Word |
English & Tamil Meaning |
---|---|
சீலைப்பாய் | cīlai-p-pāy, n. See சீலம்பாய். (J.) . |
சீலைப்பிள்ளை | cīlai-p-piḷḷai, n. <>சீலை1 +. A doll made of cloth, dist. fr. ōlai-p-piḷḷai, சீலையினாற் செய்த பொம்மை. Nā |
சீலைப்புல் | cīlai-p-pul. n. A kind of grass, Panicum violaceum; புல்வகை. (W.) |
சீலைப்பேன் | cīlai-p-pēṉ, n. <>சீலை1 +. [T. cīrapēnu.] Lice in cloths; சீலையிற் பற்றும் பேன். பாழுந்துணி சீலைப்பே னொருநாண் மாறா (அரிச்.பு.சூழ்வினை.91) |
சீலைமண் | cīlai-maṇ, n. <>id. +. [T. cīlamannu.] Coat of clay on cloth spread over the mouth of a calcinatory pot ; மருந்துச்சட்டி வயினிற் சுற்றுந் துணிமேலிடும் மண்பூச்சு. |
சீலையுஞ்சை | cīlaiyucai, n. of. širīṣa. Fragrant sirissa.See கருவாகை. (L.) . |
சீலைவாகை | cīlai-vākai, n. <>id. +. Stipulate sirissa. See பீலிவாகை. (L.) . |
சீலைவாங்கியுடு - த்தல் | cīlai-vāṅki-y-uṭu-, v. intr. <>சீலை +. To accept a cloth from a man in token of marrying him, as a widow; விதவை ஒருவனிடமிருந்து புடைவைபெற்று அவனை மணம் புரிதல். Nā. |
சீலைவாளை | cīlai-vāḷai, n. Butter-fish, fresh-water, silvery shot with purple, attaining 1 1/2 ft. in length; ஒன்றரையடி நீளமுள்ள சொட்டைவாளை. |
சீவ | cīva, int. <>jīva. Expr. meaning 'May you live long'; 'நீடுவாழ்க' என்று வாழ்த்துதற் குறிப்பு. சினைமறைந் தொருகுரல் சீவ வென்றதே (சீவக.323) |
சீவகசிந்தாமணி | cīvaka-cintāmani, n. <>Jīvaka +. A jaina epic poem of which Jīvaka is the hero, composed by Tiruttakkatēvar , about the beginning of 10th c., one of paca- kāviyam , q.v.; சீவகனைத் தலைவனாக கொண்டதும் உத்தேசம் பத்தாம் நூற்றாண்டுத்தொடக்கத்தில் திருத்தக்கதேவரால் இயற்றப்பெற்றதும் பஞ்சகாவியத்துள் ஒன்றுமான ஒரு தொடர்நிலைச்செய்யுள் |
சீவகம் 1 | cīvakam, n. <>jīvaka. (மலை.) 1. Oval-leaved China root. See திருநாமப்பாலை. . 2. Indian kino tree. See வேங்கை. |
சீவகம் 2 | cīvakam, n. 1. Gum of the jujube tree; இலந்தைப் பிசின். (W.) 2. Cardamom; |
சீவகர் | cīvakar, n. <>jīvaka. Lit., beggars, Buddhist monks; [பிச்சைக்காரா] பௌத்த பிஷுக்கள். (திவா) |
சீவகளை | cīva-kaḷai, n. <>jīva+kalā. Glow of life, animation, vitality; உயிரின் தளிர்ப்பு.Loc |
சீவகன் 1 | cīvakaṉ n. <>Jīvaka. The hero of the epic Cīvaka-cintāmaṇi; சீவகசிந்தாமணிக் கதாநாயகன் |
சீவகன் 2 | cīvakaṉ n. <>ājīvaka. Member of the ājīvaka sect among the Jains; ஆசீவகன். சீவகனுக் கீரைந்தோ டிருமூன்றாம் (சி.சி.முகவுரை.தனிப்பா) |
சீவகாருண்ணியம் | cīva-kāruṇṇiyam, n. <>jīva +. Mercy towards living cratures; பூததையை |
சீவகாலம் | cīva-kālam, n. <>id. +. Lifetime; வாழ்நாள். Colloq. |
சீவகோடி | cīva-kōṭi, n. <>id. +. See சீவராசி. . |
சீவச்சவம் | cīva-c-cavam, n. <>id. +. See சீவப்பிரேதம் . |
சீவசஞ்சீவி | cīca-cacīvi, n. <>id. +. See சீந்தில் (சங்.அக) . |
சீவசம்போதனை | cīva-campōtaṉai, n. <>id. + sambōdhanā. A Jaina work in Tamil; தமிழ்மொழியிலுள்ள ஒரு சைனச்சம்பு நூல் |
சீவசாட்சி | cīca-cāṭci, n. <>id. +. (Advaita.) The Supreme Being, as the witness of all beings; [உயிர்களனைத்திற்கும் சாட்சி] பரப்பிரமம். |
சீவசுத்தி | cīva-vutti, n. <>id. +. (Advaita.) The state of realising the Brahman, in which the individual soul loses the sense of self and becomes identical with the Brahman; சச்சிதானந்த மயமாகிய பிரமத்தைச் சீவன் அவ்வொளியே கண்ணாகக் கண்டறிந்து அதில் சீவதற்போத மடங்கித் தனக்கு அதிட்டானமாகிய பிரமத் தானாய் நிற்கை. (கட்டளைக்.188) |
சீவசெந்து | cīva-centu, n. <>id. +. Living being; உயிர்ப்பிராணி. |
சீவடம் | cīvaṭam, n. <>சீவு-. [T. cīvuṭa.] Planing polishing; இழைப்பு. (W.) |
சீவத்தறுவாய் | cīva-t-taṟuvāy, n. <>jīva +. Moment of death; மரணசமயம். (யாழ்.அக) |
சீவத்துவம் | cīvattuvam, n. <>jīva-tva. Vitality; ஆன்மசக்தி. Colloq. |
சீவத்விபாகம் | cīvat-vipākam, n. <>jīvadvibhāga. Partition of an nacestral estate among sons by the father during his life-time; சீவகாலத்திலேயே தந்தை தன் மக்களுக்குப் பாகம் பிரித்துக்கொடுக்கை.(W.G.) |