Word |
English & Tamil Meaning |
---|---|
சீரை 2 | cīrai, n. <>சீர்2. Scale-pan; துலாத்தட்டு. சீரைபுக்க வரையா வீகை யுரவோன் (புறநா.43, 7). |
சீல் 1 | cīl, n. <>U. cilla. Kite, Milvus govinda; பருந்து. (M.M.170.) |
சீல் 2 | cīl, n. <>E. Seal; முத்திரை . Mod. |
சீல்மோதிரம் | cīl-mōtiram, n. <>சீல்2 +. Signet-ring, finger-ring with seal set in it; முத்திரையிடப்பட்ட மோதிரம். Colloq. |
சீலக்கேடு | cīla-k-kēṭu, n. <>சீலம்+. Bad manners; ill-behaviour; துர்நடத்தை. Loc. |
சீலங்கா - த்தல் | cīlaṅ-kā-, v. intr. <>id. +. To observe austerities; விரதாதிகளை அனுட்டித்தல். (சிலப்.14, 11, உரை) |
சீலப்பேர் | cīla-p-pēr, n. <>id. +. Name given to a person on account of his noble conduct; ஒழுக்கத்தால் ஒருவர்க்கு வழங்கும் பெர்யர். சீலப்பேர் வீரப்பேர் அநேகமா யிருக்குமிறே (ஈடு, 2, 5, 6) |
சீலபாரமிதை | cīla-pāramitai, n. <>id. +. (Buddh.) Complete attainment of cīlam or perfection of moral conduct, one of tacapāramitai, q.v.; தசபாரமிதைகளுள் சீலம் முற்றுகை. (மணி.26, 45, அரும்) |
சீலம் | cīlam, n. <>šīla 1. Nature; தன்மை. கொம்ப ரும்பர்புக் கஃதே குறைப்பவர்தஞ் சீலத்தன (திருக்கோ.45). 2. Good conduct, character, virtue; 3. Conduct, behaviour, practice; 4. (Buddh.) See சீலபாரமிதை. (மணி. 26, 45, அரும்). 5. Wisdom; 6. Training of an elephant; 7. Discipline, punishment; 8. Gulancha. See சீந்தில். (மலை.) |
சீலம்பாய் | cīlam-pāy, n. prob. šithila +. Worn-out mat; கிழிந்த பாய். (J.) |
சீலம்பாயறுகு | cīlam-pāy-aṟuku, n. Species of cynodon grass, as spreading like a mat; அறுகுவகை.(J.) |
சீலவான் | cīlavāṉ, n. <>šīlavān nom. sing. of šīla-vat. Man of noble conduct, man of character; ஒழுக்கமுள்ளவன் |
சீலன் | cīlan, n. <>šīla. See சீலவான். . |
சீலனம் | cīlaṉam, n. <>šīlana. Repeated study of šāstras; சாத்திரங்களைப் பலகாற் பயிலுகை. (யாழ்.அக) |
சீலா | cīlā, n. 1. A sea-fish attaining 5ft. in length, Sphyraena jello; ஐந்து அடி நீலமுள்ள கடல்மீன் வகை. 2. A basket or bag for baling out bilge-water from a boat; 3. A water-bird; |
சீலாசாரம் | cīlācāram, n. <>šīla + ācāra. Code of conduct; ஒழுக்கவகை. பதினெண்ணாயிரம் சீலாசாரமும் (சீவக, 2818, உரை) |
சீலாந்தி | cīlānti, n. Portia tree. See பூவரசு. (L.) . |
சீலாப்புட்டி | cīlā-p-puṭṭi, n. <>சீலா,2 (w) See சீலா, 2. (W.) . |
சீலாப்பூட்டை | cīlā-p-pūṭṭai, n. <>id. +. See சீலா, 2. (யாழ்.அக) . |
சீலி - த்தல். | cīli-, 11 v. tr. <>šīla. 1. To lead oen in the path of virtue; நல்லொழுக்கத்தில் நிறுத்துதல். சீலிக்கு முறுதியாலே தேடரு நட்புமாகும் (ஞானவா.தாமவி.15); 2. [M. šīli.] To practise, accustom oneself to; |
சீலி | cīli, n. <>šīlin. Person who has fallen into a habit; வழக்கமுள்ளவன். பிறர் பின் செலுஞ் சீலிகட்கு (தேவ.859, 8) |
சீலை 1 | cīlai, n. cf. cēla. [T. cīra, K. sēra, M. cīla.] 1. Cloth, garment ; துணி. சீலைக் குதம்பையொருகாது (திவ்.பெரியாழ்.3,3, 1). 2. Woman's cloth; 3. Cloth of 2 1/4 cubits; 4. Man's forelap; |
சீலை 2 | cīlai, n. See சீலைவாகை. (L.) . |
சீலைகொடு - த்தல் | cīlai-koṭu-, v. intr. <>சீலை1 +. To present a cloth to a widow in token of marrying her; விதவைக்குப் புடைவை கொடுத்து அவளை மணம் புரிதல். அவளைச் சீலைகொடுத்துக் கொண்டுபோனான். Nā |
சீலைத்துணி | cīlai-t-tuṇi, n. <>id. +. 1. Piece of cloth; சிறுதுண்டு. (W.) 2. Clothes; 3. Cloth for decoration; |
சீலைநாட்டு - தல் | cīlai-nāṭṭu-, v. intr. <>id. +. To cover the udder of agoat with cloth, preventing its kid from sucking; குட்டி பால் குடியாதிருக்கும் பொருட்டு ஆட்டுமடியில் துணி கட்டுதல்.Loc |
சீலைப்பாம்பு | cīlai-p-pāmpu, n. perh. id. +. Carpet snake, non-poisonous Russell's viper with white spots; நஞ்சில்லாததும் வெண்புள்ளியுள்ளதுமான ஒருவகைப் பாம்பு. |