Word |
English & Tamil Meaning |
---|---|
செவிலித்தாய் | cevili-t-tāy, n. <>செவிலி +. Foster-mother, one of ai-vakai-t-tāyar , q.v. ; ஐவகைத்தாயருள் வளர்ப்புத் தாய். (பிங்.) |
செவிள் | ceviḷ, n. prob. செவி. Tragus ; காதின் மேற்புறத்துறுப்பு . Madr. |
செவுரொட்டி | cevur-oṭṭi, n. Corr. of சுவரொட்டி. Spleen ; மண்ணீரல். (இங். வை. 42.) |
செவுள் | cevuḷ, n. cf. செகிள். [M. ceḷukka.] Gills ; மீனின் சுவாசவுறுப்பு . (W.) |
செவேரெனல் | cevār-eṉal, n. <>செம்-மை +. Expr. denoting redness ; சிவந்திருத்தற் குறிப்பு . |
செவை | cevai, n. See செவ்வை. நீ செவைக்கு வரமாட்டாய் . (W.) . |
செழி - த்தல் | ceḻi-, 11. v. intr. [M. ceḻikka.] 1. To thrive, flourish, grow well, as vegetation; தழைத்தல். 2. To prosper, as a kingdom, family, country; 3. To be fertile; 4. To be super abundant; 5. To be cheerful, as countenance; |
செழி - தல் | ceḻi-, 4. v. intr. To grow; to increase ; வளர்தல். செழிகின்ற தீப்புகு விட்டிலின் (திருவாச. 6, 5) . |
செழிச்சி | ceḻicci, n. <>செழி-. See செழிப்பு. (W.) . |
செழித்தகல் | ceḻitta-kal, n. <>id. +. Limestone ; சுக்கான்கல் .(W.) |
செழிப்பம் | ceḻippam, n. See செழிப்பு . . |
செழிப்பு | ceḻipu, n. <>செழி-. [M. ceḻippu.] 1. Fertility, flourishing condition, prosperity; வளம். 2. Plenteousness, abundance, funness; |
செழிம்பு | ceḻimpu, n. See செழிப்பு. Madu. . |
செழியன் | ceḻiyaṉ, n. <>செழு-மை. King of the Pāṇdya country ; பாண்டியன். வென்வேற் செழிய (புறநா.19, 4) . |
செழுகம் | ceḻukam, n. <>jalukā. Leech ; அட்டை. செழுகம்போலச் சுருங்கியும் விரிந்தும் (சி. போ. பா. 4, ¢2, பக். 264) . |
செழுகை | ceḻukai, n. perh. id. A worm ; சாணளப்பான்புழு. திரணுறுஞ் செழுகைபோல். (சிவதரு.8, 88) . |
செழுசெழு - த்தல் | ceḻu-ceḻu-, 11 v. intr. Redupl. of செழி-. To be extremely fertile ; மிகுவளப்பமாதல். (நன். 395, மயிலை.) |
செழுஞ்சோறு | ceḻu--cōṟu, n. <>செழு-மை +. Rich, sumptuous meal ; கொழுத்த உணவு. தீப்பசி மாக்கட்குச் செழுந்சோ றீத்து (மணி. 18, 117). |
செழுத்து | ceḻuttu, n. <>id. See செழிப்பு, ¢1. செழுத்தா, லதிர்த் தெழுந்து (கோயிற்பு. பாயி. 9) . . |
செழுது | ceḻutu, n. <>id. See செழிப்பு. செழுது மாதவி மலர்திசை மணக்க (அருட்பா, ii, அவலத்தமு. 4) . . |
செழுந்து | ceḻuntu, n. <>id. See செழிப்பு.2. ஆயிரமரக்காற் செழுந்துபடச் செந்நெனிறைத்து (சீவக. 2486) . . |
செழுப்பம் | ceḻuppam, n. See செழிப்பு. (யாழ். அக.) . |
செழும்பல் | ceḻumpal, n. See செழிப்பு. செழும்பலான பயிர் . (W.) . |
செழுமறை | ceḻumaṟai, n. Fire ; நெருப்பு . (W.) |
செழுமை | ceḻumai, n. <>செழி-. 1. See செழிப்பு. (பிங்.) செழுமிடற்றின் மைவந்த கோன் (திருக்கோ. 212). . 2. Greatness, excellence, splendour; 3. Beauty, gracefulness; 4. Verdancy, verdure; |
செழுவிதின் | ceḻuvitiṉ, adv. <>செழு-மை. Correctly, fully ; செம்மையாக. செழுவிதி னுணர்த்தி (திருக்காளத். பு. 33, 15) . |
செள்ளு | ceḷḷu, n. [M. ceḷḷu.] 1. Flea, pulicidae ; தெள்ளுப்பூச்சி. (W.) 2. Tick ; |
செளிம்பன் | ceḷimpaṉ, n. <>செளிம்பு. Obstinate, unruly fellow ; சண்டித்தனமுள்ளவன் . |
செளிம்பு | ceḷimpu, n. (J.) 1. [T. cliumu, K. kilubu.] Verdigris, rust ; களிம்பு. 2. Obstinacy ; |
செளிம்பூறல் | ceḷimpūṟal, n. <>செளிம்பு +. Green rust on copper ; களிம்புப்பற்று . (J.) |
செளுகம் | ceḷukam, n. See செழுகம். (உரி. நி.) . |
செளுகை | ceḷukai, n. See செழுகம். செளுகையு முடலட வொருவழி யறிவிலர் செறிவார் (சிவதரு. 7, 56). . |