Word |
English & Tamil Meaning |
---|---|
சுக்கிலபட்சம் | cukkila-paṭcam n. <>id. + pakṣa. Bright half of the lumar month; அமாவாசையின் மறுநாளிலிருந்து பௌர்ணிமைவரையிலுள்ள காலம். |
சுக்கிலபுட்டா | cukkila-puṭṭā n. Kamela. See குங்குமம்.(மலை.) . |
சுக்கிலம் | cukkilam, n. <>šukla. 1.Whiteness,paleness; வெண்மை.(திவா.) 2. Semen virile; 3. See சுக்கிலபட்சம். 4. Wedge-leaved ape-flower, 5. Silvery-leaved ape-flower. |
சுக்கிலமண்டலம் | cukkila-maṇṭalam n. <>id.+. Cornea of the eye; விழியின் மேற்றேல். (யாழ். அக.) |
சுக்கிலமூத்திரம் | cukkila-mūttiram, n. <>id.+. Gonorrhoea; ழத்திரத்தோடு சுக்கிலம் கலந்துவிழம் நோய். (w.) |
சுக்கிலமேகம் | cukkila-mēkam n. <>id.+. See சுக்கிலழத்திரம். (w.) . |
சுக்கிலயசுர்வேதம் | cukkila-yacur-vētam, n. <>id.+yajur-vēda. The white Yajurvēda which gives the Mantras and Brāhmaṇas separately and which was revealed to Yājavalkya, dist, fr, kiruṣṇa-yacur-vētam; எசுர்வேதத்தின் இருபகுதிகளுள் மந்திரங்களும் பிராமணங்களும் தனித்தனி பிரிக்கப்பட்டுள்ளதும் யாஞ்ஞியவல்கியரால் கண்டறியப்பட்டதுமான பகுதி. |
சுக்கிலாசயம் | cukkilācayam, n. <>id.+ā-šaya. Spermary; சுக்கிலந் தங்கும் இடம். (w.) |
சுக்கிலை | cukkilai n. <>šuklā. A form of Parā-šakti, பராசத்தி பேதம். (சைவச. பொது. 74, உரை.) |
சுக்கு 1 - தல் | cukku- 5 v. tr. (J.) 1. [T. lcokku.] To copulate; புணர்தல். 2. of. U. cukua. To perform, execute; |
சுக்கு 2 | cukku n. <>šuṣka. [M. cukku.] 1. Dried ginger; உலர்ந்த இஞ்சி. (திவா.) 2. [K. cukku.] Small piece, bit, fragment, particle; 3. Worthless thing; |
சுக்கு 3 - தல் | cukku- 5. v. intr. <>id. To get dry; உலர்தல். Na. |
சுக்குக்களி | cukku-k-kaḷi, n. <>சுக்கு+. A pasty preparation of which dried ginger forms the main ingredient, cheifly given to women in confinement; சுக்குச்சேர்த்து மருந்தாகச் செய்யப்படுங் களிவகை. |
சுக்குக்சுக்காய் | cukku-c-cukkāy, adv. <>id.+. In pieces; துண்டுதுண்டாய். |
சுக்குச்செட்டி | cukku-c-ceṭṭi, n. <>id. +. See சுக்கஞ்செட்டி. Loc. . |
சுக்குச்செட்டு | cukku-c-ceṭṭu n. <>id.+. Stinginess, miserliness; உலோபத்தனம். |
சுக்குச்செட்டுப்பண்ணு - தல் | cukku-c-ceṭṭu-p-paṇṇu-, v. intr. <>id.+. 1. To be stingy; உலோபஞ்செய்தல். Loc. 2. To make profit by trading in small articles; |
சுக்குத்தான் | cukkuttāṉ n. See சுங்குத்தான் குழல் . Tj. . |
சுக்குநாறிப்புல் | cukku-nāṟi-p-pul n. <>சுக்கு+. Rusa oil-plant, Andropogon schoenanthus. See சுன்னாறிப்புல். (M. M.) |
சுக்குப்பால் | cukku-p-pāl, n. <>id+ A liquid medicine in which dried ginger forms the main ingredient; சுக்குக்கலந்து செய்த மருந்து வகை. Loc. |
சுக்குப்பொடி | cukku-p-poṭi n. <>சொக்கு+. [T. tookupodi.] A kind of magic powder. See சொக்குப்பொடி. Colloq. |
சுக்குமம் | cukkumam n. <>sūkṣmā. True cardamom; சிற்றேலம். (மூ. அ.) |
சுக்குமாத்தடி | cukku-mā-t-taṭi n. perh. சொக்கு-+. 1. Staff carried by mendicants, as imbued with the power or energy of a deity; வைராகிகள் கொள்ளுங் கைக்கழி. (w.) 2. A club with which some inferior deities are armed; 3. Magic wand; |
சுக்குமாந்தடி | cukkumān-taṭI n. See சுக்கு மாத்தடி. Loc. சுக்குமாந்தடிகொண்டு நொக்கிவிடுவான் (நந்த. கீர்த்.). . |
சுக்குவெல்லம் | cukku-vellam, n. <>சுக்கு+. Jaggery mixed with pulverised dried ginger, used as a digestive; சுக்கைப்பொடியாக்கிக் கலந்த வெல்லம். Colloq. |
சுக்குவெள்ளம் | cukku-veḷḷam n. <>id.+. [M. cukkuveḷḷam.] Ginger-water, a stimulant; சுக்குக் கலந்த வெந்நீர். Na. |
சுக்கை 1 | cukkai n. <>முசுமுசுக்கை. Bristiv bryony. See முசுமுசுக்கை. (மலை.) |
சுக்கை 2 | cukkai n. perh. T. tenkka. of. ulkā. Star; நட்சத்திரம். (பிங்.) |
சுக்கை 3 | cukkai n. <>srak nom, sing. of sraj. Garland; பூமாலை. சுக்கைப் பிற்சுற்றியும் (திருப்பு. 161). |