Word |
English & Tamil Meaning |
---|---|
சுடுநிலம் | cuṭu-nilam, n. <>id . +. See சுடு காடு. (திவா.) . |
சுடுநீர் | cuṭu-nīr, n. <>id. +. See சுடுதண்ணீர். . |
சுடுநோக்கு | cuṭu-nōkku, n. <>id. +. 1. See சுடுகண். Colloq. . 2. Fierce-looking eyes; |
சுடுபடை | cuṭu-paṭai, n. <>id. +. See சுடுகோல். 1. கழுவொடு சுடுபடை சுருக்கிய தோல் (கலித்.106). . |
சுடுபுண் | cuṭu-puṇ, n. <>id. +. Scald, burn; சுட்டதனால் உண்டான புண் . Colloq. |
சுடுபொன் | cuṭu-poṉ, n. <>id. +. Refined gold, as burnt by fire; புடமிட்ட பொன். சுடு பொன் வளைஇய..சுற்றொடு. (கலித்.85). |
சுடுமட்பலகை | cuṭa-maṭ-palakai, n. <>சுடுமண்+. Burnt brick; செங்கல். சுடுமட் பலகை (பெரியபு.ஏயர்கோன்.49). |
சுடுமடியைப்பிடியெனல் | cuṭu-maṭiyai-p-piṭi-y-eṉal, n. Expr. of haste, quickness; விரைவுக் குறிப்பு. காரியம் சுடுமடியைப்பிடி யென்று நடந்துவிட்டது. Nā. |
சுடுமண் | cuṭu-maṇ, n. <>சுடு-+. 1. See சுடுமட்பலகை. சுடும ணோங்கிய நெடுநகர் வரைப்பில் (பெரும்பாண். 405). . 2. Burnt tile; 3. Earthen vessel; |
சுடுமருந்து | cuṭu-maruntu, n. <>id. +. 1. Medicine prepared by calcination; நீறுசெய்த மருந்து. (W.) 2. Caustic |
சுடுமூஞ்சி | cuṭu-mūci, n. <>id. +. (Tu. sudumōṇe.) See சிடுமூஞ்சி. Colloq. . |
சுடுவல் | cuṭuval, n. <>id. Blood, as warm; இரத்தம். (திவா.) |
சுடுவன் | cuṭuvaṉ, n. <>id. See சுடுவல். (பிங்.) . |
சுடுவான் | cuṭuvāṉ, n. <>id. Galley, caboose; மரக்கலத்துள்ள சமையலறை. Naut. |
சுடுவு | cuṭuvu, n. <>சூடு-, See சுடு3.(சூடா.) . |
சுண்ட | cuṇṭa, adv. <>சுண்டு2-. Completely, to the last drop; முற்றும். சுண்டக் கறந்ததினாற் கன்றுக்குப் பாலில்லை. Loc. |
சுண்டக்கட்டு - தல் | cuṇṭa-k-kaṭṭu-, v. tr. <>id. +. To stretch tight and fasten, as a rope tied to posts; இழுத்துக்கட்டுதல். (J.) |
சுண்டகன் | cuṇṭakaṉ, n. <>suṇdaka. Toddy-drawer; கள்ளிறக்குவோன். (யாழ்.அக.) |
சுண்டப்பிடி - த்தல் | cuṇṭa-p-piṭi-, v. intr. <>சுண்ட+. 1. To hold tight, as in measuring cloth ; ஆடையை அளக்க இழுத்துப்பிடித்தல். 2. To be affected with colic pains; 3. To be niggardly in oxpenditure; |
சுண்டம் | cuṇṭam, n.<>šuṇdā. 1.Fermented liquor, toddy; கள். (மூ. அ.) 2. Elephant's trunk; |
சுண்டல் | cuṇṭal, n. <>சுண்டு1- cf. šuṇṭh. 1. See சுண்டற்கறி. . 2. Boiled and spiced pulse; |
சுண்டலி | cuṇṭali, n. Axillary cymed false holly, s.tr., Gomphandra axillaris; மரவகை. (L.) |
சுண்டற்கறி | cuṇṭaṟ-kaṟi, n. <>சுண்டு1-+. A warmed-up dish of the remnants of the day's curry, rechauffe ; எரித்த பழங்கறி. Loc. |
சுண்டன் 1 | cuṇṭaṉ, n. cf. šuṇdi-mūṣikā. [K. suṇda.] Grey musk-shrew. See மூஞ்சூறு. (பிங்.) . |
சுண்டன் 2 | cuṇṭaṉ, n. <>šuṇṭha. Ignorant, stupid person; அறிவிலி. (சது.) |
சுண்டன் 3 | cuṇṭaṉ, n. 1. The 24th nakṣatra. See சதயம். (பிங்.) . 2. Holly-leaved berried spindle tree. See கருக்குவை. (L.) |
சுண்டாங்கி | cuṇṭāṅki, n. prob. சுண்டு1-. (J.) 1. Seasoning stuffs pounded and used with curry; கறியோடு சேர்க்க அரைத்த சம்பாரம். 2. Small matter, trifle; 3. Scantiness in measure or quantity; |
சுண்டாங்கியார் | cuṇṭāṅkiyār, n. <>சுண்டாங்கி. Stingy woman; சிக்கனக்காரி. (J.) |
சுண்டாங்கொள்ளி | cuṇṭāṅ-koḷḷi, n. <>சுண்டான்2+. Stick ignited at one end, used by children as a firework; குழந்தைகள் தீக்கொளுத்தி விளையாடுங் குச்சி. Loc. |
சுண்டாயம் | cuṇṭāyam, n. perh. cuṇṭ+ஆயம். Sport; விளையாட்டு.இவையென்ன சுண்டாயங்களே (திவ்.திருவாய்.7, 8, 7). |
சுண்டாலம் | cuṇṭālam, n. <>šuṇdā-la. Elephant; யானை. (யாழ்.அக.) |
சுண்டாலி | cuṇṭāli, n. See சுண்டாலம். (பிங்.) . |