Word |
English & Tamil Meaning |
---|---|
செறும்புக்காரன் | ceṟumpu-k-kāraṉ, n. <>செறும்பு +. Malicious person; மனத்திற்கறுக்கொண்டவன். (W.) |
செறுமு - தல் | ceṟumu-, 5 v. intr. 1. To hem, grunt; கனைத்தல். செறுமுமந்தச் சன்னை யறிந்து (விறலிவிடு. 759). 2. To sob agitatedly; |
செறுவர் | ceṟuvar, n. <>செறு-. See செறுநர். செறுவர் நோக்கிய கண் (புறநா. 100, 10). . |
செறுவு | ceṟuvu, n. Field; வயல். பவழவாய்ச் செறுவு தன்னுள் (சீவக. 379). |
சென்மசாபல்லியம் | ceṉma-cāpalliyam, n. <>janman +. Realisation of the prime object of one's life; பிறவிப்பயனை அடைகை. (யாழ். அக.) |
சென்மத்துவேஷம் | ceṉma-t-tuvēṣam, n. <>id. +. See சென்மப்பகை. . |
சென்மப்பகை | ceṉma-p-pakai, n. <>id. +. 1. Natural enmity; பிறவிப்பகை. 2. Deadly enmity; |
சென்மபத்திரிகை | ceṉma-pattirikai, n. <>id. +. Horoscope; சாதகம். (யாழ். அக.) |
சென்மபாத்தியதை | ceṉmapāttiyatai, n. <>id. +. 1. Birthright, hereditary right பிறப்பினால் ஏற்படும் உரிமை. 2. Residuary right, equity of redemption; |
சென்மபீசம் | ceṉma-pīcam, n. <>id. +. The obscuring principle. See ஆணவமலம். (த. நி. போ. 182.) . |
சென்மபூமி | ceṉma-pūmi, n. <>id. +. Native land, place or country of one's birth; பிறந்த தேசம். |
சென்மம் | ceṉmam, n. <>janman. 1. Birth; பிறப்பு. சென்மந் தரங்கம் (அஷ்டப். திருவரங்கத்தந். 46). 2. Absolute, dominant right; |
சென்மமலடி | ceṉma-malaṭi, n. <>id. +. Barren woman; பிறவி மலடியானவள். (சைவச. பொது. 241, உரை.) |
சென்மலக்கினம் | ceṉma-lakkiṉam, n. <>id. +. (Astrol.) The ascendant. See சன்மலக்கினம். . |
சென்மாந்தரம் | ceṉmāntaram, n. <>janmāntara. Birth other than the present one. See சன்மாந்தரம். . |
சென்மாந்தரவாசனை | ceṉmāntara-vāca-ṉai, n. <>id. +. Inclination or natural bent, as attributed to one's karma in previous births; முற்பிறப்பின் கருமபலனாக ஏற்பட்ட ஸம்ஸ்காரம். |
சென்மி - த்தல் | ceṉmi-, 11 v. intr. சென்மம். To be born; to appear; பிறத்தல். தேகங்களத்தனையும் . . . சென்மித்த வாங்கிறக்கும் (தாயு. பரிபூர. 2). |
சென்றஞான்றை | ceṉṟa-āṉṟai, n. <>செல்-+. Yesterday; நேற்றைத்தினம். சென்ற ஞான்றைச் சென்றுபட ரிரவின் (புறநா. 390, 10). |
சென்றது | ceṉṟatu, part. <>id. An expletive, used in its interrogative form, sometimes in pairs; வினாவொடு சேர்ந்து அடுக்கியும் அடுக்காதும் வரும் அசைநிலை. (தொல். சொல். 425.) Obs. |
சென்றுதேய்ந்திறுதல் | ceṉṟu-tēyntiṟu-tal, n. <>id. +. (Rhet.) Gradual loss of vigour and tone, one of ten nūṟ-kuṟṟam, q.v.; நூற்குற்றம் பத்தனுள் நூலின் அழகு வரவரக் குறைந்து கொண்டே வரும் குற்றம். (தொல். பொ. 664, உரை.) |
சென்றுபோ - தல் | ceṉṟu-pō-, v. intr. <>id. +. To die; இறத்தல். அவர் சென்றுபோனார். (W.) |
சென்னக்கூனி | ceṉṉa-k-kūṉi, n. <>சின்ன +. Small shrimps; சிறிய இறால்மீன். (W.) |
சென்னடை | ceṉṉaṭai, n. <>செல்-+நடை. Daily expenditure in temple service; நித்தியப் படித்தரம். சென்னடைக்கமைச்ச பூமியாவது (T. A. S. II, i, 23). |
சென்னபட்டணம் | ceṉṉa-paṭṭaṇam, n. Madras, as the town of Ceṉṉappa-nāyakkaṉ, a chief under the Raja of Chandragiri; சந்திர கிரியரசன்கீழ்ச் சிற்றரசனாயிருந்த சென்னப்பநாயக்கன் ஊராகிய சென்னைநகர். (சீதக்காதி. நொண்டி) |
சென்னபாத்திரம் | ceṉṉa-pāttiram, n. A variety of coconut; தென்னைவகை. (G. Sm. D. I, i, 214.) |
சென்னபுரி | ceṉṉa-puri, n. See சென்னப்பட்டணம். . |
சென்னம் | ceṉṉam, n. An aquatic bird; நீர்ப்பறவை வகை. சென்னங் காகங் குணாலஞ் சிலம்புமே (கம்பரா. ஊர்தே. 151). |
சென்னமல்லையர் | ceṉṉa-mallaiyar, n. The author of Civaciva- veṇpā, 1768 A.D.; கி.பி.1768-ல் சிவசிவவெண்பா இயற்றிய புலவர். |
சென்னல் 1 | ceṉṉal, n. Climber perila, rifle-green, attaining 8 1/2 in. in length, Anabasscandens; எட்டரையங்குல நீளமும் கரும்பச்சை நிறமுமுள்ள பனையேறிக்கெண்டை மீன். |
சென்னல் 2 | ceṉṉal, n. Window. See ஜன்னல். . |