Word |
English & Tamil Meaning |
---|---|
சேட்டி - த்தல் | cēṭṭi-, 11 v. <> cēṣṭ. intr. To exert oneself; to perform; to be active; தொழிற்படுதல். --tr. 2. To cause to be active; to operate upon; |
சேட்டி | cēṭṭi, n.<> jyēṣṭhā. Elder sister; தமக்கை. (யாழ். அக.) |
சேட்டிதன் | cēṭṭitaṉ, n.<> cēṣṭita. Directing agent; one who sets others to work; தொழிற்படுத்துவோன். சித்துட னசித்துக்கெல்லாஞ் சேட்டித னாதலானும் (சி. சி.1, 56, பக். 637). |
சேட்டு | cēṭṭu, n.<> Hind. sēṭh. Title of merchants, especially Guzeratis; பெரும்பான்மையும் குஜராத்திவியாபாரிக்கு வழங்கும் சிறப்புப்பெயர். |
சேட்டுக்கடை | cēṭṭu-k-kaṭai, n.<> சேட்டு+. Place of business of a Guzerati merchant, Mārwari, etc.; குஜராத்தியர், மார்வாரிகள் முதலியோர் வியாபாரஞ் செய்யுமிடம். |
சேட்டுக்குழி | cēṭṭu-k-kuḻi, n. prob. சேறு+. Pit filled with mire, swampy hollow; சேற்றுக் குழி. சேட்டுக்குழியிற் சேற்றினுட்புக்கு அழுந்திய . . . எருமை (சிலப்.10, 120, உரை). |
சேட்டுமம் | cēṭṭumam, n.<> šlēṣman. Phlegm; கபம். (சங். அக.) |
சேட்டை 1 | cēṭṭai, n.<> cēṣṭā. 1. [Tu. cēṭṭe.] Motion of limbs; gesture, gesticulation; உறுப்பைப் புடைபெயர்க்கை. நலசேட்டைக் குலக்கொடியே (திருக்கோ.235). 2. Action, operation, work; 3. Annoyance, mischievous acts; 4. Prank, antic, gambol; |
சேட்டை 2 | cēṭṭai, n.<> jyēṣṭhā. 1. Elder sister; elder woman; மூத்தவள். (திவா.) 2. Goddess of Misfortune, as the elder sister of Lakṣmī; 3. Thumb; 4. The 18th nakṣatra. See கேட்டை. (திவா.) 5. The 16th naṣatra. See விசாகம். (பிங்.) |
சேட்டை 3 | cēṭṭai, n.<> T. cēṭa. Winnowing fan or basket; முறம். (திவா.) |
சேட்டைக்காரன் | cēṭṭai-k-kāraṉ, n.<> சேட்டை1+. 1. One who seeks to do injury, mischievous person; குறும்புசெய்பவன். 2. Man full of tricks; 3. One who makes indecent gestures; |
சேட்படு - தல் | cēṭ-paṭu-, v.<> சேண்+. tr To meet, approach; எதிர்ப்படுதல். சிறுமி தந்தையுஞ் செல்வனை . . . சேட்பட்டானரோ (சீவக.1458). --intr. |
சேட்படுத்து - தல் | cēṭ-paṭuttu-, v. tr. Caus. of சேட்படு-. (Akap.) To put off a lover telling him of the insurmountable difficulties in the way of his clandestine meetings and urging him to expedite the marriage; விரைய ரைந்து கோடல்கருதிக் களவுக்கூட்டத்திலுளவாம் இடையூறுகளை எடுத்துமொழிந்து அக்கூட்டத்திற்கியையாது தோழி மறுத்துக்கூறித் தலைவனை அகற்றுதல். இவையெல்லாங் கூறிச் சேட்படுத்தப்பெறும் என்பது (திருக்கோ. 97, உரை). |
சேட்படை | cēṭ-paṭai, n.<> சேட்படு-. 1. Being at a distance; தூரத்திலிருக்கை. அப்போர் செய்யச் சேட்படையன்றி யெம்முன் சேர்தியால் வீர (கந்தபு. சிங்கமுகா. வதை.194). 2. (Akap.) Theme of the companion-maid putting off the lover of her mistress telling him of the insurmountable difficulties in the way of his clandestine meetings and urging him to expedite the marriage; |
சேட்புலம் | cēṭ-pulam, n.<> சேண்+. Distant place; தூரமான இடம். சேட்புலம் படர்ந்தோர் (அகநா. 61). |
சேடக்கிரியை | cēṭa-k-kiriyai, n. prob. šēṣa+. Funeral rites; கருமாந்தரம். Nā. |
சேடக்குடும்பி | cēṭa-k-kuṭumpi, n.<> id. +. Temple-priest, as belonging to a family of devotees; [அடியார்குடும்பத்தி லுள்ளவன்] கோயிலருச்சகன். சேடக்குடும்பியின் சிறுமகள் (சிலப். 30, 52). |
சேடக்கோல் | cēṭa-k-kōl, n. Balance on the principle of the steelyard; தூக்குக்கோல். (G. Sm. D. I, i, 284.) |
சேடகப்பிண்டி | cēṭaka-p-piṉṭi, n.<> சேடகம்+. Holding the shield; கேடகம் பிடிக்கை. செருவா ளாட்டுஞ் சேடகப் பிண்டியும் (பெருங்.உஞ்சைக். 37, 32). |
சேடகம் | cēṭakam, n.<> khēṭaka. Shield; கேடகம். மயிர்ப்புளக சேடகமு மேந்தி (சூளா. அரசி.159). |