Word |
English & Tamil Meaning |
---|---|
சுணங்கு 4 | cuṇaṅku, n. [M. cuṇaṅgi.] See சுணங்கன். சுணங்குபல பிணங்குபெருங் குரைப் பினாலும் (அரிச்.பு.மயான.35). . |
சுணங்கை | cuṇaṅkai, n. <>துணங்கை. A kind of devil-dancing. See துணங்கை. ஆடுங் கள்ளும் பராய்ச் சுணங்கை யெறிந்து (திவ்.திருவாய்.4, 6, 7). . |
சுணம் 1 | cuṇam, n.<>svarṇa. Yellow spreading spots on the body of women; அழகு தேமல். சுண நன் றணிமுலை யுண்ண (திவ்.பெரியாழ்.2, 3, 4). |
சுணம் 2 | cuṇam, n. <>சுண்ணம். See சுண்ணம்ப்பொடி. புரிந்த பூவொடு பொற்சுணங் கழும (பெருங்.உசூசைக், 39, 46) . . |
சுணை 1 | cuṇai, n. <>smaraṇa. 1. Sense of shame, sensibility ; சுரணை. துகிலுமிழந்து சுணையுமழிந்து (பட்டினத்.உடற்கூற்றுவண்ணம்.249). 2. Sense; 3. [M. cuṇa.] Keenness, sharpness; 4. Itching, tingling, smarting; 5. Pustules, as in the alimentary canal, formed when a person is attacked with small-pox; 6. [T. sona, M.cuṇa.] Prickle, as in leaves, stalks, etc.; down on fruits; |
சுணை 2 - த்தல் | cuṇai-, 11 v. intr. <> சுணை. To tingle, as tongue after eating something pungent; to twinge, as from the hairs of a caterpillar; to itch severely; to be inflamed, as from the sting of nettle; தினவெடுத்தல். |
சுணைகெட்டவன் | cuṇai-keṭṭavaṉ, n. <>சுணை+. [M. cuṇakeṭṭavaṉ.] See சுணைக்கேடன் Colloq. . |
சுணைக்கேடன் | cuṇai-k-kēṭaṉ, n. <>id.+. Person of blunted sensibilities; இலச்சை கெட்டவன். தானும் ஒக்க மடலெடுப்பானொருசுணைக்கேடன் (திவ்.திருப்பா. 1,20.வ்யா.). |
சுணைக்கோரை | cuṇai-k-kōrai, n. <>சுணை.+. A kind of rough grass; கோரைவகை. (மலை.) |
சுணைநெரிஞ்சி | cuṇai-nerici, n. <>id. +. A kind of nettle; நெரிஞ்சிவகை. |
சுணைப்பு | cuṇaippu, n. <>சுணை. See சுணை.1, 2, ஒருதரஞ் சொன்னால் தெரியாதா? உனக்குச் சுணைப்பு இல்லையா?. Nā. . |
சுணைவு | cuṇaivu, n. <>சுணை-. A kind of gram; பேய்க்கடலை. (மலை.) |
சுத்தக்கட்டி | cutta-k-kaṭṭi, n. <>šuddha +. Lump of pure gold or silver; சுத்தமான வெள்ளி தங்கங்களின் கட்டி. |
சுத்தக்கிரயம் | cutta-k-kirayam, n. <>id. +. Absolute sale; எல்லாவுரிமையையும் விலைக்குக் கொடுத்துவிடுகை. அந்த வீட்டைச் சுத்தக்கிரயம் பண்ணிவிட்டான். Colloq. |
சுத்தகாந்தாரம் | cutta-kāntāram, n. <>id. +. 1. (Mus) Lowest variety of the third note of the gamut, one of cōṭaca-curam, q.v.; சோடச சுரங்களுள் ஒன்று. 2. (Mus.) Anacient secondary melody-type of the ācāṉ class; |
சுத்தகாலம் | cutta-kālam, n. <> id. +. The time or period for the creative activity of the pure Māyā; சுத்தமாயாகாரிய உற்பத்தியாதிகளுக்குப் பிரயோகமாகும் காலம். (சி.சி.2, 54, சிவாக்.) |
சுத்தகௌடம் | cutta-kauṭam, n. <>id. + gauda. An ancient district which included a large portion of modern Bengal, one of pacakauṭam, q.v.; பஞ்சகௌடங்களில் வங்காளத்தின் பெரும்பகுதி யடங்கிய தேசம். |
சுத்தசத்துவம் | cutta-cattuvam, n. <>id. +. 1. Absolute purity of character; கலப்பற்ற சத்துவ குணம். 2. Non-sentient objects, as towers, etc., in Vaikuṇṭam; |
சுத்தசலம் | cutta-calam, n. <>id. + jala. Pure cold water, as used for drinking purposes; குளிர்ந்த நல்லதண்ணீர். |
சுத்தசாரி | cutta-cāri, n. <>id. +. A kind of dancing; நாட்டியவகை. தானகமே சுத்தசாரி. (திருவிளை.கான்மா, 8.) |
சுத்தசாளங்கம் | cutta-cāḷaṅkam, n. A kind of mattaḷam; மத்தளவகை. (பரத.ஒழிபி.13.) |
சுத்தசிவபதம் | cutta-civa-patam, n. <>šuddha +. Abode of absolute Bliss ; பரமுத்தி. சத்திக்கு மேலே பராசத்தி தன்னுள்ளே சுத்தசிவபதம். (திருமந்.1768). |
சுத்தசிவம் | cutta-civam, n. <>id. +. Pure šiva, as formless ; நிட்களபரசிவம். (சதாசிவ.) |
சுத்தசூனியம் | cutta-cūṉiyam, n. <>id. +. Absolute nothingness, inanity, non-entity, complete ruin ; முழுப்பாழ். |
சுத்தசூனியவாதம் | cutta-cūṉiya-vātam, n. <>id. +. Nihilism; எல்லாம் சூனியமென்று வாதிக்கும் வாதம். |