Word |
English & Tamil Meaning |
---|---|
சீவிக்கட்டு - தல் | cīvi-k-kaṭṭu-, v. tr. <>சீவு- +. 1. To comb and tie up the hair; தலைவாரி முடித்தல்; 2. To pare off the spathes of a palm and attach a pot for drawing toddy; |
சீவிகா | cīvikā, n. cf. jīvikā. Nutmeg. See சாதிக்காய். (மலை) . |
சீவிடம் | cīviṭam, n. See சீவடம். (W.) . |
சீவிதம் | cīvitam, n. <>jīvita. 1. Life existence; உயிர்வாழ்க்கை; 2. Subsistence allowance, maintenance; 3. Land granted tax-free for maintenance; |
சீவியங்கம் | cīviyaṅkam, n. Rock-salt. See கல்லுப்பு. (யாழ்.அக) . |
சீவியம் | cīviyam, n. of. jīvya. See சீவிதம் . |
சீவீர்க்கு | cīvīrkku, n. <>சீவு- + ஈர்க்கு. 1. Ribs of palm leaves; சீவிய ஈர்க்கு. Loc. 2. See சீழ்கு. Tj |
சீவு - தல் | cīvu-, 5 v. tr. 1. [K. M. cīvu.] To pare off, shave or scrape off ; செதுக்கிக்கழித்தல்.புலவு சீவாப் புதுப் போர்வை. (காசிக.பிரமன்வ.8). 2. To smooth or polish by planing; 3. To comb or brush the hair; 4. To sweep clean, as floor; 5. To clean, as teeth; |
சீவுபுழுக்கொடியல் | cīvu-puḻukkoṭiyal, n. <>சீவு- + புழுக்கு + ஒடியல். Palmyra roots, boiled, pared and dried; புழுக்கி உலர்த்தின பனங்கிழங்கு. (J.) |
சீவுளி | cīvuḷi, n. <>id. + உளி. 1. Blockplane; இழைப்புளிவகை. 2. Burnishing stick |
சீவுளிக்கூடு | cīvuḷi-k-kūṭu, n. <>சீவுளி +. Wooden stock of a plane; இழைப்புளிக் கட்டை .(W.) |
சீவை | cīvai, n. Dance; கூத்து. (அக.நி) |
சீவையர் | cīvaiyar, n. Dancing-girls; கூத்தியர். (அக.நி) |
சீழ் 1 | cīḻ, n. <>சீ-, [T. cīmn, K. kīvu.] Pus; புண்ணின்.சீ |
சீழ் 2 | cīḻ, n. See சீழ்க்கை. (W.) . |
சீழ்க்கட்டி | cīḻ-k-kaṭṭi, n. <>சீழ்1 +. Abscess, boil as having pus; சீப்பிடித்த புண்கட்டி |
சீழ்க்காது | cīḻ-k-kātu, n. <>id. +. Purulent discharge from the ear, Otorrhoea; காதிலிருந்து சீழ்வடியும் நோய்வகை |
சீழ்க்கை | cīḻkkai, n. cf. sītkāra. (K. siḷḷu.) Whistle, whistling; நாவின் நுனியை மடித்துச் செய்யும் ஒலி. கொக்கரிப்பையும் சீழ்க்கையையு மெழுப்பினார். (சீவக.447, உரை) |
சீழ்க்கைக்கூத்து | cīḻkkai-k-kūttu, n. <>சீழ்க்கை +. A mode of dancing accompanied with whistling; சீழ்க்கையெழுப்பி ஆடுங் கூத்து. இளையவர் சீழ்க்கைக்கூத்தோடு நெருங்குதலால் (சீவக.120, உரை) |
சீழ்க்கைவிடு - தல் | cīḻkkai-viṭu-, v. intr. <>id. +. To whistle, give a signal by whistling; நாவைமடித்து ஒலியிடுதல். (W.) |
சீழ்கட்டு - தல் | cīḻ-kaṭṭu-, v. intr. <>சீழ்1 +. To suppurate; சீப்பிடித்தல் |
சீழ்கு - தல் | cīḻku-,. 5 v. intr. of. சீழ்கு To fetch, heave a sob; விம்முதல். சீழ்கிச் சீழ்கியழுதால் (ஈடு, 3, 2, 7) |
சீழ்கு | cīḻku, n. of. சீகு Broom grass. See ஊகம்1, 3 (தொல்.எழுத்.415, உரை) . |
சீழ்கோ - த்தல் | cīḻ-kō-, v. intr. <>சீழ்1 +. See சீழ்கட்டு -, . |
சீழ்ப்பிரமேகம் | cīḻ-p-piramēkam, n. <>id. + pramēha. Gonorrhaea; மேகநோய்வகை. (பைஷஜ.282) |
சீழ்மரம் | cīḻ-maram, n. A species of mango; மாமரவகை. Loc |
சீழ்மலடு | cīḻ-malaṭu, n. perh. சீழ்1 +. See சீதமலடு. (மூ.அ) . |
சீழ்மூலம் | cīḻ-mūlam, n. <>id. +. See சீமுலம். Loc . |
சீளைப்பறவு | cīḷai-p-paṟavu, n. Sea-fish, steel-blue attaining 6 in. in length Danio malabaricus ; ஆறு அங்குல நீளமும் ஊதாநிறமுமுள்ள கடல் மீன்வகை |
சீளைவாளை | cīḷai-vāḷai, n. A fresh-water fish. See சொட்டைவாளை. . |
சீற்காரம் | cīṟkāram, n. <>sīt-kāra. 1. Sound made by drawing in the breath; முச்சை உள்வாங்குதலால் எழுமொலி. (கந்தபு. இந்திர. 45.) 2. Whistling; |
சீற்றம் | cīṟṟam, n. <>சீறு-. [M. cīṟṟam.] Anger, fury ; கோபம். சீற்றமொ டாருயிர் கொண்ட ஞான்று. (கலித்.103) |
சீறடி | cīṟaṭi, n. <>சீறு-மை + அடி. Small foot, considered beautiful; சிறிய கால். அஞ்செஞ்சீறடி யணிசிலம் பொழிய (சிலப்.4, 47). |