Word |
English & Tamil Meaning |
---|---|
சுட்டுக்கொட்டைபரப்பு - தல் | cuṭṭu-k-kottai-parappu-, v.tr.<>id. +. Lit., to burn down a city and sow it with castor seeds. To destroy completely, devastate; [ஊரைச் சுட்டு விதைத்தல்] முற்றும் அழித்தல். Colloq. |
சுட்டுக்கோல் | cuṭṭu-k-kōl, n.<>id. +. 1. Smith's poker. See உலையாணிக்கோல். சுட்டுக்கோல்போல வெரியும் புகுவரே (நாலடி, 208). . 2. Mischievous person |
சுட்டுணர்வு | cuṭ - ṭ - uṇarvu, n.<>சுட்டு-+உணர்வு. 1. Knowledge of the mere existence of a thing without knowing its nature, one of eight piramāṇāpācam , q.v. ; பிரமாணாபாசங்கள் எட்டனுள் பொருளுண்மைமாத்திரை காணும் அறிவு. (மணி.27, 61.) 2. Cognition by the senses; |
சுட்டுநட்டவேப்பங்கன்று | cuṭṭu-naṭṭa-vēppaṅ-kaṉṟu, n. Extremely mischievous person; பெருந்துஷ்டன். Tinn. |
சுட்டுப்பெயர் | cuṭṭ-p-peyar, n.<>சுட்டு-+. 1. (Gram) Demonstrative pronoun, as அவன், இவன்; சுட்டெழுத்தை முன்பெற்ற பெயர். சுட்டுப்பெயர்க் கிளவி முற்படக் கிளவர் (தொல்.சொல், 38.) 2. (Gram.) Noun used in the place of pronoun; |
சுட்டுப்பொருள் | cuṭṭu-p-poruḷ, n. <>id.+. 1. Intended meaning, object aimed at; கருதிய பொருள். 2. Image of the object of worship formed in the mind for meditation; |
சுட்டுவிடை | cuṭṭu-viṭai, n.<>id. +. Answer in the form of demonstrative pronouns, one of eṇ-vakai-viṭai, q.v.; எண்வகை விடைகளுள் இது இவன் முதலிய சுட்டுப்பெயர்களாற் கூறும் உத்தரம். (நன்.386, உரை.) |
சுட்டுவிரல் | cuṭṭu-viral, n.<>id. +. [T. tcuṭṭuvēlu, M. cuṇṭanviral.] Forefinger; ஆட்காட்டிவிரல். சுட்டுவிரறனை மாசற நீட்டி. (பரத.பாவ.30). |
சுட்டுவை - த்தல் | cuṭṭu-vai-, v.tr.<>id. +. (J.) 1. To think intently about a person; ஒரு வரை நினைத்தவண்ணமாயிருத்தல். 2. To fix one's mind on the image of the object of worship, in meditation; |
சுட்டுறுகோல் | cuṭṭuru-kōl, n.<>சுடு-+. See சுட்டுக்கோல். 1. கட்டழற் புகூஉஞ் சுட்டுறுகோல் போல் (பெருங். இலாவாண. 8,155). . |
சுட்டெழுத்து | cuṭ-ṭ-eḻuttu, n.<>சுட்டு-+. The demonstrative sounds a, i, u; சுட்டி உணர்த்தும் அ இ உ என்ற எழுத்துக்கள். சுட்டெழுத்தினை முதலாகவுடைய வகரவீற்றுப்பெயர் மூன்றும் (தொல்.எழுத்.378, உரை). |
சுட்டோடு | cuṭṭōṭu, n.<>சுட்ட+ஓடு. Burnt brick; சுட்டசெங்கல். சுட்டோட்டால் மாட மாளிகை எடுக்கப் பெறுவதாகவும்(S.I.II,509,58). |
சுடக்கு - தல் | cuṭakku-, 5 v. tr. See சொடக்கு-. Colloq. . |
சுடக்கு | cuṭakku, n. See சொடக்கு. . |
சுடக்குடித்தவன் | cuṭa-k-kuṭittavaṉ, n.<>சுடு-+. Hasty man; அவசரக்காரன். Colloq. |
சுடர் | cuṭar, n.<>சுடு-, 1. [m.cutas.] Light, brilliance, lustre ; ஓளி. தெறுசுட ரொண்கதிர் ஞாயிறு(புறுநா. 6,27). 2. Sun; 3. Sunshine; 4. Moon; 5. Planet; 6. [K. sudu, M. cuṭar.] Fire; 7. [K. sodar.] Burning lamp; 8. [ K.sodar.] Flame; 9. Spark; 10. See சுடரெண்ணெய்.1 |
சுடர் - தல் | cuṭar, 4 5 v.intr. <>சுடர். To give light; to burn brightly; to shine, as a heavenly body; to sparkle, as a gem; to gleam ஓளிவிடுதல். சுடச்சுடரும் பொண்போல் (குறள், 267). |
சுடர்க்கடை | cuṭar-k-kaṭai, n.<>id. +. (அக.நி.) 1. Firefly; மின்மினி. 2. Peacock; |
சுடர்க்கொடி | cuṭar-k-koṭi, n.<>id. +. Incense of camphor; ஆரத்திக் கர்ப்பூரம். (W.) |
சுடர்ச்சக்கரம் | cuṭar-c-cakkaram, n.<>id. +. The Great Bear, polar circle; துருவசக்கரம்.சுடர்ச்சக்கரத்தைப் பொருந்திவரும் ஆதித்தன் முதலாக வருங் கோட்களது நிலைமையை (பரிபா.19, 46, உரை). |
சுடர்ச்செலவு | cuṭar-c-celavu, n<>id. +. (Astrol.) Division of the rising sign into two equal parts for casting horoscopes; இராசியை இரண்டாகப் பகிர்கை.(W.) |