Word |
English & Tamil Meaning |
---|---|
சீவவனல் | cīva-v-aṉal, n. <>id. +. The three vital fires.See உயர்த்தீ. (திவா) . |
சீவற்சம் | cīvaṟcam, n. <>šrī-vatsa. 1. Mark or curl of hair on the chest of Viṣṇu ; திருமாலின் திருமார்பிலுள்ள மறு அல்லது மயிர்ச்சுழி; 2. Image of Lakṣmi carried on special occasions, as a symbol of auspiciousness; |
சீவன் | cīvaṉ n. <>jīva. 1. Individual soul; சீவன்மா. (பிங்); 2. Living being, animal; 3. Life, vitality; 4. Energy, spirit, strength; 5. Jupiter; 6. Magnet; |
சீவன்சம்பா | cīvaṉ-campā n. A kind of paddy; சம்பா நெல்வகை. (A.) |
சீவன்முத்தர் | cīvaṉ-muttar, n. <>jīvanmukta. Perfected souls who have obtained final deliverance whilst yet in this life, of four classes, viz., pirama-vittukkaḷ, pirama-varar, pirama-variyar, pirama-variṣṭar; பிரமத்துக்கள், பிரமரர், பிரமவரியர், பிரமவரிஷ்டர் என நால்வகையினராய் இம்மையிலேயே மூத்தராயினார். (கோயிற்பு.இரணியவன்ம.68) |
சீவன்முத்தி | cīvaṉ-mutti, n. <>jīvan-mukti. Final deliverance while still in this life; ஆன்மா இம்மையிலேயே முத்தியடைகை. திருவாலவாய் சீவன் முத்திதரும் (திருவிளை.தலவி.7) |
சீவனகம் | cīvaṉakam, n. <>jīvanaka. Cooked rice; சோறு. (சங்.அக) |
சீவனசேஷம் | cīvaṉa-cēṣam, n. <>jīvana +. Maintenance; சீவனத்திற்குரியது. பலபணி நிமந்தக்காரருக்குஞ் சீவனசேஷமாக..கொடுத்து (S.I.I.III,47) |
சீவனந்தேடு - தல் | cīvaṉan-tēṭu-, v. intr. <>சீவனம்+. 1. To seek means of living; பிழைக்கும்வழி நாடுதல். 2. To seek food, prey, as animals; |
சீவனம் | cīvaṉam, n. <>jīvana. 1. Living, sustaining life; சீவிக்கை. 2. Livelihood, means of sustenance; 3. Water; 4. Rice-water; |
சீவனாதாரம் | cīvaṉātāram, n. <>id. + ஆதாரம். 1. See சீவனாம்சம் . 2. See சிவனோபாயம். 3. See சீவாதாரம் |
சீவனாம்சம் | cīvaṉāmcam n. <>id. + amša. Maintenance, subsistence allowance, as given to a widow; விதவை முதலியோருடைய சீவனத்துக் கென்று கொடுக்கும் பொருள். |
சீவனாளி | cīvaṉ-āḷi, n. <>சீவன் +ஆள்- Living being; உயிர்ப்பிராணி. (யாழ்.அக) |
சீவனி 1 - த்தல் | cīvaṉi, 11 v. intr. <>jīvana. To maintain oneself, to make a living; சீவனம் பண்ணுதல். (யாழ்.அக) |
சீவனி 2 | cīvaṉi, n. <>jīvanī. 1. Life-giving elixir, medicament that restores life; உயிர்தரு மருந்து. (பிங்). 2. (Mus.) A secondary melody-type of the cevvaḻi class; 3. A black stone. See மந்தாரச் சிலை. (w.) 4. Wedge-leaved ape-flower. See பாலை. (பிங்.) 5. Ivory-tree. See வெட்பாலை. (தைலவ. தைல. 13.) 6. Worm killer. See ஆடு தின்னாப்பாளை. (மலை.) 7. Purple yam. See செவ்வள்ளி. (மலை.) |
சீவனீயம் | cīvaṉīyam, n. <>jīvanīya. Water; நீர். (பிங்) |
சீவனோபாயம் | cīvaṉōpāyam, n. <>jīvana + upāya. Profession, occupation, as a means of living; பிழைப்புக்குரிய தொழில் |
சீவா | cīvā, n. See சீவனி2, 4. (மலை) . |
சீவாத்திகாயம் | cīvāttikāyam, n. <>jīva + astikāya. (Jaina.) (Jaina.) Jīva of ātman, the conscious sentient principle. See ஜீவாஸ்திகாயம். (திருநூற்.23, உரை) . |
சீவாத்துமா | cīvāttumā n. <>id. + ātman. Individual soul, opp. to paramāttumā; சிற்றுயிர். |
சீவாதாரம் | cīvātāram, n. <>id. + ādhāra. 1. Life's chief support the staff of life; வாழ்வுக்காதாரமானது. Colloq. 2. Body; 3. The world; |
சீவாளம் | cīvāḷam, n. <>T. jīvāḷamu. [K. jīvāḷa.] Piece of cord or wire attached to the strings of tampūru to regulate its sound; தம்பூருவின் இசையை நுண்ணிதாக அளவு படுத்தற்கு அதன் நரம்பில் தொடுக்கும் சிறுநூல். (W.) |
சீவான்மா | cīvāṉmā, n. <>jīvātman. See சீவாத்துமா. ஓங்கு சீவான்மாவினை (கூர்மபு.இந்திர.42) . |
சீவி 1 - த்தல் | cīvi-, 11 v. intr. <>jīv. 1. To live; உயிர்வாழ்தல்; 2. To make a living; 3. To be active, as the powers of the body or mind in wakeful hours; |
சீவி 2 | cīvi, n. <>jīvin. Living being; உயிருடைப்பொருள். (யாழ். அக.) |
சீவி 3 | cīvi,. n. prob. id. Sage-leaved alangium. See அழிஞ்சில் (மலை). . |