Word |
English & Tamil Meaning |
---|---|
சுட்டசெங்கல் | cuṭṭa-ceṅkal, n.<>சுடு-+. Burnt brick, opp. to paccai-c-ceṅkal; சூளையிற் சுடப்பட்ட செங்கல் |
சுட்டணி | cuṭṭaṇi, n.<>சுட்டு- +. (Rhet..) A figure of speech. See நிதரிசனம். (வீரசோ.அலங்.12.) . |
சுட்டல் | cuṭṭal, n.<>id. See சுட்டுணர்வு, 1சுட்ட றிரிதல். (மணி.27, 22). . |
சுட்டறிவு | cuṭṭaṟivu, n.<>id. +. See சுட்டுணர்வு, 2சுட்ட றிவாவது... அசத்தேயாகலின் (சி.சி.6, 2, சிவஞா.) . |
சுட்டாமுட்டி | cuṭṭāmuṭṭi, n.<>id. + ஆ- + muṣṭi. Index finger, forefinger; சுட்டுவிரல். (சிலப்.3, 58, அரும்.) |
சுட்டி 1 | cuṭṭi, n. perh. cūdīya. 1. [ K. M. cuṭṭi.] A small ornament worn by women and children on the forehead; குழந்தைகளும் மகளிரும் அணிந்துகொள்ளும் நெற்றியணி. சுட்டி சிதையக் குட்டத்துக் குளித்து (பெருங்.உஞ்சைக், 40, 102). 2. White curl on the forehead of bull or cow; 3. White spot on the head of a beast or serpent; 4. Short striped border of a cloth. See சிட்டை. Nā1. 5. Tuft of hair; 6. A plate of gold worn on the forehead, as a mark of distinction; |
சுட்டி 2 | cuṭṭi, n. cf. duṣṭa. [K.suṭi, M. cuṭṭi, Tu, cuṭi.] 1. Unruly, mischievous fellow; துஷ்டன். Colloq. 2. Ill-fated, luckless fellow; 3. Intelligent person; |
சுட்டி 3 | cuṭṭi, adv.<>சுட்டு-. For the sake of; பொருட்டு. எனக்குச்சுட்டி ஒன்றுஞ் செய்யவேண்டாம். Nā. |
சுட்டி 4 | cuṭṭi, n. perh. id. Tongue; நாக்கு. (அக.நி.) |
சுட்டிக்காட்டு - தல் | cuṭṭi-k-kāṭṭu-, v. tr.<> id. +. To show, point out, identify ; குறிப்பிட்டுக் காட்டுதல். உன்னையே சுட்டிக்காட்டுங் காண். (திவ்.பெரியாழ்.1, 4, 4). |
சுட்டிகை | cuṭṭikai, n. prob. cūdīya. An ornament worn by women on the forehead; மகளிர் நுதலணி. சூளிகையுஞ் சுட்டிகையும் (பதினொ.ஆதியுலா, 68.) |
சுட்டிச்சுண்ணம் | cuṭṭi-c-cuṇṇam, n.<>šuddhi +. Scented or aromatic powder used in bathing; உடம்பைத் தூய்மை செய்தற்குரிய வாசனைப்பொடி. சுந்தரப் பொடியுஞ் சுட்டிச்சுண்ணமும் (பெருங்.உஞ்சைக்.42, 73). |
சுட்டிசுட்டியாக | cuṭṭi-cuṭṭi-y-āka, adv.<>சுட்டி1+. In round patches; வட்டம்வட்டமாக. அவன் சரீரத்தில் சுட்டி சுட்டியாக வெள்ளை விழுகிறது. |
சுட்டிட்டிகை | cuṭṭiṭṭikai, n.<>சுட்ட+இட்டிகை.. See சுட்டோடு. சுட்டிட்டிகையால் மாட மாளிகை எடுக்கப் பெறுவதாகவும் (S.I.II, 521, 35) . |
சுட்டித்தலை | cuṭṭi-t-talai, n.<>சுட்டி2+. 1. See சுட்டித்தனம்.(யாழ். அக.) . 2. See சுட்டித்தலையன். Loc. |
சுட்டித்தலையன் 1 | cuṭṭi-t-talaiyaṉ, n.<>சுட்டித்தலை. Mischievous person; துஷ்டன். |
சுட்டித்தலையன் 2 | cuṭṭi-t-talaiyaṉ, n.<>சுட்டி1+. Animal with a white spot on its forehead; உச்சிவெள்ளையுடைய விலங்கு. (J.) |
சுட்டித்தனம் | cuṭṭi-t-taṉam, n.<>சுட்டி2+. Mischievousness, turbulence; துஷ்டத்தனம். |
சுட்டிப்பேசு - தல் | cuṭṭi-p-pēcu-, v. tr. <>சுட்டு-+. To hint, allude to in discourse, make specific reference; குறிப்பாய்ச் சொல்லுதல். Loc. |
சுட்டிமுகடு | cuṭṭi-mukaṭu, n.<>சுட்டி1+. Set of ornaments worn by women on the head; மகளிர் அணியும் தலைச்சாமான். Loc. |
சுட்டியன் | cuṭṭiyaṉ, n. See சுட்டி. . |
சுட்டு - தல் | cuṭṭu-, 5 v. tr. 1. To point out, show, designate, indicate; குறிப்பிடுதல். துன்னுநர் சுட்டவும் (பரிபா.19, 54). 2. To have in view, aim at, desire; 3. to think, consider; 4. To honour; |
சுட்டு | cuṭṭu, n. <>சுட்டு-. [M. cuṭṭu.] 1. Indication, reference; குறிப்பிடுகை. சுட்டுத்தலை போகாத் தொல்குடி (சிலப். 12,21). 2. That which is intended, designated; 2. Honour; 4. See சுட்டெழுத்து. அ இ உ அம்மூன்றுஞ் சுட்டு (தொல். எழுத். 31). 5. See சுட்டணி. |
சுட்டுக்குருவி | cuṭṭukkuruvi, n. See சிட்டுக்குருவி . Loc. . |
சுட்டுக்குவி | cuṭṭu-k-kuvi, n. <>சுடு-+. Screeching of an owl fancied to resemble the word cuṭṭu-k-kuvi and indicate that the corpses should be burnt and heaped; 'பிணங்களைச்சுட்டுக்குவி' எனப் பொருள்படும்படி அமைந்த ஆந்தையின் ஒலிக்குறிப்பு. சுட்டுக் குவியெனச் செத்தோர்ப் பயிருங் கள்ளியம் பறந்தலை. (புறநா.240). |