Word |
English & Tamil Meaning |
---|---|
சீறல் | cīṟal, n. <>சீறு-.. 1. Fury, rage; பெருங்கோபம். (திவா.) 2. Assafoetida; |
சீறளவு | cīṟaḷavu, n. <>சீறு-மை+ அளவு. Measuring grain without nheaping it above the top of the measure; தலைகட்டாமல் அளக்கும் அளவு. |
சீறாப்புராணம் | cīṟa-p-purāṇam, n. <>Arab. A poem on the life of Muhammad, by Umāṟu-p-pulavar, 17th c.; 17ஆம் நூற்றாண்டில் முகமது நபியின் சரித்திரம்பற்றி உமாறுப்புலவர் இயற்றிய காவியம் |
சீறியகற்பு | cīṟiya-kaṟpu, n. <>சீறு-+. Chastity militant which actively guards and upholds its dignity, dist. fr. āṟiya-kaṟpu; மறக்கற்பு. ஆறியக்கற்புஞ் சீறியகற்பு மெனக் கற்பு இரு வகை. (சிலப்.பதி, 42, அரும்) |
சீறியழு - தல் | cīṟr-y-aḻu-, v. intr. <>id. +. To scream out loudly, as a child; குழந்தை அலறியழுதல். Loc |
சீறியாழ் | cīṟiyāḻ n. <>சீறு-மை + யாழ். A small lute; சிறிய யாழ். கருங்கோட்டுச் சீறியாழ் (புறநா.127) |
சீறில் | cīṟil, n. <>id. + இல். Small house; சிறுவீடு. சீறின் முன்றி லிருந்த முதுவாய்ச்சாடி (புறநா. 319). |
சீறிவிழு - தல் | cīṟi-viḻu-, v. intr. <>சீறு- +. 1. To fall into a rage and attack; மிகுசினத்தால் சுத்தமிட்டுக்கொண்டு ஒருவன்மேற் பாய்தல். 2. To get enraged; |
சீறு 1 - தல் | cīṟu-, 5 v. [K. M. ciṟu.] intr. 1. [T. cīru.] To hiss, as a serpent; பாம்புமுதலியன சத்தத்துடன் வெகுளுதல். 2. To snort, as a horse; to sniff; 3. To be infuriated, to swell with rage; 4. To roar and blaze forth, as a flame; 1. To get angry with; 2. To destroy; |
சீறு 2 | cīṟu, n.<>சீறு. Anger; சீற்றம். சீறில்லான் (ஏலாதி, 34) . |
சீறுசீறெனல் | cīṟu-cīṟeṉal, n. Onom. expr. signifying (a) vehemence in crying; அலறியழுதற் குறிப்பு. பிள்ளை சீறுசீறென் றழுகிறது. (b) violent anger; |
சீறுபாறெனல் | cīṟu-pāṟeṉal, n. onom. expr. signifying quarrelling ; முரண்படுதற்குறிப்பு.பூவோடே சீறுபாறென்னுங் கண் (திவ்.திருப்பா.13, வ்யா.140) . |
சீறுபூறெனல் | cīṟu-pūṟeṉal, n. Onom. expr. signifying (a) quarrelling with another attacking with fury; மூர்க்கத்தோடு தாக்குதற்குறிப்பு. (b) hard snoring; (c) roaring, as an approaching storm; |
சீறுமாறு | cīṟu-māṟu, n.Redupl. of சீறு-. 1. Confusion ; தாறுமாறு. 2. Ill-treatment ; |
சீறூர் | cīṟūr, n.<>சிறு-மை + ஊர். 1. Village, hamlet ; சிறிய ஊர். சீறூர்க் கோளிவண் வேண்டேம் புரவே (புறநா.297.) 2. Village in hilly tracts ; |
சீறெலி | cīṟeli, n.<>id. + எலி. Mouse. as a small species of rat; சுண்டெலி. (பிங்.) |
சீனக்கண்ணாடி | cīṉa-k-kaṇṇāṭi, n.<>சீனம் +. A kind of looking-glass, as from china ; சீனதேசத்துக் கண்ணாடி . |
சீனக்கர்ப்பூரம் | cīṉa-k-karppūram, n. See சீனச்சூடன். Loc. . |
சீனக்காக்கை | cīṉa-k-kākkai, n.<>id. +. A kind of crow ; காக்கைவகை. (யாழ்.அக.) |
சீனக்காரம் | cīṉa-k-kāram, n.<>id. + kṣāra. (M. cinakkāram.) Alum ; படிக்காரம். (பதார்த்த.1105.) |
சீனக்கிழங்கு | cīṉa-k-kiḻaṅku, n.<>id. +. Himalayan rhubarb, m.sh.,Rheum emodid ; செடிவகை. (பைசஜ.110.) |
சீனக்கிளி | cīṉa-k-kiḷi, n.<>id. +. Cockttoo, cacatuinaea; பெருங்கிளி . (W) |
சீனக்குடை | cīṉa-k-kuṭai, n.<>id. +. Paper-umbrella ; கடுதாசிக் குடை. (யாழ்.அக.) |
சீனக்கொழுஞ்சி | cīṉa-k-koḻuci, n.<>id. +. Lime-berry ; கத்துரியெலும்மிச்சை . |
சீனகர் | cīṉakar, n.<>id. The chinese ; சீனதேசத்தார். |
சீனச்சட்டி | cīṉa-c-caṭṭi, n.<>id. +. (M. cinaccaṭṭi.) A kind of metal ; ஒருவகை உருக்கு இரும்பு . |
சீனச்சூடன் | cīṉa-c-cūṭaṉ, n.<>id. +. A kind of camphor ; கருப்பூரவகை. சீனச்சூடனென்று பெயர்...கூறப்பட்ட (சிலப்.14, 109, உரை.) |
சீனட்டம் | cīṉaṭṭam, n. Goatsucker, caprimulgidae ; குருவிவகை. |