Word |
English & Tamil Meaning |
---|---|
சுண்ணக்கல் | cuṇṇa-k-kal, n. Limestone. See சுக்கான்கல். (யாழ்.அக.) . |
சுண்ணகக்குற்றி | cuṇṇaka-k-kuṟṟi, n. <>சுண்ணகம்+. A small casket for keeping aromatic bathing powder ; சுகந்தப்பொடி வைக்கும் சிமிழ். சுட்டிக்கலனுந் சுண்ணகக்குற்றியும் (பெருங்.உஞ்சைக்.38, 168) . |
சுண்ணகம் | cuṇṇakam, n. <>cūrṇaka. See சுண்ணப்பொடி. . |
சுண்ணச்சாந்து | cuṇṇa-c-cāntu, n .<>சுண்ணம்+. Plaster, mortar; சுண்ணாம்புக்காரை. |
சுண்ணப்பொடி | cuṇṇ-p-poṭi, n. <>id. +. Aromatic powder mixed with saffron and gold or silver dust, used for sprinkling over guests on festive occasions; விழாமுதலிய காலங்களில் மக்களின்மேல் தூவும் கந்தப்பொடி. (W.) |
சுண்ணம் | cuṇṇam, n. <>Pkt. cuṇṇa. 1. Powder dust; பொடி. செம்பொற் சுண்ணம் (பெருங்.உஞ்சைக், 33, 120). 2. See சுண்ணப்பொடி. பலதொகு பிடித்த தாதுகு சுண்ணத்தர் (மதுரைக். 399). 3. Pollen dust; 4. Flower; 5. The 24th nakṣatra; 6. Lime, oxide of calcium; 7. A mode of constructing a stanza in which the words in a pair of four-footed lines are transposed from their natural order; 8. A stanza of four lines set to music, one of four col-vakai; 9. A variety of silk; |
சுண்ணமாடு - தல் | cuṇṇam-āṭu-, v. intr .<>சுண்ணம்+. To sprinkle scented powder on festive occasions, etc.; விழா முதலிய காலங்களிற் கந்தப்பொடி தூவுதல். (W.) |
சுண்ணமொழிமாற்று | cuṇṇa-moḻi-māṟ-ṟu, n. <>id. +. Construing a cuṇṇam verse by suitable transponsition of words; சுண்ணமாக அமைந்த செய்யுளை ஏற்றபடி மொழிமாற்றிப் பொருள் கொள்ளுகை. (நன்.412, மயிலை.) |
சுண்ணவட்டு | cuṇṇa-vaṭṭu, n. <>id. +. A kind of syringe for sprinkling water mixed with aromatic powder; சுண்ணங்கலந்த நீரை வீசுங் கருவி. சுண்ணவட்டுஞ் சுழி நீர்க்கோடும் (பெருங்.உஞ்சைக்.38. 107). |
சுண்ணவாசி | cuṇṇa-vāci, n. <>id. + vāsa. Wild jasmine. முல்லை. (மலை.) . |
சுண்ணவிரோதி | cuṇaa-virōti, n. Strong compound medicines . சவ்வீரம். (சங்.அக.) . |
சுண்ணாம்படி - த்தல் | cuṇṇāmpaṭi-, v. intr. <>சுண்ணாம்பு+. To whitewash; வெள்ளையடித்தல். |
சுண்ணாம்படைதல் | cuṇṇampaṭaital, n. <>id. +. Settling of lime in sweet toddy; பதனீரில் சுண்ணாம்புவண்டல் படிகை. (W.) |
சுண்ணாம்பு | cuṇṇāmpu, n. <>Pkt. cuṇṇa. [M. cuṇṇāmpu.] 1. Lime burnt in the kiln, quicklime ; சுட்ட சுண்ணாம்புக்கல். 2. Slaked lime; 3. Macerated lime. lime specially prepared as fine plaster; |
சுண்ணாம்புக்கரண்டகம் | cuṇṇāmpu-k-karaṇṭakam, n. <>சுண்ணாம்பு+. Small casket for lime; தாம்பூலத்திற்காகச் சுண்ணாம்பு வைக்கும் மூடு செப்பு . |
சுண்ணாம்புக்கல் | cuṇṇāmpu-k-kal, n. <>id. +. Limestone, calx ; சுண்ணாம்புச்சத்துள்ள கல். |
சுண்ணாம்புக்காரன் | cuṇṇāmpu-k-kāran, n. <>id. +. Person belonging to lime-selling caste; சுண்ணாம்பு நீற்றிவிற்குஞ் சாதியான். |
சுண்ணாம்புக்காரை | cuṇṇāmpu-k-kārai, n. <>id. +. 1. Mortar; கட்டடத்திற்கு உரிய சுண்ணாம்புச் சாந்து. 2. Dried plaster of chunam; |
சுண்ணாம்புக்காளவாய் | cuṇṇāmpu-k-kāḷvāy, n. <>id. +. Lime-kiln; சுண்ணாம்பு நீற்றுஞ் சூளை . |
சுண்ணாம்புக்கீரை | cuṇṇāmpu-k-kīrai, n. <>id. +. 1. A kind of greens, Achyranthes; கீரைவகை. (W.) 2. A common wayside weed; See சிறுபூளை. |
சுண்ணாம்புக்குட்டான் | cuṇṇāmpu-k-kuṭṭāṉ, n. <>id. +. Toddy-drawer's small basket for lime; பதனீர் இறக்குவோர் சுண்ணாம்பு வைக்குஞ் சிறுகூடை. (J.) |
சுண்ணாம்புகுத்து - தல் | cuṇṇāmpu-kuttu-, v. intr. <>id. +. To pound lime with sand and water and make it into mortar; சுண்ணாம்பை மணல்கலந்து இடித்தல். |
சுண்ணாம்புச்சிப்பி | cuṇṇāmpu-c-cippi, n. <>id. +. Lime-shells; சுண்ணாம்பாக நீற்ற உதவுஞ் சிப்பி. Loc. |
சுண்ணாம்புத்தண்ணீர் | cuṇṇāīmpu-t-taṇṇīr, n. <>id. +. 1. Lime-water used in bleaching and washing linen, in paper making, in dyeing and in dressing leather; ஆடைமுதலியன வெளுக்கவும் மருந்து சாயமுதலியன உண்டாக்கவும் உபயோகிக்கும் சுண்ணாம்புகலந்த தெளிநீர். 2. White wash; |