Word |
English & Tamil Meaning |
---|---|
சீரகச்சம்பா | cīraka-c-campa, n. <>id. +. 1. A superior kind of paddy sown in september and maturing in five months; ஆவணி புரட்டாசி மாதங்களில் விதைக்கப்பெற்று ஐந்து மாதங்களிற் பயிராகுஞ் சம்பாநெல்வகை. (பதார்த்த.814); 2. A variety of red paddy; |
சீரகத்தாமன் | cīraka-t-tāmaṉ, n. <>id. +. 1. See சீரகத்தாரோன் . 2. Member of the vaisya caste; |
சீரகத்தாரோன் | cīraka-t-tārōṉ, n. <>id. +. Kubera as wearing a garland of cīrakam; [சீரக மாலை யணிந்தோன்] குபேரன். (பிங்) |
சீரகபாடி | cīraka-pāṭi, n. Arabian costum.See கோட்டம்3, (மலை.) . |
சீரகம் 1 | cīrakam, n. <>jīraka. 1. Cumin, Cuminum cyminum; செடிவகை. (பதார்த்த.1032.) 2. A small measure of weight; |
சீரகம் 2 | cīrakam, n. cf. sūkara. Hog; பன்றி. (யாழ்.அக) |
சீரகர் | cīrakar, n. <>cīraka. Buddhist, as clad in bark; [மரப்பட்டை தரித்தோர்] பௌத்தர். |
சீரகரை | cīrakarai, n. <>சீரகம்1 + அரை. A measure of weight=half a cīrakam; அரைச்சீரக அளவு. (தொல்.எழுத்.171, உரை) |
சீரகவள்ளி | cīraka-vaḷḷi, n. <>id. +. 1. Cultivated yam. See காட்டுக்காய்வள்ளி. (L.) . 2. Malacca yam. See காட்டுச்சீரகவள்ளி. (M.M.463.) |
சீரங்கம் | cīraṅkam, n. <>šrī-raṅga. šrīraṅgam, the famous Viṣṇu shrine near Trichinopoly; திருச்சிராப்பள்ளிக் கருகிலிருக்கும் பிரசித்தமான விஷ்ணுஸ்தலம். சீரங்கத்தார்க்குந் திருவானைக்காவார்க்கும் (தமிழ்நா.203) |
சீரங்கி | cīraṅki, n. A kind of paddy; ஒரு வகை நெல். |
சீரணம் | cīraṇam, n. <>jīrṇa. 1. Digestion; உண்டது செரிக்கை. 2. Decay, ruin, spoilt condition; |
சீரணி - த்தல் | cīraṇi-, 11 v. intr. <>id. 1. To digest உண்டது செரித்தல். 2. To decay, rot; to go to ruins, as a building; |
சீரணி 1 | cīraṇi, n. prob. jīrṇa. Bishop's weed. See ஒமம்1. (மலை.) . |
சீரணி 2 | cīraṇi, n. prob. சீர்2+அணி. 1. Jungle. forest; காடு. (திவா). 2. Quick step in dancing; 3. Fuse-cloth in a torch; |
சீரணி 3 | cīraṇi, n. cf. U. sīrā. A kind of pastry; ஒரு பண்ணிகாரம். (W.) |
சீரணிபோடு - தல். | cīraṇi-pōṭu-, v. intr. <>சீரணி3+. To move with quick steps in dancing; கூத்தில் விரைந்து அடியெடுத்துவைத்தல்.(W.) |
சீரணை | cīr-aṇai, n. perh. சீர்2+. Habit, custom, constant use; பழக்கம். (யாழ்.அக) |
சீரணோத்தாரணம் | cīraṇōttāraṇam, n. <>jīrṇōddhāraṇa. Restoration, repair, as of a temple in ruins; பழுதுபட்ட கோயிலில் முதலியவற்றைச் செப்பமிடுகை |
சீரத்துவசன் | cīra-t-tuvacaṉ, n. <>sīra +. King janaka, as having a plough as his flag; [மேழிக்கொடியை யுடையவன்] சனகன். (அபி.சிந்) |
சீரந்தாதி | cīr-antāti, n. <>சீர்2 +. (Pros.) Repetition of the final foot of a line as the initial foot of the following line; பாட்டில் ஓரடியின் இறுதிச்சீர் அடுத்த அடியின் முதற்சீரோடு தொடுத்து வருவது. (தொல்.பொ.411, உரை) |
சீரம் 1 | cīram, n. <>cīra. Bark of a tree, used as clothing; மரவுரி. தீரா மனத்தாள் தரவந் தன சீரம் (கம்பரா.நகர்நீ.147) |
சீரம் 2 | cīram, n. <>sīra. Plough; கலப்பை. சீரங்கராக மறமோது திகிரி செங்கை. (கந்தரந்.98) |
சீரம் 3 | cīram, n. <>kṣīra. Milk; பால். (W.) |
சீரம் 4 | cīram, n. cf. ušīra. Cuscuss grass.See இலாமிச்சை. (மலை) . |
சீரம் 5 | cīram, n. See சீரகம், 1. (மூ.அ) . |
சீரமோடா 1 | cīaram-ōṭā, n. perh. சீரம்1. 1. A straggling shrub with simple oblong leaves and greenish flowers; See வீழி. (மலை), . 2. Cloth made of fibres; |
சீரமோடா 2 | cīram-ōṭā, n. perh. சீரம்3. Milk of the wild buffalo; காட்டெருமைப்பால். (W.) |
சீரலைவாய் | cīr-alai-vāy, n. <>சீர்2 +. Tiruccentūr, in Tinnevelly district, as situate on the see-shore; See அலைவாய். விழுச் சீரலைவாய்ச் சேறலும் (திருமுரு.125) |
சீரழி - தல் | cīr-aḻi-, v. intr. <>id. +. See சீர்குலை -, . |
சீரா 1 | cīrā, n. cf. šīrṣa. Helmet; தலைச்சீரா. கிடந்த பேராசு சீரா (திருவாலவா.45, 9) |
சீரா 2 | cīrā n. Palas tree.See பலாசம். (மலை). . |