperity, fortune; செல்வச் செழிப்பு. சீகர மிக்கசூர் (கந்தபு. சயந்தன்பு. 20 ). 2. Yak-tail fan, as a symbol of prosperity; |
சீகரி | cīkari, n. <>šīkara. Water-drop; நீர்த்திவலை. (W.) |
சீகா | cīkā, n. perh. sīsādi. The five metals; பஞ்சலோகம். (R.) |
சீகாமரம் | cīkāmaram, n. <>šri +. (Mus.) An ancient secondary melody-type of the marutam class; மருதயாழ்த்திறங்களுள் ஒன்று. (பிங்.) |
சீகாரம் | cikāram n. cf. சீகாமரம். (Mus.) A melody-type; பண்வகை. (சங்.அக.) |
சீகாரியம | cī-kāriyam, n. <>šrī +. Management of sacred buildings and institutions; ஸ்ரீகாரியம். ராஜராஜீசுவரம் உடையார்கோயில் சீகாரியஞ் செய்வானுக்கும் (S. I. I. ii, 311). |