Word |
English & Tamil Meaning |
---|---|
செவிமடல் | cevi-maṭal, n. <>id. +. 1. External ear ; காதின் வெளியுறுப்பு. திருடன் அவள் செவிமடலோடு நகையை அறுத்துக்கொண்டு போய் விட்டான். 2. See செவிமலர். Loc. |
செவிமடு - த்தல் | cevi-maṭu-, v. tr.<>id. +. 1. To drink in by the ears, hear ; கேட்டல். மாருதி வினயவார்த்தை செவிமடுத் தமிழ்தின் மாந்தி (கம்பரா. விபீடண. 106) . |
செவிமத்திபம் | cevi-mattipam, n. <>id. + madhyama. See செவிமந்தம். Loc. . |
செவிமந்தம் | evi-mantam, n. <>id. +. Dullness of hearing, deafness ; காதுமந்தம். (யாழ். அக.) |
செவிமலர் | cevi-malar, n. <>id. +. 1. An ear-ornament of women; மகளிர் காதணிவகை. (சூடா.) 2. Gold or silver ears put on idols on special occasions; 3. Gold or silver ears presented as votive offerings by persons recovering from diseases of the ear; |
செவிமலர்ப்பூ | cevi-malar-p-pū, n. <>id. +. See செவிமலர், 1. . |
செவிமறை | cevi-maṟai, n. <>id. + மறு. Bull having a spot in its ears ; செவியில் மறுவையுடைய எருது. செவிமறை . . . நுண்பொறி வெள்ளை (கலித். 101) . |
செவிமாட்டு - தல் | cevi-māṭṭu-, v. tr. <>id. +. To force into one's ear ; பிறர்காதில் வலிய நுழைத்தல். கற்றன கல்லார் செவிமாட்டி (நீதிநெறி. 25) . |
செவியடி - த்தல் | cevi-y-aṭi-, v. intr.<> id. +. To flap the ears, as an elephant; சாதாட்டுதல். (W.) |
செவியடி | cevi-y-aṭi-, n. <>id. +. 1. Temple, the part about the front of the ear; காதின் அடிப்பகுதி. கண்டிடுஞ் செவியடிப்பேர் சூளிகை (சூடா. 3, 8) 2. Place where grain is temporarily stored on the threshing-floor immediately after it is threshed; |
செவியம் | ceviyam, n. See செவ்வியம். (W.) . |
செவியறிவு | cevi-y-aṟivu, n. <>செவி +. See செவியறிவுறூஉ. ஒண்பாச் செவியறி வென்றிப் பொருண்மிசை. (காரிகை. செய். 15) . . |
செவியறிவுறுத்து - தல் | cevi-y-aṟivuṟut-tu-, v. tr. <>செவியறிவு + உறுத்து-. To give advice, counsel ; நல்லறிவு புகட்டுதல். மந்திரத்தை நல்கி . . . செவியறிவுறுத்தல் செய்தான் (கந்தபு. அசுரர்யாக. 33) . |
செவியறிவுறூஉ | cevi-y-aṟivuṟūu-, n. <>id. + id. 1. Instruction in the path of virtue, given to kings, etc.; அரசர் முதலியோர்க்குச் செவிக்கண் நிற்கக்கூறும் நீதி. வாயுறைவாழ்த்தே செவியறிவுறூஉ (தொல். பொ. 423). 2. (Puṟap.) Theme of instructing the king in the path of virtue; 3. See செவியறிவுறூஉமருட்பா. (தொன். 283.) |
செவியறிவுறூஉமருட்பா | cevi-y-aṟivuṟūu-maruṭ-pā, n. <>id. + id. +. Poem in maruṭpā metre instructing to king in the path of virtue; அரசர்க்கு நீதிமுறைகளைக் கூறுவதும் மருட்பாவால் அமைந்ததுமாகிய ஒரு பிரபந்தம். (காரிகை, செய்.15, உரை) . |
செவியறை | cevi-y-aṟai, n. <>செவி+ அறு-. 1. See காதறை. (நன்.139, மயிலை.) . 2. Deaf person; |
செவியன் | ceviyaṉ, n. prob. id. [M. ceviyaṉ.] Hare ; முயல். Nā. |
செவியான் | ceviyāṉ, n. <>id. A kind of small centipede believed to get into the ears and cause pain ; காதுக்குட் சென்று துன்புறுத்தும் பூரான் வகை . |
செவியிலி | cevi-y-ili, n. <>id. +. See செவியறை. (நன். 283, மயிலை.) . |
செவியுறு - தல் | cevi-y-uṟu-, v. tr. <>id. +. To hear, listen to ; காதுகொடுத்துக்கேட்டல். யாதுமொன்று செவியுற்றிலார் (கம்பரா. நாகபாச. 68) . |
செவியுறை | cevi-y-uṟai, n.<>id. +. 1. Medicine for the ear; காதுக்கிடும் மருந்து. 2. See செவியறிவுறூஉ, 1. செவியுறைதானே, பொங்குதலின் றிப் புரையோர் நாப்ப ணவிதல் கடனெனச் செவியுறுத்தன்றே (தொல். பொ. 426). |
செவியுறையங்கதம் | cevi-y-uṟai-y-aṅkatam, n. <>செவியுறை +. A verse reproving a king for his faults with a view to reclaiming him to a sense of his duty ; அரசர்க்கு உறுதிகூறும் நோக்குடன் அறிஞர்கூறும் வசைச்செய்யுள். (தொல். பொ. 440, உரை) . |
செவியேறு | cevi-y-ēṟu-, n. <>செவி + ஏறு-. Hearsay ; கேள்வி. அவன் சொல்லக் கேட்ட செவியேற்றாலே சொல்லுகிறாளிறே (ஈடு;10, 3, 1) . |
செவிரம் | ceviram, n. prob. šaivala. A class of aquatic plant ; ஒருவகைப் பாசி. (திவா.) |
செவிலி | cevili, n. 1. See செவிலித்தாய். தாயெனப் படுவோள்செவிலி யாகும் (தொல். பொ. 124). . 2. Elder sister; |