Word |
English & Tamil Meaning |
---|---|
செம்பக்கால் | cempa-k-kāl, n. prob. செம்பை +. Unplanted betel-garden with young akatti plants ; வெற்றிலைக்கொடி நடாத இளமையான அகத்திச் செடிகளையுடைய வெற்றிலைத் தோட்டம் . (R. T.) |
செம்பகம் | cempakam, n. <>campaka. See செண்பகம்1. Colloq. . |
செம்பகை | cem-pakai, n. <>செம்-மை +. Harsh note of a lute-string, due to bad wood of the lute ; மரக்குற்றத்தால் நரம்பு இன்பமின்றி இசைக்கையாகிய யாழ்க்குற்றம். செம்பகை யார்ப்பேயதிர்வே கூடம். (சிலப். 8, 29) . |
செம்பசலை | cem-pacalai, n. <>id. +. Red Malabar nightshade, m. sh., Basella rubra ; பசலைவகை. (மலை.) |
செம்பசளை | cem-pacaḷai, n. See செம்பசலை. (யாழ். அக.) . |
செம்பஞ்சி | cem-paci, n. See செம்பஞ்சு. (சிலப். 6, 82, அரும்.) . |
செம்பஞ்சு | cem-pacu, n. <>செம்-மை +. 1. Brazil cotton, s. tr., Gossypium barbadense acuminatum ; பருத்திவகை. (L.) 2. Cotton coloured with lac-dye; |
செம்பஞ்சுக்குழம்பு | cem-pacu-k-kuḻam-pu, n. <>செம்பஞ்சு +. Paste prepared from red cotton, used to dye women's feet ; செம்பஞ்சாற் செய்யப்பட்டு மகளிர் காலிற் பூசியணியப்பட்டு வந்த குழம்புவகை. (மணி. 6, 110, உரை) . |
செம்பஞ்சூட்டு - தல் | cem-pacūṭṭu-, v. intr. <>id. +. To paint women's feet with red-cotton dye ; மகளிர் பாதத்திற்குச் செம்பஞ்சுக் குழம்பு அணிதல். |
செம்பஞ்செழுது - தல் | cem-paceḻutu-, v. intr. <>id. +. See செம்பஞ்சூட்டு-. . |
செம்பட்டத்தி | cempaṭṭatti, n. See செம்படத்தி. (யாழ். அக.) . |
செம்பட்டை | cem-paṭṭai, n. <>செம்-மை + படு-. Brown colour of hair ; மயிரின் ஒருவகைச் சிவப்பு நிறம். Colloq. |
செம்பட்டைபாய் - தல் | cempaṭṭai-pāy-, v. intr. <>செம்பட்டை +. To become brown, as hair ; செந்நிறமாதல். அவன் தலை செம்பட்டை பாய்ந்தது . |
செம்பட்டைமயிர் | cem-paṭṭai-mayir, n. <>id. +. Brown hair ; செம்மயிர். Colloq. |
செம்படத்தி | cem-paṭatti, n. Fem. of செம்படவன். Woman of the fisherman caste; செம்படவச்சாதிப்பெண். (சங். அக.) |
செம்படம் | cempaṭam, n. <>sam-puṭa. Small, round or oval metal box for keeping holy ashes ; திருநீறுவைக்குஞ் சிறுசெப்பு . Loc. |
செம்படவச்சி | cempaṭavacci, n. See செம்படத்தி. . |
செம்படவன் | cem-paṭavaṉ, n. perh. செம்-மை + படவு. Fisherman ; மீன்வலைஞன். (யாழ். அக.) |
செம்படாம் | cem-paṭām, n. <>id. +. Red cloth ; சிவந்த ஆடை. (திவா.) |
செம்படை | cem-paṭai, n. <>id. + படு-. See செம்பட்டை. (J.) . |
செம்படைச்சி | cem-paṭaicci, n. See செம்படத்தி. (யாழ். அக.) . |
செம்பண்ணை | cem-paṇṇai, n.<>செம்-மை +. Cock's comb. See சாவற்சூட்டுப்பண்ணை. (மலை.) . |
செம்பத்தி | cem-patti, n. <>id. + bhakti. True piety ; உண்மையான அன்பு. தாமரைத்தாள் செம்பத்தியால் வணங்காச் சிறியார் (திருநூற். 23) . |
செம்பயிரவப்பூண்டு | cem-payirava-p-pūṇṭu, n. perh. id. +. Unarmed orange nail dye, m. sh., Crossandra undulaefolia ; மருதோன்றிவகை . (L.) |
செம்பரக்கு | cemparakku, n. <>செம்பு +. Square cake of crimson colouring-matter, obtained by pouring warm water on stick-lac ; கொம்பரக்கில் வெந்நீரை விட்டு உண்டுபண்ணும் அரக்குவகை . (M. M. 427.) |
செம்பரத்தை | cem-parattai, n. [M. cembaratti.] Shoe-flower, l. sh., Hibiscus rosasinensis ; செடிவகை. (பிங்.) |
செம்பருத்தி | cem-parutti, n. <>செம்-மை +. [K. kembatti, M. cembarutti.] 1. A kind of superior cotton used in making sacred thread; பூணூல் நூற்க உதவும் பருத்திவகை. (G. Sm. D. I, i, 227.) திலக முலோத்திரஞ் செம்பருத்திப்பூ. (சிலப். 14, 187, உரை). 2. Brazil cotton. See செம்பஞ்சு. (L.) 3. A variety of cotton, s. tr., Gossypium arboreum; |
செம்பருந்து | cem-paruntu, n. <>id. +. Sacred kite ; கருடன் . Loc. |
செம்பலக்கிளுவை | cem-pala-k-kiḷuvai, n. Wolly oblong bluish-flowered prickly night-shade ; See பேய்ச்சுண்டை . (L.) . |
செம்பலகை | cem-palakai, n. <>செம்-மை +. Brick ; செங்கல் . (W.) |
செம்பலா | cempalā, n. perh. id. +. Country cinnamon, m. tr., Cinnamomum wightii ; இலவங்கவகை. (L.) |