Word |
English & Tamil Meaning |
---|---|
சென்னவலை | ceṉṉa-valai, n. Net for catching big fish; பெருமீன்கள் பிடிக்க உதவும் வலை வகை. Madr. |
சென்னாக்கூனி | ceṉṉā-k-kūṉi, n. See சென்னக்கூனி. (w.) . |
சென்னாக்கோனி | ceṉṉā-k-kōṉi, n. See சென்னக்கூனி. . |
சென்னி 1 | ceṉṉi, n. 1. [M. cenni.] Head; தலை. நலம்பெறு கமழ்சென்னி (கலித். 81). 2. Top, summit, peak; 3. Eminence; 4. Chola king; 5. Bard, lyrist, as having skull-bowl to eat from; 6. The first nakṣatra, as resembling horse's head; |
சென்னி 2 | ceṉṉi, n. See சென்னை. Loc. . |
சென்னியம் | ceṉṉiyam,, n.<> janya. Thing produced; உண்டுபண்ணப்பட்டது. பிராந்தி சென்னியமாகும் (வேதா. சூ.110). |
சென்னியர் | ceṉṉiyar, n.<> சென்னி1. Actors, dancers; கூத்தர். (அக. நி.) |
சென்னை 1 | ceṉṉai, n. See சென்னபட்டணம். சென்னைநகர் வீற்றிருந்த விமலவாழ்வே (விநாயகபு. 85, 63). |
சென்னை 2 | ceṉṉai, n.<> samjā. A drum announcing the procession of an idol; கோயில் மூர்த்தியின் புறப்பாடறிவிக்கும் மேளம். |
சென்னை 3 | ceṉṉai, n. cf. சென்னக்கூனி. A kind of fish; மீன்வகை. (பாலவா.1085.) |
சென்னை 4 | ceṉṉai, n. [K. kenne.] Cheek; கன்னம். Loc. |
செனகசெனனியர் | ceṉaka-ceṉaṉiyar, n.<> janaka + jananī. Parents; தாய்தந்தையர். மறலியு முளைவுறச் சிவனை வழிபடு மகவை யருளிய செனகசெனனியர் (பாரத. வேத்திர. 47). |
செனகநங்கை | ceṉaka-naṅkai, n.<> E. senegal +. Seneca milkwort, Polygala senega; செடிவகை. (M. M. 562.) |
செனகன் | ceṉakaṉ, n.<> janaka. Father; தந்தை. (பாரத. வேத்திர. 47). |
செனனம் | ceṉaṉam, n.<> janana. Birth; பிறப்பு. (சூடா.) அன்பர்தஞ் செனனவித்தைப் பொடிப்படுத்தே (சிவரக. காயத்திரி.13). |
செனனி | ceṉaṉi, n.<> jananī. 1. Mother; தாய். (பாரத. வேத்திர. 47.) 2. (šaiva) Creative Energy of šiva; |
செனி - த்தல் | ceṉi, 11 v. intr. <> jan. To be born; பிறத்தல். திங்கணுதல் வேர்விற் செனித்தோனும் (ஏகாம். உலா, 84). |
செனு | ceṉu, n.<> janus. Birthplace; உற்பத்தியிடம். தனுவேதத்தின் கேள்விக்குஞ் சதுர் வேதத்தின் வேள்விக்குஞ் செனுவே (பாரத. பதினோ. 37). |
சே 1 | cē. . The compund of ச் and ஏ. . |
சே 2 - த்தல் | cē-, 11 v. cf. šī. intr. [ K. kē.] 1. To dwell, abide; தாங்குதல். வம்பலர் சேக்குந் கந்துடைப் பொதியில் (பட்டினப். 249). 2. To lie, remain; 3. To sleep; To obtain; |
சே 3 - த்தல் | cē-, 12 v. intr. <> சிவ-. 1. To redden; சிவப்பாதல். அவன் வேலிற் சேந்து (கலித். 57). 2. To get angry; |
சே 4 | cē, n. <> சே3-. 1. [ T. ce.] Red, redness; சிவப்பு. சேக்கொள் கண்ணை. (கல்லா. 85, 9). 2. See சேங்கொட்டை. (மலை.) 3. Sage-leaved alangium. See அழிஞ்சில். (தொல். எழுத். 278.) |
சே 5 | cē, n. perh. சே2-. 1. Bull, bullock, ox; காளை. சேவேறு சேவடிக்கே சென்றூதாய் (திருவாச. 10, 1). 2. Taurus in the zodiac; |
சே 6 | cē, int. 1. Exclamation used in driving animals, etc.; வெருட்டுங்குறி. 2. Expr. meaning 'fie ! shocking !',used in disgust; |
சேக்கரி - த்தல் | cēkkari-, 11 v. intr. To cackle, as a hen after laying eggs; கொக்கரித்தல். (யாழ். அக.) |
சேக்காளி | cēkkāḷi, n.<> சேர்1-+ ஆள்-. Friend; தோழமையுள்ளவ-ன்-ள். Tinn. |
சேக்கிழார் | cē-k-kiḻār, n. prob. சே5+. 1. A family name among Vēḷāḷas in Toṇṭaimaṇṭalam; தொண்டைநாட்டு வேளாளரின் குடிப்பெயருள் ஒன்று. சேக்கிழார் கரிகால சோழப்பல்ல வரையர்: சேக்கிழார் பாலறாவாயர் (Insc.) 2. The author of Periyapurāṇam; |