Word |
English & Tamil Meaning |
---|---|
சேபாலம் | cē-pālam, n.<> சே1+phala. Marking-nut. See சேங்கொட்டை. (மலை.) . |
சேபாலிகை 1 | cēpālikai, n.<> šēphālikā. Willow-leaved justicia. See கருநொச்சி. (மூ. அ.) . |
சேபாலிகை 2 | cē-pālikai, n. See சேபாலம். . |
சேம்பா | cēmpā, n.<> U. sēmbā. Glanders, a horse-disease; குதிரைக்குவருஞ் சளிநோய். (அசுவசா. 92.) |
சேம்பு | cēmpu, n. 1. Indian kales, Colocasia antiquorum; ஒருவகைச் செடி. சேம்புகால் பொர (கம்பரா. நாட்டு. 35). 2. A garden plant, Colocasia indica; |
சேம்பை | cēmpai, n. See சேம்பு. (மலை.) . |
சேமக்கலம் | cēma-k-kalam, n.<> சேமம்+. Gong used in temples; சேகண்டி. |
சேமக்காரன் | cēma-k-kāraṉ, n.<> id.+. (J.) 1. Guard, watchman; காவற்காரன். 2. Trusty, confidential person; 3. Thrifty, careful person; 4. Prudent, cautious man; |
சேமக்கிழங்கு | cēma-k-kiḻaṅku, n. Corr. of சேப்பங்கிழங்கு. . |
சேமகாலம் | cēma-kālam, n.<> சேமம்+. Time of prosperity or plenty, opp. to cāmakālam; செழிப்புக்காலம். |
சேமங்கலம் | cēmaṅ-kalam, n. See சேமக்கலம். Loc. . |
சேமங்கொள்(ளு) - தல் | cēmaṅ-koḷ-, v. intr. <> சேமம்+. To smear a place with cowdung in order to lay out a corpse and dress it for the funeral; பிரேதத்தைவைத்து அலங்கரிக்கச் சாணத்தால் இடத்தைச் சுத்திசெய்தல். (J.) |
சேமஞ்செய் - தல் | cēma-cey-, v. tr. <> id. +. To keep covered, protected; மூடிவைத்தல். செவிகளைத் தளிர்க்கையாலே சிக்குறச் சேமஞ்செய்தாள் (கம்பரா. சடாயுவுயிர். 69). |
சேமணி 1 | cēmaṇi, n.<> சே5+. Bell tied to the neck of a cow; மாட்டுக்கழுத்திற் கட்டும் மணி. (யாழ். அக.) |
சேமணி 2 | cē-maṇi, n.<> சேமம்+மணி. See சேகண்டி. . |
சேமத்தில்வை - த்தல் | cēmattil-vai-, v. tr. <> id. +. (w.) 1. To keep in safe custody; பத்திரப்படுத்துதல். 2. To keep away from parents children born under an unlucky star for a certain time fixed bu astrologer; |
சேமத்தேர் | cēma-t-tēr, n.<> id. +. War chariot kept in reserve; வைப்புத்தேர். சேயிரு மணிநெடுஞ் சேமத்தேர் (கம்பரா. முதற்போர்.105). |
சேமதருமம் | cēma-tarumam, n.<> id. +. Deeds of lasting benefit, opp. to māyā-tarumam; நிலைநிற்கும்படி செய்யுந் தருமம்.(w.) |
சேமநிதி | cēma-niti, n.<> id. +. 1. Riches kept in reserve, reserve funds; வைப்புப்பொருள். 2. Deposit to meet one's needs in the future; 3. Treasure-trove; |
சேமப்படை | cēma-p-paṭai, n.<> id. +. Army and weapons kept in reserve; வைப்புப் படை. |
சேமப்பொருள் | cēma-p-poruḷ, n.<> id.+. See சேமநிதி. . |
சேமம் | cēmam, n.<> kṣēma. 1. Safety, well-being, welfare; நல்வாழ்வு. சேமமே யுன்றனக்கென் றருள்செய்தவன் (தேவா.1136, 9). 2. Happiness, pleasure; 3. Protection, preservation, security, defence, safeguard; 4. Stronghold, secure place; 5. Prison, dungeon; 6. Hoard, treasure-trove; 7. Tying of ola book; 8. Act of a warrior protecting himself against hostile arrows, one of paca-kiruttiyam, q. v.; 9. Binding and shrouding a corpse for burning or interment; |
சேமரம் | cē-maram, n.<> சே4+. 1. Sage leaved alangium. See அழிஞ்சில். (பிங்.) . 2. Marking-nut tree. See சேங்கொட்டை.(மலை.) |
சேமவில் | cēma-vil, n.<> சேமம்+. Bow kept in reserve; உற்றகாலத்துதவும்படி துணையாகக் கொள்ளும் வில். (சிலப். 2, 42, உரை.) |
சேமவைப்பு | cēma-caippu, n.<> id. +. See சேமநிதி. இராமானுச னென்றன் சேமவைப்பே (திவ். இராமானுச. நூற். 22). |
சேமறி | cē-maṟi, n.<> சே+. Copulation of bull and cow; மாட்டின் புணர்ச்சி. (W.) |