Word |
English & Tamil Meaning |
---|---|
சேடையரிசி | cēṭai-y-arici, n.<> சேடை1+. Rice sprinkled over bride and bridegroom, by way of blessing; மணமக்கள்மீது இடும் ஆசீர்வாத அட்சதை. |
சேடைவை - த்தல் | cēṭai-vai-, v. tr. <> சேடை2+. To fill a field with water and prepare it for sowing paddy; தொளியடித்தல். Loc. |
சேண் | cēṇ, n. 1. Distance, remoteness; சேய்மை. சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு. (புறநா.174, 2). 2. Height, loftiness; 3. Mountain top, summit; 4. Sky; 5. Heaven; 6. Width, spaciousness; 7. Length; 8. Long time; |
சேண்டிரவர் | cēṇṭiravar, n.<> T . jēṇdra. [K. jēdaru.] Weavers; சேணியர். (யாழ். அக.) |
சேண்மரம் | cēṇ-maram, n.<> சேண்+. A tree. See அழிஞ்சில். (அக. நி.) . |
சேண | cēṇa, adv. <> id. Up; உயர. சேணவெரிநிற் சிறந்தானோ டேறினாள் (பரிபா.12, 48). |
சேணம் 1 | cēṇam, n.<> id. See சேண் சேணந் தருவது நீறு (தேவா. 857, 4). |
சேணம் 2 | cēṇam,, n. perh. jayana. cf. Persn. jīn. 1. Cushion, mattress; மெத்தை. (பிங்.) 2. Saddle of cloth or leather, pillion; |
சேணவி | cēṇavi, n. cf. šravaṇa. Knowledge; அறிவு. (யாழ். அக.) |
சேணாடு | cēṇāṭu, n.<> சேண்+நாடு. Heaven; சுவர்க்கம். (w.) |
சேணி | cēṇi, n.<> Pkt. sēṇi <> šrēṇi. 1. See சேடி விஞ்சையர் சேணி செலவிட்டு. (சூளா. சுயம்.192). 2. Ladder; 3. Order, arrangement; 4. Party of workmen, set of players, company of travellers; |
சேணிகன் | cēṇikaṉ, n.<> šrēṇika. 1. An illustrious Jain king; சைன சக்கரவர்த்திகளுட் சிறந்தவன். See சேணியன், |
சேணியர் | cēṇiyar, n.<> சேணி. A class of celestials; வித்தியாதரர். சேணியர்கோன் தோன்றல். (சேதுபு. வேதாள.14). |
சேணியன் 1 | cēṇiyaṉ, n.<> சேண். Indra; இந்திரன். சேணியனு மன்றெ தெரிந்து (தனிப்பா.i, 69. 120). |
சேணியன் 2 | cēṇiyaṉ, n.<> šrēṇika. A class of weavers; ஆடைநெய்யுஞ் சாதிவகையான். (E. T. vi, 361.) |
சேணுவணன் | cēṇ-uvaṇaṉ, n.<> சேண். A climbing shrub. See ஆகாசகருடன். (தைலவ. தைல. 104.) . |
சேணோன் | cēṇōṉ, n.<> id. 1. Mountaineer; மலைவாசி. சேணோ னகழ்ந்த மடிவாய்ப் பயம்பின் (மதுரைக்.294). 2. One who keeps watch over a field from a platform on a tree; |
சேத்தாளி | cēttāḷi, n.<> சேர்-+ ஆளி. See சேக்காளி. Tj. . |
சேத்திரக்கிஞன் | cēttirakkiaṉ, n.<> kṣētra-ja. Soul, as having knowledge of the body; [சரீரத்தை அறிபவன்] ஆன்மா. ஏத்திய சேத்திரக்கிஞன். (விநாயகபு. 83,73). |
சேத்திரபாலன் | cēttira-pālaṉ, n.<> kṣētrapāla. 1. Guardian-deity; க்ஷேத்திரபாலன். (சி. சி. 8, 21, மறைஞா.) 2. Bhairava; |
சேத்திரபிண்டம் | cēttira-piṇṭam, n.<> kṣētra-piṇda. Ball of rice offered to manes in a sacred place; புண்ணியதலத்திற் பிதிரர்பொருட்டுக்கொடுக்கும் பிண்டம். திகிரியறற்கரையிற் சேத்திர பிண்டங் கொடுத்து (சேதுபு. தேவிபுர. 84). |
சேத்திரம் | cēttiram, n.<> kṣētra. See க்ஷேத்திரம். . |
சேத்து 1 | cēttu, n.<> செம்-மை. Red, crimson; சிவப்பு. (திவா.) சேத்தகில் புழுகு சந்தனம் (பாரத. பதினான்.219). |
சேத்து 2 | cēttu, n. prob. சே2-. 1. Resemblance, similarity; ஒப்பு. (திவா.) நகையொடு சேத்திற் காசு நாறுவ நித்திலம் (இரகு. நாட்டு. 10). 2. Thought, idea; |
சேத்து 3 | cēttu, n. 1. Limb, member, section; உறுப்பு. (அக. நி.) 2. Closeness, compactness, thickness; |
சேத்து 4 | cēttu, n.<> Pkt. khetta <> kṣētra. Field, plot of ground; நிலம். (w.) |
சேத்து 5 | cēttu, n.<> cēt. (பிங்.) 1. Doubt; ஐயம். 2. An expletive; |