Word |
English & Tamil Meaning |
---|---|
செம்பியன்தமிழவேள் | cempiyaṉ-tamiḻa-vēḷ, n. <>id. +. A title conferred by the later Cholas ; பிற்காலத்துச் சோழர்களாற் கொடுக்கப்பட்டுவந்த பட்டங்களில் ஒன்று . (S. I. I. iii, 221.) |
செம்பிரண்டை | cem-piraṇṭai, n. <>செம்-மை +. Small downy-lobed vine ; See முடைநாறி. (L.) . |
செம்பில் | cempil, n. Cup-calyxed white cedar, l. tr., Dyosoxylum binectariferum ; மரவகை. (L.) |
செம்பில்வேதை | cempil-vētai, n. A prepared arsenic ; சோரபாஷாணம். (மூ. அ.) |
செம்பிளி - த்தல் | cempiḷi-, 11 v. tr. To close or shut the eyes ; See செம்பளி-. (ஈடு, 10, 10, 1.) . |
செம்பிற்பொருப்பு | cempiṟ-poruppu, n. <>செம்பு +. Mt. Potiyam, as containing copper ; [செம்புத்தாது உள்ள மலை] பொதியமலை. தென்கால் விடுக்குஞ் செம்பிற்பொருப்பு. (கல்லா. 51, 11) . |
செம்பிறப்பு | cem-piṟappu, n. <>செம்-மை +. (Jaina.) The fourth of the six kinds of births, which is that of cempuyir; அறுவகைப் பிறப்புக்களுள் நான்காவதாகிய செம்புயிர்க்குரிய பிறப்பு. பசும்ம்பிறப்புஞ் செம்ம்பிறப்பும் (மணி. 27, 151) . |
செம்பிறால் | cempiṟāl, n. <>செம்பு + இறால். A species of reddish prawn ; சிவப்பிறால்மீன்வகை. (யாழ். அக.) |
செம்பின்பச்சை | cempiṉ-paccai, n. A kind of green stone ; நாகப்பச்சை . (W.) |
செம்பு - தல் | cempu-, 5 v. tr. See செம்ழ-, 2. அவுணன்பட்டுக் குரைகடல் செம்ப (திருப்பு. 841). . |
செம்பு | cempu, n. <>செம்-மை. [K. M.cembu.] 1. Copper, cuprum , as reddish; தாமிரம். செம்பிற் செய்நவுங் கஞ்சத் தொழிலவும் (சிலப். 14, 174). 2. Gold; 3. [K. Tu. cembu.] Metal vessel; 4. Liquid measure = 3 1/4 cēr = 216 cu. in; |
செம்புக்குட்டி | cempu-k-kuṭṭi, n. <>செம்பு +. Idol made of copper ; செம்புவிக்கிரகம். Loc. |
செம்புக்குள்வேதை | cempukkuḷ-vētai, n. A mineral poison ; கற்பரிபாஷாணம். (W.) |
செம்புகம் | cempukam, n. <>jambuka. Fox ; நரி . |
செம்புகம் | cempukam, n. prob. T. jemudukāki. See செம்போத்து. (சங். அக.) . |
செம்புகொட்டி | cempu-koṭṭi, n. <>செம்பு +. [K. cembukuṭṭiga, M. cembukoṭṭi, Tu. cembukuṭṭi.] Coppersmith ; செம்புவேலை செய்யுஞ் சாதியான் (சிலப். 5, 28, உரை.) |
செம்புடையன் | cem-puṭaiyaṉ, n. <>செம்-மை +. Red wart snake ; பாம்புவகை . |
செம்புண் | cem-puṇ, n. <>id. +. 1. Healing wound, as looking reddish ; ஆறும் நிலைமையில் உள்ள புண். Loc. 2. Fresh wound, red with blood ; |
செம்புண்ணீர் | cem-puṇṇīr, n. <>id. +. Blood ; இரத்தம். செம்புணீர் பொசியு மெய்யினன் (பாரத. வேத்திரகீய. 15.) |
செம்புத்தீக்கல் | cempu-t-tīkkal, n. <>செம்பு +. Copper pyrites, sulphide of copper and iron ; இரும்புஞ் செம்புங்கலந்த உலோகக்சட்டி . Loc. |
செம்புதட்டி | cempu-taṭṭi, n. <>id. +. See செம்புகொட்டி . Loc. . |
செம்புப்பற்று | cempu-p-paṟṟu, n. <>id. +. Alloy of copper in gold ; பொன்னிற் கலந்த செம்பு . (W.) |
செம்புமணல் | cempu-maṇal, n. <>id. +. Sand containing copper ; செம்புகலந்த மணல். (W.) |
செம்புமலை | cempu-malai, n. <>id. +. Mountain containing copper ore ; செப்புத் தாதுகளைத் தன்னிடத்தே கொண்ட மலை . (W.) |
செம்புயிர் | cempuyir, n.<>id. +. (Jaina.) The grade of life which includes animals and human beings of low type ; மக்களிற் கீழாயினாரும் விலங்கும் கொண்டுள்ள உயிர். செம்புயி ரிரும்புபோலவாம் பிணியுயிர். (சீவக.3111) . |
செம்புலம் | cem-pulam, n. <>செம்-மை +. 1. Rich, fertile country; செழிப்பான பூமி. செம்புலப் பெய்ந்நீர்போல (குறுந். 40). 2. Battle-field; 3. Desert tract; 4. Place of cremation; 5. See செம்புமலை (W.) |
செம்புலவு | cempulavu, n. Creamy-leaved lance wood. See வெண்ணாங்கு . (L.) . |
செம்புலி | cem-puli, n. <>செம்-மை +. 1. Tawny-coloured tiger ; பழுப்புநிறமுள்ள புலிவகை. (W.) 2. A sub-sect of Kaḷḷar caste ; |
செம்புலியாடு | cem-puli-yāṭu, n. See செம்மறியாடு. (பதார்த்த. 847.) . |
செம்புவரை | cempu-varai, n. <>செம்பு +. See செம்பிற்பொருப்பு. செம்புவரை தனிலேகி (குற்றா. தல. திருமால். 9). . |