Word |
English & Tamil Meaning |
---|---|
சுகந்தமூலி | cukanta-mūli, n. <>id.+. cuscus grass, Anatherum muricatum; வெட்டி வேர். (மலை) |
சுகந்தவர்க்கம் | cukanta-varkkam, n.<>id. +. perfumes, spices; வாசனைப்பண்டம். சுகந்த வர்க்கங்களாகிய சுத்தமான வெள்ளைப்போளத்தில் (பைபிள், யாத்திரா.30, 23). |
சுகந்தவர்க்கமிடல் | cukanta-varkkam-iṭal, n.<>id. + id. +. Embalming பிரேதத்தை வாசனைத்திரவியங்களாற் சேமஞ்செய்கை. (பைபிள், அக.) |
சுகந்தவாழை | cukanta-vāḻai, n.<>id. +. A variety of plantain. See பூவாழை (G. Sm. D. I , i, 215) . |
சுகந்தி | cukanti, n.<>su-ka nti. Amethyst; செவ்வந்திக்கல். பன்னிரண்டாவது சுகந்தி (பைபிள், வெளி, 21, 21). |
சுகந்திகம் | cukantikam, n.<>su-gandhaka. 1. A kind of paddy; நெல்வகை. (சங். அக.) 2.White Lotus; |
சுகந்திரம் | cukantiram n. <>svatantra. Customary fees or dues; See சுகந்தரம். |
சுகப்படு - தல் | cuka-p-paṭu-, v.intr.<>சுகம்1+. 1. To be free from disease; நோயின்றியிருத்தல். அவன் உடம்பு சுகப்பட்டிருக்கிறது. 2. To be comfortable; 3. To be cordial; |
சுகப்பிரசவம் | cuka-p-piracavam, n.<>id. +. Easy and safe accouchement, safe childbirth after the full period of gestation; வருத்தமின்றிப் பிரசவிக்கை. |
சுகப்பிழை | cuka-p-piḻai, n.<>id. +. Failure of health; தேகசௌக்கியக் குறைவு (j.) |
சுகப்பேறு | cuka-p-pēṟu, n.<>id. +. See சுகப்பிரசவம் (j.) . |
சுகபலம் | cuka-palam, n.<>šuka-phala. Madar-plant. See எருக்கு. (மூ.அ) . |
சுகபலை | cuka-palai, n. See சுகபலம். (தைலவ.தைல.12.) . |
சுகபேதி | cuka-pēti, n.சுகம்1+. Easy loose motion caused by purgative; வயிற்றுவலி முதலியனவின்றி மருந்தால் மலம் பேதியாகக்கழிகை. colloq. |
சுகபோகம் | cuka-pōkam, n.<>id. +. Sensual or luxurious enjoyment; இன்ப அநுபவம்.colloq. |
சுகபோசனம் | cuka-pōcaṉam, n.<>id. + bhōjana. Rich, wholesome food; ஆரோக்கியமான உணவு. |
சுகம் 1 | cukam, n.<>sukha. 1. Happiness, pleasure, enjoyment; இன்பம். (பிங்) அமூர்த்த சுகம்போ ல னித்தமோ வெனல் (மணி.29, 266). 2. That which is good, wholesome, beneficial; 3, Health, welfare; 4. Ease, comfort; 5. Cordiality; 6. See சுகாசனம். சுகமாவது...எவ்வாறிருக்கிலுண் டவ்வாறிருத்தல் (பிரபோத. 44,10). |
சுகம் 2 | cukam, n.<>šuka. Parrot; கிளி. வேடனோர் சுகத்தை யெய்து (திருவாலவா.33, 18). |
சுகம் 3 | cukam, n.<>cūcuka. Nipple; முலைக்கண். (அக.நி.) |
சுகம்பல் | cukampal, n. Bristly trifoliate vine. புளிநறளை (மலை.) . |
சுகர்மம் | cukarmam, n.<>su-karman. 1. Good deed; நற்செயல். 2. (Astron.) A division of time, one of 27 yōkam, q. v.; |
சுகரகசியம் | cukarakaciyam, n.<>Sukarahasya. An upaniṣad, one of 108; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. |
சுகரம் | cukaram, n.<>su-kara. That which is easy to do; எளிதிற் செய்யத்தக்கது. (இலக்.அக.) |
சுகரோகம் | cuka-rōkam, n.<>sukha +. See சுகசங்கடம் Loc. . |
சுகவல்லபம் | cuka-vallapam, n.<>šukavallabha. Pomegranate tree; மாதுளைமரம். (யாழ்.அக) |
சுகவழி | cuka-vaḻi, n.<>சுகம்1+. Hygiene; சுகாதார நூல். Mod. |
சுகவாகன் | cuka-vākaṉ, n.<>šuka-vāha. Cupid, as having parrot as his vehicle; [கிளியை வாகனமாகவுடையவன்] மன்மதன். (யாழ்.அக.) |
சுகவாசசீவனம் | cuka-vāca-ctvaṉam, n.<>sukha +. Comfortable livelihood, life of ease and comfort - used in documents in reference to a person having no profession; பூர்வீகசொத்தால் வாழும் சுகவாழ்க்கை. Loc. |
சுகவாசத்தலம் | cuka-vāca-t-talam, n.<>id. +. Sanatorium; சுகத்தின்பொருட்டுச் சென்று வசிக்கும் இடம். Mod. |
சுகவாசி | cuka-vāci, n.<>id. + vāsin. 1. One who lives in comfort without any particular employment; தொழிலின்றிச் சௌக்கியமாக வாழ்வோன். 2. Permanent tenant or cultivator; |