Word |
English & Tamil Meaning |
---|---|
சுக்கை 4 | cukkai n. <>šulka. Passage money, freight; கப்பற்சுங்கம். (J.) |
சுகக்காரன் | cuka-k-kāraṉ, n. <>sukha+. 1. Pleasure-seeker; சௌக்கியமனுபவிப்போன். 2. Person bred in the lap of luxury; 3. Whoremonger; |
சுகக்கேடு | cuka-k-kēṭu n. <>id.+. See சுகத்தாழ்வு. Nā. . |
சுககரம் | cuka-karam n. <>sukha-kara. That which is conducive to health and happiness; சுகத்தை செய்வது. (சங். அக.) |
சுகங்காட்டு - தல் | cukaṅ-kāṭṭu- v, intr. <>சுகம்+. 1. To show signs or symptoms of convalescence; சௌக்கியக்குறி தோற்றுவித்தல். 2. To indulge or humour one, allure, give one a taste of enjoyment; |
சுகசங்கடம் | cuka-caṅkaṭam n. <>id.+. Gonorrhoea. See சுக்கிலழத்திரம். |
சுகசரீரம் | cuka-carīram, n. <>id.+. 1. Healthy or robust constitution; வியாதியற்ற தேகம். 2. Delicate constitution; |
சுகசன்னி | cuka-caṉṉi n. <>id.+sannipāta. Delirious fever from improper or untimely sexual intercourse; பொருந்தாப் புணாச்சிஇ அகாலப்புணர்ச்சி இவற்றால் உண்டாகும் சன்னிநோய். Colloq. |
சுகசிம்பி | cukacimpi n. <>šūkašimbi. Cowhage. See பூனைக்காலி. (மலை.) |
சுகசீவனம் | cuka-cīvaṉam n. <>sukha+jivana. 1. Happy, comfortable life; சௌக்கிய வாழ்வு. 2. An idler's life; 3. See சுகவாசசீவனம். |
சுகசீவி | cuka-cīvi, n. <>id.+jīvin. Happy or Healthy person; சௌக்கியமாக வாழ்பவன். (w.) |
சுகசெல்வம் | cuka-celvam, n. <>id.+. Health and prosperity; pleasures and luxuries; சௌக்கிய போகங்கள். |
சுகஞ்சுகம் | cuka-cukam, n. <>சுகம்+. A benediction meaning 'Health ! health !' ultered by a woman towards the close of bathing her child; குழந்தையின் நீராட்டுமுடிவில் தாய் முதலியோர் வாழ்த்துஞ்சொல். (w.) |
சுகட்டான் | cukaṭṭāṉ, n. (மலை.) 1. Balloon vine. See முடக்கொற்றன். 2. Kaus. |
சுகத்தாழ்வு | cuka-t-tāḻvu, n. <>சுகம்+. Failure or want of health, illness; சௌக்கியக் குறைவு. Loc. |
சுகந்திரம் | cuka-t-tiram, n. <>šuka+druma. Siris. See வாகை. (மலை.) |
சுகதநூல் | cukata-nūl, n. <>Sugata+. Buddhist scripture; பௌத்த நூல். தொட்டநாற்பத்துமூன்றுஞ் சுகதநூற் றுணிவுதானே (மணிஇ பக். 382, அரும்.). |
சுகதபேதம் | cukata-pētam n. <>sva-gata+bhēda. Difference between an object as a whole, and its parts, one of three pēlam, q.v.; உறுப்பிக்கும் உறுப்புக்குழள்ள வேறுபாடு. |
சுகதம் | cukatam n. <>sva-gata. See சுககபேதம். ஒருபிரமந்தனக்குத் தெரிந்த சுகதமுதலியன மூன்றுமிலையே (வேதா. கு. 27). |
சுகதன் | cukataṉ n. <>Sugata. 1. Buddha; புத்தன். சுகதற் கியற்றிய ... சயித்தம் (மணி. 28, 130). 2. Arhat; |
சுகதாசுசம்பா | cukatācu-campā n. A kind of campā paddy; சம்பா நெல்வகை. (A.) |
சுகதாதை | cuka-tātai n. <>šuka+tāta. Vyāsa, the father of šuka; சுகமுனிவர்க்குத் தந்தையான வியாசர். |
சுகதாரு | cukatāru n. Seaside Indian oak. See கடம்பம். (மலை.) |
சுகதாஸ் | cukatās n. A kind of superior paddy; உயர்தர நெல்வகை. Madr. |
சுகதுண்டம் | cuka-tuṇṭam n. <>šukatuṇda. (Nāṭya.) A gesture with one hand in which the forefinger and the thumb are joined at the tips and bent forward while the ring finger is turned inward and the other two fingers are held upright, as resembling a parrot's beak, one of 33 iṇaiyā-viṉai-k-kai, q.v.; சுட்டு விரலும் பெருவிரலும் உகிர்நுனி கௌவும்படி ஒட்டி முன்வளைத்தும் அநாமிகை முடங்கியும் நடு விரலுஞ் சிறுவிரலும் நிமர்ந்தும் உள்ள இணையாவினைக்கை வகை. (சிலப். 3, 28, உரை.) |
சுகந்தபரிமளம் | cukanta-parimaḷam n. <>su-gandha+. 1. See சுகந்தம் . 2. Loc. |
சுகந்தம் 1 | cukantam n. <>su-kanda. (மலை.) 1. Onion See ஈரவெண்காயம். 2. Guindy Plantain |
சுகந்தம் 2 | cukantam n. <>su-gandha. 1. Fragrance; நறுமணம். 2. Perfumes, aromatics; 3. Cowslip creeper, l.cl., Pergularia minor; |
சுகந்தம் 3 | cukantam n. <>sugandhā. Galangal See அரத்தை. (மலை.) |
சுகந்தமா | cukanta-mā n. <>சுகந்தம்+. Japan camphor-tree. See கர்ப்பூரமரம். (மலை.) |