Word |
English & Tamil Meaning |
---|---|
சேதக்காலன் | cēta-k-kālaṉ, n.<> chēda+. Mischievous person; கெடுதிக்காரன். (J.) |
சேதகம் 1 | cētakam, n.<> செம்-மை. Red; சிவப்பு. (பிங்.) |
சேதகம் 2 | cētakam, n.<> šāda. Mud, slush; சேறு. (திவா.) குங்குமச் சேதகந் திமிர (கம்பரா. வரைக்காட்சி. 56). |
சேதகாலன் | cēta-kālaṉ, n. See சேதக்காலன். (J.) . |
சேதபாதம் | cēta-pātam, n.<> chēda+bādhā. See சேதம். (யாழ். அக.) . |
சேதம் | cētam, n.<> chēda. 1. Damage, ruin, waste, loss, injury; கேடு. (சூடா). 2. Splitting, dissecting; 3. Severance, cutting off; 4. Part, piece, portion, section; 5. Denominator of a fraction; 6. An element in dancing; |
சேதனகி | cētaṉaki, n.<> cētanakī. Chebulic myrobalan. See கடுக்காய். (சங். அக.) . |
சேதனம் 1 | cētaṉam, n.<> chēdana. 1. Cutting, splitting பிளவுசெய்கை. சேதனப் படைஞரோடும் (பாரத. பதினோ. 4). 2. Circumcision; See விருத்தசேதனம். Chr. |
சேதனம் 2 | cētaṉam, n.<> cētana. 1. Sentient, intelligent being; அறிவுடைப்பொருள். (சூடா.) 2. Understanding, intellect, intelligence, wisdom; |
சேதனன் | cētaṉaṉ, n.<> id. 1. Intelligent, wise person; rational being, one endowed with intelligence; அறிவுடையோன். சேதனர் வணங்குஞ் செல்வச் சேதுவில் (சேதுபு. இராமநா. 26). 2. The soul, as intelligent; |
சேதனாசாரம் | cētaṉācāram, n.<> chēdana + ā-cāra. Rite of circumcision; சுன்னத்து. R. C. |
சேதனை 1 | cētaṉai, n.<> cētanā. Knowledge; அறிவு. சேதனைமன்னுயிர் (கம்பரா. சடாயுவுயிர். 51). |
சேதனை 2 | cētaṉai, n.<> chēdanā. See சேதனம். சேதனை யுண்ணக் கண்டான் (கம்பரா. இராவணன்வதை. 56). |
சேதா | cētā, n.<> சேது1+ஆ. Tawny coloured cow; சிவப்புப் பசு. சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டுச் சேதா (நற். 359). |
சேதாம்பல் | cētāmpal, n.<> id. + ஆம்பல். Red Indian water-lily. See செவ்வாம்பல். (திவா.) சேதாம்பற் போதனைய செங்கனிவாய் (கம்பரா. நகர்நீங்.101). |
சேதாரம் 1 | cētāram, n. cf. sahakāra. Sweet mango; தேமா. (சூடா.) |
சேதாரம் 2 | cētāram, n. [ T. cēdāramu, K. cēdāra.] Colloq. 1. Waste, as of commodities in traffic; loss, damage, as of crops by cattle trespassing; நஷ்டம். 2. Wastage of gold or silver in making jewels, due to filing, etc.; |
சேதாரம் 3 | cētāram, n. perh. சேது1+ஆர்-. Scarlet ixora. See வெட்சி. (மலை.) . |
சேதி 1 - த்தல் | cēti-, 11 v. tr. <> chēda. 1. To cut off, divide, sever, dissect; வெட்டுதல். தாதைதனைத் தாளிரண்டுஞ் சேதிப்ப (திருவாச. 15, 7). 2. To destroy; |
சேதி 2 | cēti, n. <> செய்தி. 1. News, occurrence; சமாசாரம். இந்தச் கேதி யுரைக்க (இராமநா. பாலகா. 13). 2. Nature, manner; |
சேதி 3 | cēti, n.<> Cēdi. 1. Chēdi, the region round Bilaspur and Jubbalpur, one of 56 tēcam, q.v.; வடதேசங்களுன் ஒன்று. சேதிப்பெருமான் சிசுபாலன் (பாரத. திரௌபதி. 42). 2. See சேதிநாடு. 3. The dynasty that ruled Chedi; |
சேதிகம் | cētikam, n. See சேதியம். சேதிகத்து ளிருந்த வண்ணல். (யாப். வி. 95). |
சேதிகை | cētikai, n. Coloured mark on a horse, made with the bottom of a bamboo measure; மூங்கிலுழக்கு நாழி முதலியவற்றின் பின்புறத்தால் குதிரையுடலிற் குத்தும் வண்ணத்தொழில் வெதிருழக்கு நாழியாற் சேதிகைக் குத்தி (கலித். 96, 27). |
சேதிநாடு | cēti-nāṭu, n.<> சேதி3+. Naṭunāṭu in Tamil country, having Tirukkōvalūr as its capital; திருக்கோவலூரைத் தலைநகராகக்கொண்ட நடுநாடு. (பெரியபு. மெய்ப்பொரு.1.) |
சேதிபன் | cētipaṉ, n.<> cēdi-pa. The king of Chēdi; சேதிதேசத்தரசன். சேதிபப் பெரும்பகை செகுத்தே (பாரத. இராசசூய. 152). 2. The king of Cēti-nāṭu; |