Word |
English & Tamil Meaning |
---|---|
செம்புள் | cem-puḷ, n. <>செம்-மை + புல். Sacred kite ; கருடன். செம்புளாய்க் கொடிய நாரசிங்கமாய் (திருவிளை. யானையெ. 41.) |
செம்புளிச்சான் | cem-puḷiccāṉ, n. See செம்புளிச்சை . (L.) . |
செம்புளிச்சை | cem-puḷiccai, n. <>செம்-மை +. 1. Red cedar ; See தேவதாரு. (பிங்.) 2. Roselle, s. sh., Hibiscus sabdariffa ; |
செம்புறா | cempuṟā, n. perh. செம்பிறால். A kind of fish ; மீன்வகை . (J.) |
செம்புறைக்கல் | cem-puṟai-k-kal, n. See செம்பாறாங்கல். (சங். அக.) . |
செம்புனல் | cem-puṉal, n. <>செம்-மை +. 1. Freshes in river; புதுவெள்ளநீர். தலைப்பெயற் செம்புன லாடி (ஐங்குறு. 80.) 2. Blood; |
செம்பூ | cem-pū, n. <>id. +. A plant with red flower ; செந்நிறப் பூவுள்ள செடிவகை. செம்பூங் கண்ணியர் (பரிபா. 22, 21) . |
செம்பூசனி | cem-pūcaṉi, n. <>id. +. A variety of reddish pumpkin ; பூசணிவகை. (மூ. அ.) |
செம்பூட்சேய் | cem-pūṭ-cēy, n. A disciple of Agastya, author of kūṟṟiyal ; அகத்தியனார் மாணாக்கருள் ஒருவரும் கூற்றியல் என்னும் நூலியற்றிய வருமாகிய ஆசிரியர். (இறை. 56, உரை.) |
செம்பூரம் | cem-pūram, n. <>செம்-மை +. See செம்பூரான். (W.) . |
செம்பூராங்கல் | cem-pūrāṅ-kal, n. See செம்பாறாங்கல். (M. M. 431.) . |
செம்பூரான் | cem-pūrāṉ, n. <>செம்-மை +. Red centipede ; பூரான்வகை. (சங். அக.) |
செம்பூரான்கல் | cem-pūrāṉ-kal, n. See செம்பாறாங்கல். (கட்டடநா. 41.) . |
செம்பூவம் | cem-pūvam, n. <>செம்-மை +. Longan, m. tr., Nephalium longana ; மரவகை . Kāṭar. |
செம்பூறல் | cempūṟal, n. <>செம்பு + ஊறு-. Verdigris ; செம்பிலுண்டாகுங் களிம்பு . (J.) |
செம்பூறு - தல் | cempūṟu-, v. intr. <>id. +. To form verdigris, as on copper ; களிம்பு உண்டாதல் . (W.) |
செம்பை | cempai, n. 1. Common sesban . See சிற்றகத்தி. (L.) . 2. Jerusalem thorn . See சீமைச்செம்பை. (L.) |
செம்பொடி | cem-poṭi, n. <>செம்-மை +. 1. Red sand ; செம்மணல். (சங். அக.) 2. Pollen ; |
செம்பொத்தி | cem-potti, n. prob. id. +. A kind of cloth ; ஆடைவகை. (சிலப். 14, 108, உரை.) |
செம்பொருள் | cem-poruḷ, n. <>id. +. 1. Natural, ordinary meaning; நேர்பொருள். 2. True significance; 3. Object of supreme worth or excellence; 4. God; 5. Virtue; |
செம்பொருளங்கதம் | cem-poruḷ-aṅkatam, n. <>செம்பொருள் +. Open, undisguised lampoon ; வாய்கரவாது சொல்லிய வசைப்பாட்டு (தொல். பொ.437, உரை.) |
செம்பொறி | cem-poṟi, n. <>செம்-மை +. Royal seal ; அரசமுத்திரை. (அக. நி.) |
செம்பொன் | cem-poṉ, n. <>id. +. [K. cembon, M. cemponnu.] Superior gold ; சிறந்த பொன். செம்பொன் விளக்கொடு சேடியர் முந்துற (பெருங். உஞ்சைக். 33, 189) . |
செம்பொன்வரை | cem-poṉ-varai, n. <>செம்பொன் +. Mt. Mēru, as golden ; [செம்பொன்மயமானது] மேருமலை. கல்விச்செம்பொன் வரையினாரளவில்லா வளவுசென்றார் (திருக்கோ. 308.) |
செம்போக்கு | cem-pōkku, n. <>செம்-மை + (Jaina.) Upward progress of souls in higher births ; உயிர் உயர்பிறவிகளிற் சென்று கொண்டிருக்கை. இது செம்போக்கி னியல்பு. (மணி. 27, 157) . |
செம்போத்து | cem-pōttu, n. <>id. +. [K. cempōta, M. cempōttu.] Crow pheasant, Centropus rufipennis ; ஒருவகைப் பறவை. (பிங்.) |
செம்போதகர் | cem-pōtakar, n. prob. id. + bōdhaka. A class of Arhats; அருகரில் ஒரு பகுதியார். (சி. சி. ஆசீவகன்மறுதலை, 2, பர.) |
செம்மகள் | cem-makaḷ, n. <>id. +. 1. Lakṣmī, as beautiful ; இலக்குமி. முளரிநிறை செம்மகள் முன்னி யாடுக (கல்லா. 39, 4.) 2. Artless, inexperienced girl ; |
செம்மட்டி | cem-maṭṭi, n. <>id. +. 1. A kind of mussel or oyster ; ஒருவகைச் சிப்பி. (W.) 2. Tree turmeric ; |