Word |
English & Tamil Meaning |
---|---|
சேகன் | cēkaṉ, n.<> sēvaka. [ M. cēkan.] See சேவகன். சேகா. . . குதிரையோ வீறியது (கலித். 96). |
சேகில் | cēkil, n.<> சேகு. Tawny-coloured bull; சிவந்த ஏறு. குரூஉச் சேகில் காணிகா (கலித்.105). |
சேகிலி | cēkili, n.<> id. + இலி. Plantain, as having no heart-wood; [வயிரமற்றது] வாழை. (பிங்.) |
சேகு | cēku, n.<> செம்-மை. 1. Redness; சிவப்பு. பாதங்கள் சேகு சேர்தர (கம்பரா. உலா. 37). 2. [ K. cēgu.] See சேகம். (பிங்.) Solidity, hardness; 4. [ T. sēgi.] Fault; 5. [ T. sēgi.] Doubt; |
சேகுணம் | cēkuṇam, n. A country; ஒரு தேசம். |
சேகுணர் | cēkuṇar, n. People of Cēkuṇam; சேகுணதேசத்தார். (கலிங். 318.) |
சேகுவயிரம் | cēku-vayiram, n. <> சேகு+. Heart-wood; மரவயிரம். |
சேகை | cēkai, n.<> சே3-. Redness; சிவப்பு. உயிர்களெலாம் வந்திறைஞ்சச் சேகையாய் மல்குந்திருந்தாள் (கந்தபு. இரணியன்பு. 14). |
சேங்கலம் | cēṅkalam, n. See சேமக்கலம். Loc. . |
சேங்கன்று | cēṅ-kaṉṟu, n. <> சே5+கன்று. Bull-calf; ஆண்கன்று. Colloq. |
சேங்கார் | cēṅkār, n. perh. சே4+. A kind of paddy; நெல்வகை. (A.) |
சேங்கொட்டை | cēṅ-koṭṭai, n.<> id. +. 1. Marking-nut; சேமரத்தின் கொட்டை. (பதார்த்த. 1066.) 2. Marking-nut tree, m.tr., Semecarpus anacardium; |
சேங்கொட்டைக்குறி | cēṅ-koṭṭai-k-kuṟi, n.<> சேங்கொட்டை+. Marks on clothes made with the juice of the marking-nut; சேங்கொட்டைப் பாலால் இடும் ஆடைக்குறி. |
சேச்சே | cē-c-cē, int. Expr. (a) meaning 'fiel shocking!', used in contempt; அருவருப்புக் குறிப்பு: (b) meaning 'hush', 'silence'; |
சேச்சை | cēccai, n. 1. Silvery-leaved ape flower. See பாலை. (மலை.) . 2. Trichotomous flowering smooth jasmine. See முல்லை. (மலை.) |
சேசி | cēci, n. <> E. sage. Garden sage, s.sh., Salvia officinalis; சீமைக்கஞ்சாங்கோரை. (M. M. 363.) |
சேசுநாதர் | cēcu-nātar, n.<> Fr. Jesus <> Heb. yēshūa. Jesus. See இயேசுநாதர். . |
சேசுவரசாங்கியன் | cēcuvara-cāṅkiyaṉ, n.<> sēšvara +. (Phil.) Follower of theistic Sāṅkhya system; கடவுளுண்மையை ஒப்புக்கொள்ளும் சாங்கியமதவாதி. (சி. சி. 2, 57, சிவாக்.) |
சேசூரணம் | cē-cūraṇam, n.<> சே4+ cūrṇa. A prepared arsenic; கௌரிபாஷாணம். (மூ. அ.) |
சேசேயெனல் | cē-cē-y-eṉal, n. 1. Expr. of contempt; வெறுப்புக்குறிப்பு. 2. Expr. used in driving, as of animals; 3. Onom. expr. denoting the tumultuous noise of a crowd; |
சேட்சி | cēṭci, n.<> சேண். Distance, remoteness; தூரம். சித்தமுஞ் செல்லாச் சேட்சியன் காண்க. (திருவாச. 3, 41) |
சேட்டங்கெட்டவேளை | cēṭṭaṅ-keṭṭavēḷai, n.<> சேட்டம்1+. Hard times, straitened circumstances; வறுமைக்காலம். (w.) |
சேட்டம் 1 | cēṭṭam, n.<> šrēṣṭha. 1. Eminence, greatness, excellence; மேன்மை. சேட்ட மல்கிய பாதுகை. (விநாயகபு. 80, 278). 2. Strength, power, capacity; 3. Luxuriance. fertility; 4. Bloom, as of countenance; |
சேட்டம் 2 | cēṭṭam, n.<> jyēṣṭha. The third lunar month from the day following the New Moon in the month of Vaikāci to the end of the New Moon day in the month of āṉi; வைகாசி அமாவாசை கழிந்த பிரதமைமுதல் ஆனி அமாவாசை முடியுவுள்ள சாந்திரமான மாதம். (w.) |
சேட்டன் 1 | cēṭṭaṉ, n.<> id. 1. Elder brother; தமையன். (சூடா.) 2. Senior in age; |
சேட்டன் 2 | cēṭṭaṉ, n. n.<> šrēṣṭa. 1. Person of eminence or superior rank, great man; பெரியோன். சேட்டரா முனிவோர்களும் (விநாயகபு. 75, 79). 2. A Rudhra; |
சேட்டனம் | cēṭṭaṉam, n.<> cēṣṭana. Exertion, effort; முயற்சி. (யாழ். அக.) |
சேட்டாதேவி | cēṭṭā-tēvi, n. n.<> jyrēṣṭhā. Goddess of Misfortune, as the elder sister of Lakṣmī; [இலக்குமிக்கு மூத்தவள்] மூதேவி. |