Word |
English & Tamil Meaning |
---|---|
செவிச்சொல் | cevi-c-col, n. <>id. +. Whispering ; காதில் இரகசியமாகவோதுகை. செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையும் (குறள், 694) . |
செவிசாய் - த்தல் | cevi-cāy-, v. intr. <>id. +. To incline one's ear ; சொல்வதைக் கேட்கச் செவிதாழ்த்தல். இகுத்த செவிசாய்த் தினியிளிப் பட்டன (கலித். 95) . |
செவிட்டாம்பாம்பு | ceviṭṭām-pāmpu, n. <>செவிடு +. See செவியான். . |
செவிட்டு 1 - தல் | ceviṭṭu-, 5 v. tr. <>சவட்டு-. To crush, destroy, kill; கொல்லுதல். (பிங்.) |
செவிட்டு 2 - தல் | ceviṭṭu-, 5 v. tr. 1. To incline to one side, as one's eyes in examining closely ; கூர்ந்துநோக்குதற்குக் கண்முதலியவற்றை ஒரு பக்கமாகச் சாய்த்தல். விசயனென்பான் வெங்கணை செவிட்டி நோக்கி. (சீவக. 2191) . |
செவிட்டு | ceviṭṭu, n. See செவிடு, 1. . |
செவிட்டுவிரியன் | ceviṭṭu-viriyaṉ, n. perh. செவிடு +. Russell's viper, Vipera russellii ; விரியன்பாம்புவகை . |
செவிடன் | ceviṭaṉ, n. <>id. [T. cevidi, K. kivada.] Deaf man ; காதுகேளாதவன். (திவா.) |
செவிடி | ceviṭi, n. [K. kivudi.] Deaf woman ; காதுகேளாதவள் . |
செவிடு 1 | ceviṭu, n. <>செவி. 1. [T. cevudu, K. kivudu, M. ceviṭu.] Deafness ; காதுகேளாமை. செவிடா யொழிகென் செவி (பு. வெ. 10, சிறப். 3). 2. Deaf person or animal ; |
செவிடு 2 | ceviṭu, n. perh. id. + அடு-. 1. Cheek ; கன்னம். உன் செவிட்டிலே அடிப்பேன். Loc. 2. An ear-ornament ; |
செவிடு 3 | ceviṭu, n. cf. சுவடு . A small measure consisting of 360 grains of paddy=1/5 ollcck ; ஆழாக்கில் ஐந்திலொன்றாகிய அளவு. (தொல். எழுத். 165, உரை) மிளகமுது இரண்டரைச் செவிடும். (S. I. I. v, 154). |
செவிடுசெல்(லு) - தல் | ceviṭu-cel-, v. intr. <>செவிடு +. See செவிடுபடு-. செவிடுசெல்லக் கிழிந்தன திசைகள் (கம்பரா. நாகபாச. 104) . . |
செவிடுபடு - தல் | ceviṭu-paṭu-, v. intr. <>id. +. [T. cevudupadu.] 1. To be deafened with noise ; சத்தமிகுதியாற் காது கேளாதுபோதல். செவி செவிடுபடுபு முடிக ளதிர (பரிபா. 2, 39). 2. See செவிடெறி-. |
செவிடெறி - தல் | ceviṭeṟi-, v. intr. <>id. +. To be stunned with deafening noise ; உரத்த சத்தத்தால் அலைவுறுதல். திசைகளோடு மலை செவிடெறிந்து (கம்பரா. நாகபாச. 61) . |
செவித்துறண்டி | cevi-t-tuṟaṇṭi, n. <>செவி +. Ear-pick ; குறும்பிவாங்கி. Loc. |
செவிதின்(னு) - தல் | cevi-tiṉ, v. tr. <>id. +. Lit., to eat the ear. to whisper ; [காதை உண்ணுதல்] இரகசியமாக ஓதுதல். (W.) |
செவிநிறக்கல் | cevi-niṟa-k-kal, n. prob. செவ்வி +. A stone ; See மாந்தளிர்க்கல். (W.) . |
செவிப்படுத்து - தல் | cevi-p-paṭuttu, v. tr. <>செவி +. To inform, as news; to whisper in one's ears, as mantras ; காதில் மெல்ல அறிவித்தல். |
செவிப்பண் | cevi-p-paṇ, n. prob. செவ்வி. +. A cane basket for kepping water-ewer ; நீர்க்கரகத்தை அடக்கிவைக்க உதவும் பிரம்புக்கூடை . (W.) |
செவிப்பறைபறை - தல் | cevi-p-paṟai-paṟai-, v. tr. <>செவி +. To mutter inaudibly, as mantras ; மந்திரமுதலியவற்றைப் பிறர் செவியிற் படாது இரகசியமாக ஓதுதல். செவிப்பறை பறைந்து ஜபிக்கிறது என் (ஈடு, 3, 5, 5) . |
செவிப்பாடு 1 | cevi-p-pāṭu, n. <>id. +. Entering the ear ; காதிற்புகுகை. (ஈடு, 9, 9, 1) . |
செவிப்பாடு 2 | cevi-p-pāṭu, n. <>செவ்வி +. Harmony, as of music ; கேள்வியின்பம். இசைக்கு எவ்வளவு செவிப்பாடுண்டு அவ்வளவும் பாதகமாம் (ஈடு, 9, 9, 1) . |
செவிப்பாம்பு | cevi-p-pāmpu, n. <>செவி +. See செவியான். Loc. . |
செவிப்புலன் | cevi-p-pulaṉ, n. <>id. +. Sense of hearing ; காதாலுணரும் ஓசையுணர்வு . |
செவிப்புற்று | cevi-p-puṟṟu, n. <>id. +. A kind of eruption about the ears ; காதுநோய் வகை . (W.) |
செவிப்பூ | cevi-p-pū, n. <>id. +. [T. cevulapuvvu.] See செவிமலர்,1. தோடே செவிப்பூவே (திவ். திருப்பா. 27) . . |
செவிப்பூரான் | cevi-p-pūrāṉ, n. <>id. +. See செவியான். (W.) . |
செவிபடுவாதம் | cevi-paṭu-vātam, n. <>id. +. Disease of the ear causing deafness ; காதுகேளாமற் செய்யும் நோய்வகை . (W.) |
செவிபிடி - த்தல் | cevi-piṭi-, v. tr. <>id. +. To seize one by the ear in token of winning, as in games ; விளையாட்டில் வெற்றிக்குறியாகத் தோற்றவன் காதைப்பிடித்தல். (W.) |