Word |
English & Tamil Meaning |
---|---|
சுகிர்தம் 1 | cukirtam, n.<>su-krta. 1. Virtuous, meritorious deeds, as religious austerities; நற்செயல். (பிங்.) 2. Goodness; 3. Deliciousness, delightfulness; |
சுகிர்தம் 2 | cukirtam, n.<>su-ghrta. Ghee; நெய். (W.) |
சுகிர்தவசனம் | cukirta-vacaṉam, n.<>suhrt-vacana. Good, auspicious words; நல்வார்த்தை. |
சுகிர்தன் 1 | cukirtaṉ, n.<>su-hrt. Friend, well-wisher; நண்பன் |
சுகிர்தன் 2 | cukirtaṉ, n.<>su-krta. Virtuous person, one enjoying the fruits of his virtuous deeds in former births; புண்ணியசாலி. |
சுகிர்புரி - தல் | cukir-puri-, v. tr. <>சுகிர்1+ To rub clean and tighten the strings of a lute; யாழ்நரம்பினை வடித்து முறுக்குதல். சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி. (புறநா.109) |
சுகிர்ல்லாபம் | cukir-l-lāpam, n.<>suhrt + lābha. A chapter in paca-tantiram dealing with the acquisition of friends; நண்பரைப்பெறுதலைப்பற்றிக் கூறும் பஞ்சதந்திரப் பகுதி. |
சுகுச்சை | cukuccai, n.<>jugupsā. Aversion, disgust, one of six tuvarppu , q.v.; அறுவகைத் துவர்ப்புக்களுள் ஒன்றாகிய அருவருப்பு. (சீவக.3076, உரை.) |
சுகுணம் | cu-kuṇam, n.<>su-guṇa. Good nature, noble character; நற்குணம். |
சுகுமாரத்தூவி | cukumāra-t-tūvi, n.<>sukumāra +. Red-flowered silk-cotton, as soft. See இலவு. (மலை.) . |
சுகுமாரதை | cukumāratai, n.<>sukumāratā. 1. See சுகுமாரம், 1. . 2. (Rhet.) Smoothness of expression attained by the use of soft consonants; |
சுகுமாரநெய் | cukumāra-ney, n. A medicinal ghee for removing sterility of woman; பெண்களுக்கு மலடு நீங்கக்கொடுக்கும் மருந்துநெய். |
சுகுமாரம் | cukumāram, n.<>su-kumāra. 1. Softness, smoothness, tenderness; மென்மை. (திவா.) 2.See சுகுமாரநெய். |
சுகுமாரன் | cukumaraṉ, n.<>id. Person of delicate constitution; மெல்லிய தேகமுள்ளவன். சுகுமாரரான நீர் இங்ஙனே செய்யலாமோ (குருபரம்.512). |
சுகோடம் | cukōṭam, n.<>su-ghōṣa. The conch of Nakula; நகுலன் கைச்சங்கு. நகுலன்... மருவுரு சுகோடம் (பகவற்.1, 11). |
சுகோதயள | cukōtayaḷ, n.<>sukhōdaya. Fountain of happiness; சுகத்திற்கு இருப்பிடமானவள். வம்பார்த்தனத்தி சுகோதயள்(திருமந். 1052). |
சுகோதரம் | cukōtaram, n.<>šukōdara. East Indian plum. See தாளிசபத்திரி. (சங்.அக) . |
சுகோஷ்ணம் | cukōṣṇam, n.<>sukhōṣṇa.. Moderate, agreeable warmth, as of water; இதமான சூடு. |
சுங்கக்காரன் | cuṅka-k-kāraṉ, n. சுஙகம்1+. [M. cuṅkakkāraṉ.] Custom-house officer; சுங்கம் வசூல் செய்பவன். Loc. |
சுங்கச்சாவடி | cuṅka-c-cāvaṭi, n.<>id. +. Custom-house, toll-gate; ஆயத்துறை. |
சுங்கஞ்செட்டி | cuṅka-ceṭṭi, n.<>id. +. See சுக்குச்செட்டி. Colloq. . |
சுங்கடி | cuṅkaṭi, n. perh. T. tcuṅgudi. A kind of dyed saree with undyed spots; முடிச்சுக்கட்டிச் சாயமிடப்பெற்ற ஒருவகைச்சீலை |
சுங்கம் 1 | cuṅkam, n.<>Pkt. šuṅka <> šulka. Duty on goods, customs, tolls; ஆயம். சுங்கம் கலத்தினுங் காலினும் வரும் பண்டங்கட்கு இறையாயது (குறள், 756, உரை). |
சுங்கம் 2 | cuṅkam, n.<>juṅga. Wormkiller. See ஆடுதின்னாப்பாளை. (மலை) . |
சுங்கம் 3 | cuṅkam, n.<>suruṅgā. (w.) 1. Undermining; கீழறுக்கை. 2. Stealing, pilfering; |
சுங்கம்பிடி - த்தல் | cuṅkam-piṭi-, v. intr.<>சுங்கம்1+. 1. To save money, as a miser; உலோபஞ்செய்து பொருள் சேர்த்தல். Loc. 2. To take a discount of commission; |
சுங்கல் 1 | cuṅkal, n. An extra turn in game. See சிங்கிலி. Nā. . |
சுங்கல் 2 | cuṅkal, n. See சுங்கு,1. . |
சுங்கவிறை | cuṅka-v-iṟai, n.<>சுங்கம்1+. See சுங்கம், .(திவா.) . |
சுங்கன் 1 | cuṅkaṉ n.<>šukra. Venus; சுக்கிரன். (திவா.) |
சுங்கன் 2 | cuṅkaṉ n. A kind of fish; மீ¦ன் வகை. (J.) |
சுங்கான் 1 | cuṅkāṉ, n. See சுக்கான். Loc. . |
சுங்கான் 2 | cuṅkāṉ, n.<>U. cōṅgā. [K.Tu. cuṅgāṇi, M. cuṅka.] Tobacco pipe; புகை குடிகுங் குழாய். (யாழ்.அக). |