Word |
English & Tamil Meaning |
---|---|
சேதிமம் | cētimam, n. See சேதியம். (பிங்.) . |
சேதியம் | cētiyam, n.<> caitya. 1. Jain or Buddhist temple; சைன பௌத்தரின் பள்ளி. பகவற்கியற்றிய சேதியந் தொழுது (மணி. 28, 175). 2. Temple, shrine; |
சேதிராயர் | cēti-rāyar, n.<> cēdi-rāja. 1. The king of Naṭu-nāṭu in Tamil country; தமிழகத்தின் நடுநாட்டரசர். (Insc.) 2. A šaiva saint, one of the authors of Tiru-v-icaippā; 3. A title among Kaḷḷar caste; |
சேது 1 | cētu, n.<>செம்-மை. Red; சிவப்பு. (சூடா.) |
சேது 2 | cētu, n.<> sētu. 1. Causeway, bridge, dam; செய்கரை. (பிங்.) 2. Adam's Bridge, a reef of sunken rocks connecting the north of Ceylon with the main land of India, 30 ft. wide with 3 or 4 ft. of water above it at high tide, said to have been constructed to enable Rama's forces to cross over to Laṅka; 3.The island Rāmēšvaram; 4. Sacred bathing-ghat at Dhanuṣkōṭi, Darbha-šayanam, etc.; |
சேதுகாவலன் | cētu-kāvalaṉ, n.<> id. +. See சேதுபதி. சேதுகாவலன் திருவணைகாவலன் (Insc.) |
சேதுபதி | cētu-pati, n.<> id. +. Hereditary title of the Raja of Ramnad, as being guardians of Adam's Bridge; [சேதுவின் காவலர்] இராமநாதபுர வேந்தரின் பட்டப்பெயர். சேதுபதி ரகுநாதன் (ஒருதுறைக்.). |
சேதுபுராணம் | cētu-purāṇam, n.<> id. +. A Purāṇa on the shrine of Rāmēšvaram by Nirampa-v-aḻakiya-tēcikar, prob. 16th c.; உத்தேசம் பதினாறாம் நூற்றாண்டிலிருந்த நிரம்பவழகிய தேசிகராற் பாடப்பெற்ற இராமேசுரப்புராணம். புகலு நூற்பெயர் சேதுபுராணமே (சேதுபு. அவை.10). |
சேதுரான் | cēturāṉ, n. See சேதிராயர். Loc. . |
சேதுஸ்நானம் | cētu-snāṉam, n.<> sētu+. Sea-bath at Dhanuṣkōṭi, Darbha-šayanam, etc., considered to be of religious merit; தனுஸ்கோடி தருப்பசயனம் முதலிய சேதுக்கரையிற் செய்யும் சமுத்திர நீராட்டு. Loc. |
சேந்தன் | cēntaṉ, n.<> சேந்து2. cf. jayanta. 1. Skanda; முருகன். சூர்தடிந்திட்ட சேந்தர் (தேவா. 942, 6). 2.Patron of the author of Tivākaram, chief of Ampar; 3. See சேந்தனார். (திருவிசைப்.) |
சேந்தன்றிவாகரம் | cēntaṉṟivākaram, n.<> சேந்தன்+. Tivākaram, a Tamil Lexicon composed under the patronage of Cēntaṉ. See திவாகரம். . |
சேந்தனார் | cēntaṉār, n.<> id. A šaiva saint, author of Tiru-p-pallāṇṭu and one of the authors Tiru-v-icaippā; திருவிசைப்பாவாசிரியருள் ஒருவரும் திருப்பல்லாண்டியற்றியவருமாகிய சிவனடியார் |
சேந்தி 1 | cēnti, n.<> U. sēndī <> šuṇdā. [Tu. šēndi.] Toddy; கள். சேந்திக்கடை. (W. G.) |
சேந்தி 2 | cēnti, n. 1. Granary; களஞ்சியம். Madu. 2. Loft; 3. Thin reapers running across the joists on which planks are laid; |
சேந்து 1 - தல் | cēntu-, 5 v. tr. [ T. cēdu, K. sēdu.] To draw, as a rope running over a pulley; கயிறு முதலியவற்றை இழுத்தல். (W.) |
சேந்து 2 | cēntu-, n. <> செம்-மை. 1. Redness; சிவப்பு. (பிங்.) 2. Fire; 3. Mast-tree. See அசோகு. (மலை.) |
சேந்துபந்தம் | cēntu-pantam, n.<> சேந்து+. Sealing-wax; அரக்கு. (சங். அக.) |
சேந்தை | cēntai, n. perh. id. Canopy, tester; கட்டிலின் மேற்கட்டி. (J.) |
சேப்பங்கிழங்கு | cēppaṅ-kiḻaṅku, n.<> சேம்பு+. Indian kales root; சேம்பின் கிழங்கு. (M. M. 402.) |
சேப்பிற்போடு - தல் | cēppiṟ-pōṭu-, v. tr. <> சேப்பு3+. To have in one's pocket, as a person; to bring under one's control; பிறரைத்தன் வசப்படுத்துதல். Loc. |
சேப்பு 1 | cēppu, n.<> செம்-மை. 1. Red, redness; சிவப்பு. ஊடலிற் செங்கண் சேப்பூர (பரிபா. 7, 70). 2. Red gem; |
சேப்பு 2 | cēppu, n.<> Arab. jcb. Pocket; சட்டைப்பை. |