Word |
English & Tamil Meaning |
---|---|
செம்பவளச்சம்பா | cem-pavaḷa-c-campā, n. <>செம்பவளம் +. A kind of reddish paddy ; செந்நிறமுள்ள சம்பாநெல்வகை . |
செம்பவளம் | cem-pavaḷam, n. <>செம்-மை +. 1. Coral of deep red colour; வெளுப்புக் கலவாது நன்றாகச் சிவந்துள்ள பவளவகை. வாய் செம்பவளம் (திவ். திருவாய். 2, 5, 5). 2. Round-shaped red coral, dist. fr. koṭi-p-pavaḷam; |
செம்பழம் | cem-paḻam, n. <>id. +. Fruit almost ripe ; செங்காய் . (J.) |
செம்பளி - த்தல் | cempaḷi-, 11 v. tr. To close the eyes, as in terror ; அச்சமுதலிய காரணம் பற்றிக் கண்ணை இடுக்கிக்கொள்ளுதல். அஞ்சிக் கண்ணைச் செம்பளித்தவாறே (ஈடு, 5, 5, 3) . |
செம்பறாம்பண்ணி | cempaṟāmpaṇṇi, n. Sea-fish, reddish brown, Serranus polleni ; செம்பழுப்புநிறமுள்ள ஒருவகைக் கடல்மீன் . |
செம்பனசை | cem-paṉacai, n. <>செம்-மை +. A venomous snake ; பனசைப்பாம்புவகை. (யாழ். அக.) |
செம்பாகம் 1 | cem-pākam, n. <>id. + bhāga. See செம்பாதி. காமத்திற் செம்பாக மன்று பெரிது (குறள், 1092.) . |
செம்பாகம் 2 | cem-pākam, n. <>id. + pāka. Lucidity; clear, natural flow of style ; இலளிதம். அவர்கவி செம்பாகமாயுள்ளது . |
செம்பாட்டுத்தரை | cem-pāṭṭu-t-tarai, n. <>செம்பாடு +. Red earth, red soil ; செம்மண் பூமி. செம்பாட்டுத் தரையிலே மலையருவிகள் விழுந்தாற்போல (திவ். பெருமாள். 10, 2, வ்யா.) . |
செம்பாட்டுநிலம் | cem-pāṭṭu-nilam, n. <>id. +. See செம்பாட்டுத்தரை. (அகநா. 26, 24, உரை.) . |
செம்பாட்டுமண் | cem-pāṭṭu-maṇ, n. <>id. +. See செம்பாட்டுத்தரை. (W.) . |
செம்பாடு | cem-pāṭu, n. <>செம்-மை +. (W.) 1. Red soil ; செம்மண்பூமி. 2. Anything soiled or tinged with red earth ; |
செம்பாதி | cem-pāti, n. <>id. +. [M. cembāti.] Exact half, moiety ; சரிபாதி. இவ்வூர்த் தச்சக்காணி செம்பாதியுடைய தச்சன். (S. I. I. iii, 80). |
செம்பாம்பு | cem-pāmpu, n. <>id. +. Moon's descending node ; கேது. (திவா.) |
செம்பாரை | cem-pārai, n. <>id. +. Horse mackerel, silvery Caranx affinis; வரிப்பாரை என்னும் மீன் . (W.) |
செம்பால் 1 | cem-pāl, n. <>id. + பால். 1. Blood ; இரத்தம். செம்பா லிறைச்சி திருந்த மனை செய்து (திருமந். 461). 2. Blood in the womb causing pregnancy; See சுரோணிதம். (பிங்.) |
செம்பால் 2 | cem-pāl, n. <>id. + பால். See செம்பாதி. செம்பால் வாரம் சிறுமைக்கெல்லை (தொல். பொ. 463). . |
செம்பால்பாய் - தல் | cempāl-pāy-, v. intr. <>செம்பால்1+. To glow with health and beauty, as one's youth, making the blood-vessels appear through the transparent skin ; கட்டிள மையால் சரீரத்தில் இரத்தவோட்டம் தெரியும்படியாயிருத்தல். இவனுடைய பால்யம் செம்பால் பாயாநி¢ற்கும் (திவ். அமலனாதி. 9, வ்யா.101). |
செம்பாலை | cem-pālai, n. <>செம்-மை +. (Mus.) A melody type of the pālai class ; பாலைப்பண்வகை. (பிங்.) |
செம்பாளை | cem-pāḷai, n. <>id. +. 1. A reddish kind of paddy. See தில்லைக்சட்டிநெல். (W.) . 2. A species of campā paddy ; |
செம்பாற்சிட்டி | cem-pāṟ-ciṭṭi, n. <>id. +. A kind of greens ; கீரைவகை. (யாழ். அக.) |
செம்பாறாங்கல் | cem-pāṟāṅ-kal, n. <>id. + பாறை + கல். Laterite, cabook ; செந்நிறப்பாறை . |
செம்பாறைநண்டு | cem-pāṟai-naṇṭu, n. <>id. + id. +. Large red crab ; சிவப்பு நண்டு . |
செம்பி | cempi, n. Black bee ; கருவண்டு. (யாழ். அக.) |
செம்பிச்சி | cempicci, n. See செம்பிச்சு. (மூ. அ.) . |
செம்பிச்சு | cempiccu, n. prob. செம்பு. A prepared arsenic ; செப்புத்தொட்டிப்பாஷாணம். (மலை.) |
செம்பித்தரோகம் | cem-pitta-rōkam, n.<>செம்-மை +. A bilious disease ; பித்த நோய் வகை. (சீவரட். 185.) |
செம்பிநாட்டுமறவன் | cempi-nāṭṭu-maṟavaṉ, n. A sub-sect of Maṟava caste ; மறவர் வகையான் . (E. T. v, 32.) |
செம்பியன் | cempiyaṉ, n. <>šaibya. 1. King of the Chola dynasty, as descendant of šibi; [சிபியின் வழிவந்தவன்] சோழன். செம்பியர் மருகன் (புறநா. 228, 9). 2. An ancient chief, noted for his liberality, one of seven mutal-vaḷḷalkaḷ, q. v.; |
செம்பியன்தமிழப்பேரரையன் | cem-piyaṉ-tamiḻa-p-pēr-araiyaṉ, n. <>செம்பியன் +. A title conferred by the later Cholas ; பிற்காலத்துச் சோழர்களாற் கொடுக்கப்பட்டுவந்த பட்டங்களிலொன்று. (S. I. I. v, 238.) |