Word |
English & Tamil Meaning |
---|---|
சீமந்தகலியாணம் | cīmanta-kaliyāṇam, n. <>sīmanta +. See சீமந்தம் . |
சீமந்தபுத்திரன் | cīmanta-puttiraṉ, n. <>id. +. Son born after the cīmantam ceremony; சீமந்தச் சடங்கு செய்துகொண்தும் பிறந்த பிள்ளை. |
சீமந்தபுத்திரி | cīmanta-puttiri, n. <>id. +. Daughter born after the cīmantam ceremony; சீமந்தச் சடங்கு செய்துகொண்டதும் பிறந்த பெண். |
சீமந்தம் | cīmantam, n. <>sīmanta. Purificatory ceremony of parting the hair, performed in the sixth or eighth month of the first pregnancy of a woman; முதற்கர்ப்பத்தில் ஆறு அல்லது எட்டாம் மாதத்தில் கருக்கொண்ட பத்தினிக்குச் செய்யப்படுஞ் சடங்கு. ஆறாமதியி லுயர்சீமந்தம் (காசிக. பிரமச.3). |
சீமந்தரேகை | cīmanta-rēkai, n. <>id. +. Line formed by the parted hair on woman's head; பெண்களின் தலைமயிரை வகிர்தலால் உச்சியில் உண்டாகும் இரேகை. கூந்தற் சீமந்தரேகை காட்டும் (சேதுபு.நாட்டுப்.91). |
சீமந்தஜேஷ்டன் | cīmanta-jēṣṭaṉ, n. <>id. +. Eldest brother born after the cīmantam ceremony; சீமந்தபுத்திரனான தமையன். Brāh. |
சீமம் | cīmam, n. <>sīman. Boundary, limit; எல்லை. (பிங்.) |
சீமாட்டி | cīmāṭṭi, n. [T. sīmāṭi.] Lady, wealthy woman; செல்வமுள்ளவள். சீமாட்டி யுன் பிள்ளை பரதன் (இராமநா. அயோத். 6). |
சீமாவிவாதம் | cīmā-vivātam, n. <>sīmā +. Boundary dispute; எல்லையைப்பற்றிய வழக்கு. (I. M. P. Tp. 756.) |
சீமாள் | cīmāḷ. n. <>šrīmat. See சீமாட்டி. (யாழ். அக.) . |
சீமான் | cīmāṉ n. <>šrīmān nom. sing. of šrīmat. 1. Lord, wealthy man; செல்வமுள்ளவன். 2. Arhat; |
சீமுக | cīmuka, n. <>šrī-mukha. The seventh year of the Jupiter cycle; அறுபது ஆண்டுகளுள் ஏழாவது. (பெரியவரு.) |
சீமுகம் | cīmukam, n. <>id. Letter from a holy person.See ஸ்ரீமுகம். (W.) . |
சீமூத்திரம் | cī-mūttiram, n. <>சீ2+. Chyluria; சீயாகவயும் முத்திரரோகம். (M.L.) |
சீமூதம் | cīmūtam, n. <>jīmūta. 1. Raincloud; நீருண்ட மேகம். (பிங்.) சீமுதமூர் வலாரி மடமகள் (திருப்பு. 326). 2. Earnestness, zeal; 3. Mountain; 4. Female elephant; |
சீமூதை | cīmūtai, n. Common grape vine.See திராட்சை. (மூ.அ.) . |
சீமூலம் | cī-mūlam, n. <>சீ2+. Piles attended with discharge of pus; சீவடியும் முலரோகம். (W.) |
சீமை | cīmai, n. of. sīmā nom. sing. of sīman. 1. Boundary, limit; எல்லை. 2. Country, territory, province, district; 3. Western country, especially England; 4. Impertinent person; |
சீமைக்கத்தரி | cīmai-k-kattari, n. <>சீமை+. Egg plant; செடிவகை. |
சீமைக்கமலம் | cīmai-k-kamalam, n. <>id. +. Rose diamond, as cut in foreign countries; மேல்நாட்டில் பட்டைதீர்ந்த வயிரமணி. Colloq. |
சீமைக்கர்ப்பூரம் | cīmai-k-karppūram, n. <>id. +. Sage tea plant.See காட்டுக்கஞ்சாங்கோரை. (M.M.) . |
சீமைக்கரி | cīmai-k-kari, n. <>id. +. Coal; நீலக்கரி,Loc. |
சீமைக்கள்ளி | cīmai-k-kaḷḷi, n. <>id. +. Nutmeg-tree. See சாதிக்காய்மரம். Loc. . |
சீமைக்கற்றாழை | cīmai-k-kaṟṟāḻai, n. <>id. +. Giant mexican lily, l.sh., Furcrcea gigantea; தாழைவகை. (L.) |
சீமைக்காடி | cīmai-k-kāṭi, n. <>id. +. Vinegar imported from the western countries; சீமையிலிருந்து இறக்குமதிசெய்யப்படுங் காடி. |
சீமைக்காவிக்கல் | cīmai-k-kāvi-k-kal, n. <>id. +. Armenian bole, a soft clayey earth of bright red colour; காவிக்கல்வகை. (W.) |
சீமைக்கிச்சிலிக்கிழங்கு | cīmai-k-kiccili-k-kiḷaṅku, n. <>id. +. Camphor zedoary, See கிச்சிலிக்கிழங்கு .(L.) . |
சீமைக்கொஞ்சி | cīmai-k-koci, n. <>id. +. China box. See கருவேப்பிலை. (L.) . |
சீமைக்கொட்டைக்களா | cīmai-k- koṭṭai-k-kaḷā, n. <>id. +. Thornless long-leaved sweet thorn, s.tr., Flacourtia inermis; மரவகை. |
சீமைக்கொய்யா | cīmai-k-koyyā, n. <>id. +. Chinese guava, s.tr., Psidium cattleyianum; கொய்யாவகை. (L.) |
சீமைக்கொன்றை | cīmai-k-koṉṟai, n. <>id. +. Red Indian laburnum, m.tr., Cassia marginata; கொன்றைவகை. (L.) |