Word |
English & Tamil Meaning |
---|---|
செறி 3 | ceṟi, n. <>செறி-. See செறிவு, 1. (சூடா.) . |
செறிஞர் | ceṟiar, n. <>id. Relations ; உறவினர். (இலக். அக.) |
செறிப்பு | ceṟippu, n. <>id. 1. See செறிவு, 1 செறிப்பில் பழங்கூரை (நாலடி, 231). . 2. (Akap.) Restraining the heroine from meeting her lover. See இற்செறிவு. சிறைப்புறமாகச் செறிப்பறிவுறுத்தல் (தஞ்சைவா. 151). |
செறிமை | ceṟimai, n. <>id. See செறிவு, 1.செறிமை யுற (கோயிற்பு. வியா. 6) . . |
செறிவன் | ceṟivaṉ, n. <>செறிவு. 1. Arhat, as All-merciful Being ; [எல்லாவுயிர்கட்கும் இதமானவன்] அருகன். செறிவன் சினேந்திரன் (சிலப். 10,177.) 2. Person of perfect equanimity ; |
செறிவு | ceṟivu, n. <>செறி-. 1. Thickness, denseness, closeness; நெருக்கம். செறிவுடை மும்மதில் (திருவாச. 9, 5). 2. Abundance, fulness; 3. Union, combination; 4. Relationship; friendship; 5. Diffusion, permeation, expansion; 6. Kernel, as attached to the shell of a nut; 7. Self-restraint, modesty; 8. Conformity to rules, as of propriety; 9. (Rhet.) Compactness, terseness, as a merit of poetic composition; |
செறு - தல் | ceṟu-, 6 v. tr. 1. To control, as the sense; to subdue, as the passions; அடக்குதல். ஆறுஞ் செற்றதில் வீற்றிருந்தானும் (தேவா. 84, 9). 2. To hinder, prevent; 3. To be angry with; 4. To hate, dislike, detest; 5. To cause pain, torment; 6. To overcome; 7. To kill, destroy; To change as one's mind; |
செறு - த்தல் | ceṟu-, 11 v. tr. 1. To suppress, subdue, repress; to resist; அடக்குதல். செற்றஞ் செறுத்தோர் (மணி. 23, 13). 2. To prevent, hinder; 3. (Poet.) To comprise, contain, include, as ideas; 4. To prevent the passage, as of water; to block the passage; 5. To fill up; 6. To narrow; 7. To be angry at; 8. To detest; 9. To overcome, get the better of; 10. To kill; |
செறு | ceṟu, n. <>செறு-. 1. Anger; கோபம். யாண்டுஞ் செறுவொடு நிற்குஞ் சிறுமை (திரிகடு. 14). 2. Field; 3. [T. ceruvu, K. keṟe.] Tank; 4. Garden plot, division in a field; |
செறுதொழில் | ceṟu-toḻil, n. <>செறு- +. Evil deed, as reprehensible; [வெறுக்கத்தக்கது] தீயசெயல். செறுதொழிலிற் சேணீங்கியான் (பு. வெ. 8, 10, கொளு). |
செறுநர் | ceṟunar, n. <>id. Foes, enemies; பகைவர். செறுநர் செருக்கறுக்கு மெஃகு (குறள், 759). |
செறுப்பனை | ceṟuppaṉai, n. Trouble, worry. See சிறுப்பனை, 4. Loc. . |
செறுப்பு | ceṟuppu, n. <>செறு-. 1. Restriction; கட்டுப்பாடு. அச்செறுப்புத்தீர ஸ்வைரம் ஸஞ்சரிக்கப்போந்த இடமிறே இது (ஈடு, 5, 8, 2). 2. Narrowness; 3. Killing; |
செறும்பு 1 | ceṟumpu, n. <>id. [K. kaṟumbu.] See செற்றம், 1. மனத்திடைச் செறும்பு நீக்கி (சீவக. 947). . |
செறும்பு 2 | ceṟumpu, n. cf. சிறாம்பு. Fibres of palmyra palm; பனஞ்சிறாம்பு. செறும்பிற் பிறங்கிச் செறி . . . மயிர் (கம்பரா. கங்கை. 33). |