Word |
English & Tamil Meaning |
---|---|
சுபட்சம் | cupaṭcam, n. <>sva-pakṣa. 1. One's own side in a debate or discussion, views or doctrines of one's own sect or party, opp. to para-paṭcam; வாதத்தில் தன் கொள்கை. 2. The portion of Civa-āṉa-cittiyār that enunciats the principles of the šaiva sect; |
சுபடன் | cupaṭaṉ, n. <>su-bhaṭa. Ideal hero or warrior; சுத்தவீரன். போர்க்களத்திலெவனே சுபடனா மென்ன (ஞானவா.நிருவாண.48). |
சுபத்தானம் | cupa-t-tāṉam, n. <>šubha + sthāna. (Astrol.) Auspicious or favourable sign of the zodiac relative to the ascendant in horoscope; சாதகசக்கரத்தில் சுபத்தைக் குறிக்கும் இராசி . |
சுபத்திரை | cupa-t-tirai, n. <>Subhadrā. 1. A wife of Arjuna ; அருச்சுனன் மனைவி. சுபத்திரையுந் தோழியர்கள் சூழ வந்தாள் (பாரத. அருச்சுனன் றீர். 54). 2. Black cow; |
சுபதம் | cupatam, n. <>šubha-da. 1. That which gives happiness; சுபத்தைக் கொடுப்பது. சுபதக்ரம முறுநெறியே (திருவாலவா. 28, 49). 2. Pipal tree; |
சுபதினம் | cupa-tiṉam, n. <>subha +. Auspicious day; நன்னாள். |
சுபந்தம் | cupantam, n. <>sub-anta. (Gram.) Inflected noun; உருபேற்ற பெயர்ச்சொல்.தத்திதங்காரகமாஞ் சுபந்தம். (பி.வி.42). |
சுபம் 1 | cupam, n. <>šubha. 1. Prosperity, auspiciousness ; மங்களம். சுபமாக்கு மசுபந்தன்னை (ஞானவா.முமுட்சு.20). 2. Happiness, felicity, spiritual bliss; 3. Final deliverance; 4. Goodness, excellence; 5. Good deed, auspicious event; 6 Beauty; 7. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.; |
சுபம் 2 | cupam, n. <>šubhra. whiteness; வெண்மை. (சூடா.) |
சுபமங்களம் | cupa-maṅkaḷam, n. <>šubha +. Benedictory utterance in a song; வாழ்த்துப் பாட்டு. சுபமங்களம் பாடுக. |
சுபமஸ்து | cupam-astu, n. <>id. +. An expression meaning Let there be auspiciousness', used at the beginning or end of end or a writing; கடிதம் முதலியவற்றின் முதலிறுதிகளில் 'மங்கள முண்டாகுக' என வாழ்த்துதலைக் குறிக்கும் ஒரு தொடர்மொழி. |
சுபமிருத்து | cupa-miruttu, n. <>id. +. Natural death of a person at ripe old age; முதிர்ந்த பருவத்தில் நேரும் நன்மரணம். |
சுபமுகூர்த்தம் | cupa-mukūrttam, n. <>id. +. Auspicious time, as for marriage; நல்லவேளை. |
சுபயோகம் | cupa-yōkam, n. <>id. + yōga. 1. Conjunction of a week-day with a particular nakṣatra of titi, considered auspicious ; சிற்சில வாரங்களோடு சிற்சில நக்ஷத்திரங்களேனும், திதிகளேனும் சேர்வதனால் நன்மை விளைப்பதாகக் கருதப்படும் யோகம். (விதான.குணாகுண.9 14) (சோதிட.சிந்.45.) 2. Rare luck; |
சுபவசனம் | cupa-vacaṉam, n. <>id. +. See சுபவாக்கு. . |
சுபவாக்கியம் | cupa-vākkiyam, n. <> id. +. See சுபவாக்கு. . |
சுபவாக்கு | cupa-vākku, n. <>id. +. Auspicious words; oracular indication of good; நன்னிமித்தமான வாக்கு. |
சுபவாசகம் | cupa-vācakam n. <>id. +. See சுபவாக்கு. . |
சுபவாதனை | cupa-vātaṉai, n. <>id. + vāsanā. Blissful experience of the soul, spiritual enjoyment; ஆன்மா ஆனந்தத்துள் அழுந்து கை. (W.) |
சுபன் | cupaṉ, n. <>id. (Astrol.) Planet that brings good fortune, opp. to acupaṉ; நன்மையை விளைவிக்குங் கிரகம். |
சுபன்னன் | cupaṉṉaṉ, n. <>su-parṉa. Garuda, as having beautiful wings; [அழகிய சிறகுகளை யுடையவன்] கருடன். |
சுபா | cupā, n. <>Arab. subā. District or province, especially of the Moghul empire; தேசப்பகுதி. (W. G. 491.) |
சுபாங்கி | cupāṅki, n. <>šubhāṅgī. Woman of fine features or beautiful limbs; அழகிய அங்கமுள்ளவள். (சங்.அக.) |
சுபாங்கை | cupāṅkai, n. <>šubhāṅgā. See சுபாங்கி. . |
சுபாசுபம் | cupācupam, n. <>šubha + a-šubha. Occasions of weal and woe; நன்மை தீமைகள் நிகழுங் காலம் (யாழ்.அக.) |
சுபாதார் | cupātār, n. <>Arab. subā +. Governor of a province; நாட்டதிகாரி. (R. T.) |